Monday, July 23, 2018

படித்தேன் ரசித்தேன் சிரித்தேன்
முதல் 3 தோசை சாப்டுற வரைக்கும் வேணுமா வேணுமா கேட்குறாங்க அஞ்சாவது தோசை சாப்பிடும் போது போதுமா போதுமா னு கேக்குறாங்க
(ஏலே எவண்டா அது இங்கே அது கூட கிடைக்காம நாட்டில் பலர் இருக்கான்....இதுல நீ வேற குற்றம் சொல்லிகிட்டு இருக்கிரே)


மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ண விட நாக்குக்கு நயமா சமைக்கிற பெண்ணு தான் ஆண்களுக்கு தேவையாம்
( நாக்குக்கு நயமா சமைக்கிற பெண்ணுக்கு நாக்கு ரொம்ப நீளமா இருக்கும் எதுக்கும் ஜாக்கிரதை)



சுடுகாடு சுடுகாடு னு கேவலமா பேசதீங்க அங்க போறதுக்கு அவனவன் செத்துட்டு இருக்கான்
(சுடுகாடு என்று கேவலாமா சொல்லுவதட்கு பதிலாக தமிழ்நாடுன்னு மரியாதையா சொல்லுவோம் காரணம் இரண்டும் ஒன்றுதான் இந்த அதிமுக ஆட்சியில்)

ரேஷன் கார்டு photo 15 வருஷத்துக்கு முன்ன நம்ம எப்படி இருந்தோம் னு காட்டுது ஆதார் 15 வருஷத்துக்கு அப்புறம் எப்படியிருக்கோம் னு காட்டுது
(ஆனால் பேஸ்புக் புரொபைல் போட்டோவோ நாம் எப்படி இருக்க ஆசைபடுகிறோம் என்பதை காட்டுகிறது)


வீட்டுக்குள்ளே புருசனை வெளு வெளுன்னு வெளுத்தாலும் வெளியில் புருசனுக்கு பயப்படுற மாதிரி நடிக்குறதுல எங்களை அடிச்சிக்க முடியாது
(வீட்டுக்குள்ளே புருசனை வெளு வெளுன்னு வெளுக்கிறது அந்த காலம் இப்ப வெளியிலேயும்தான் வைத்து அடிக்கிறாங்க)
உப்பு திண்ணா தண்ணி குடிச்சுதான் ஆகனும் -பழமொழி
கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகனும்-பது மொழி
(தண்ணி அடிச்சா பொண்டாட்டி காலில் விழ்ந்துதான் ஆகனும் இது மதுரைத்தமிழன் மொழி)



பட்டுச்சேலை கட்டுனா எல்லா பொண்ணுக்கும் எடுப்பா தான் இருக்கும் ஆனா அதை வாங்கித்தர புருசனுக்கு தான் கடுப்பா இருக்கும்
(வாங்கிதர மட்டுமல்ல அயர்ன் பண்ணி தரவும்தான் கடுப்பா இருக்கும் )

வாலிபங்கள் ஓடும், வயதாக கூடும் ஆனாலும் பிரச்சனை குறையாதது
(ஆசைகளும் குறையாது)

நாம் அழுதால் நமக்கே பிடிக்காது நாம் கொஞ்சம் சிரித்தால் அந்த ஆண்டவனுக்கே பொருக்காது
( ஆணடவனுக்கு மட்டுமல்ல பொண்டாடிக்கும் பொருக்காது உடனே பூரிக்கட்டையை கையில் எடுத்துவிடுவார்கள்)

மாசத்துக்கு ஒரு நாள் தான் சம்பளம் தராங்க ஆனா வேலை மட்டும் தினமும் தராங்க(அந்த சம்பளம் வாங்கி பொண்டாட்டிகிட்ட கொடுத்தா அவளும் வேலை தாராங்க என்ன அநியாயம்

)
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் பொண்டாட்டிங்க திட்டியே கொல்லும்
திட்டிமட்டுமல்ல பூரிக்கட்டையால் தட்டியும் கொல்வாங்க)


கவனிக்கப்படாமல் இறந்தவர்களுக்கு செய்யும் "திதியும்" இறந்த பின் அரசாங்கம் தரும் "நிதியும்" பயனற்றது..!!
(திதியும் நிதியும் குடுமபத்திற்கு பயன் அளிக்கிறதுதானே)

வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான் வசதி இருக்கிறவன் நாய் மேய்க்கிறான
(இரண்டுக்கும் இடைப்பட்ட மிடில் க்ளாசோ இன்பாக்ஸில் மேய்கிறான்)


என்னதான் நாம வேலை வெட்டியில்லாம இருந்தாலும், நமக்கு நாமே போன் பண்ணும்போது பிஸியாதான் இருப்போம்

(ஹலோ மதுரைத்தமிழா என்ன எப்பபார்த்தாலும் போன் பண்ணினா எடுக்க மாட்டேங்கிறீங்க அதுவா நான் ரொம்ப பிஸீங்க)

யாரோ பெத்த புள்ளயை கல்யாணம் பண்ணி காலம் முழுக்க சோறு போடும் அந்த உயர்ந்த உள்ளம் தான் ஆண்
(எவண்டா இன்னும் அந்த காலத்திலே இருக்கிறது )


அதிர்ஷ்டம் ambassador ல ஏறி வந்தா பிரச்சனை Flight ஏறி வருது ச்சை
(அதிர்ஷம் காதலி வடிவில் வருகிறது என்று நினைத்து கல்யாணம் பண்ணினால் பிரச்சனை மனைவி வடிவில் வருகிறது)

கல்யாணம் ஆன பின் ஒன்னு அடி விழும் இல்ல முடி விழும் அவ்ளோதாங்க வாழ்க்கை
(தொந்தியும் விழும் பல்லும் விழும்)

----

எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருந்தா பிரஷர் வரும்னு சொல்றாங்க எதையும் சாப்பிடலைன்னா அல்சர் வரும்னு சொல்றாங்க


காந்தி நாட்டுக்காக பாடு பட்டார் நாம காந்தி நோட்டுக்காக பாடு படுறோம்


கவர்மெண்ட் Exam லட்சம் பேர் எழுதுறாங்க ஆனா லட்சம் கொடுக்குறவங்க தான் select ஆகுறாங்க


இந்த உலகத்துல நல்லவங்க கெட்டவங்கனு யாரும் இல்ல நமக்கு புடிச்சா நல்லவங்க புடிக்கலனா கெட்டவங்க

முட்டி மோதி வாழ்க்கையில முன்னேறலாம் னு பாத்தா ஒரே முட்டுல கீழே தள்ளிவிட்டுறாங்க


வாழ்க்கை சிக்கல் வந்தா நக்கலா பாத்து சிரிக்கணும் புரிதா



அன்புடன்
மதுரைத்தமிழன்
நெட்டில் படித்தை சுட்டு இங்கே மறுபதிவாக தந்து இருக்கிறேன்.. சிவப்பு எழுத்தில் இருப்பது மட்டுமே என் கருத்து... கடைசியில் 6 துணுக்குகளுக்கு மட்டும் நான் கருத்து சொல்லவில்லை...முடிந்தால் அதற்கு நீங்கள் கருத்து சொல்லிட்டு போங்க....இல்லையென்றா; கேரளா மந்திரவாதிகிட்ட  சொல்லி உங்களுக்கு பில்லி சூன்யம் வைச்சிடுவேன் அவ்வளவுதான் நான் சொல்லுவேன்

22 comments:

  1. ரசிக்க வைத்தது தமிழரே...
    சுடுகாடு-தமிழ்நாடு உண்மையே...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இது சுடுகிற உண்மைதான்

      Delete
  2. எந்தக் காலத்தில இருக்கிறீங்க ட்றுத்?:) இப்போதெல்லாம் நாக்குக்கு நயமாக சமைக்கும் ஆண்கள் தேவை எண்டெல்லோ விளம்பரம் பார்க்கிறேன்:))

    ReplyDelete
    Replies

    1. நீங்க எந்த காலத்தில் இருக்கிறீங்க இப்ப ரென்டு பேரும் நாக்கிற்கு சுவையாக எந்த ஹோட்டல் இருக்கும் என்று அல்லவா தேடுகிறார்கள்

      Delete
  3. ஹா ஹா ஹா கட்டிலுக்குக் கீழ இருந்தே யோசிச்சிருக்கிறீங்க எனப் புரியுது:)).. கொப்பி பண்ணவும் முடியல்ல, நம்பரும் போடவில்லை ஒவ்வொரு ஜோக்குக்கும் அதனால மேற்கோள் காட்டி எழுத முடியவில்லை..

    மதுரைத்தமிழன் பழமொழியும் அழகு:)..

    ReplyDelete
    Replies
    1. அடுத்த தடவை நம்பர் போடுகிறேன்....ஸ்மார்ட்டான ஆட்கள் எளிதாக காப்பி செய்யலாம் அது தெரியுமோ உங்களுக்கு

      Delete
  4. எங்கிருந்துசுட்டாலும் பொன் மொழிகள் நன் மொழிகளே

    ReplyDelete
  5. நக்கலா சிரிக்கும்போது விக்கல் வந்தா ??

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல்!! செம..

      ஆனா அந்தக் கறுப்பு எழுத்துகள் மட்டும் கடைசில எல்லாமே நல்லாருக்கு...

      கீதா

      Delete
    2. என்ன ஏஞ்சல் நக்கலா?

      Delete
    3. ப்ரியசகி அஞ்சு வாயில பஞ்சு இருக்கிற மாதிரி இரண்டு படம் போட்டு இருக்கிங்களே?

      Delete
    4. கேரளா மந்திரிவாதிதானனே ஹீஹீ அவர் துளசிசாரின் நண்பர்தான்

      Delete
  6. ஒரே முட்டுல //..இதுக்குதான் ஆடு மாடுகிட்ட சகவாசம் கூடாது .நான்லாம் முட்டி தள்ள மாட்டேன் :) ஒரு அனியன் பஜ்ஜியை போதும் :)

    ReplyDelete
  7. பிரஷரும் அல்சரும் சேர்ந்தே வந்தா ??

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹா அதே அதே

      கீதா

      Delete
  8. ஃபேஸ் புக் ப்ரொஃபைல்தான் நிஜம்

    ReplyDelete
  9. அனைத்தும் ரசித்தேன் நண்பரே...

    ReplyDelete
  10. அதேதாங்க படித்தேன்..ரசித்தேன்..சிரித்தேன்..சிரிப்பை மட்டும் நிறுத்த முடியல 👍

    ReplyDelete
  11. ஹா ஹா ஹா அனைத்தும் படித்தோம் ரசித்தோம் சிரித்தோம்..

    கீதா:.அதிரா சொல்லியிருப்பது போல் கோட் செய்ய முடியால...

    ReplyDelete
  12. சுடுகாடு சுடுகாடு னு கேவலமா பேசதீங்க அங்க போறதுக்கு அவனவன் செத்துட்டு இருக்கான்
    (சுடுகாடு என்று கேவலாமா சொல்லுவதட்கு பதிலாக தமிழ்நாடுன்னு மரியாதையா சொல்லுவோம் காரணம் இரண்டும் ஒன்றுதான் இந்த அதிமுக ஆட்சியில்)

    சிரிக்கவும் , சிந்திக்கவும்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.