இந்த பிரபஞ்சத்தை இயக்குபவர் இந்து கடவுளான விஷ்ணு அவர் தனது ஏழாவது அவதாரமாக ராம அவதாரம் எடுத்து இந்த உலகத்தில் நுழைகிறார். இந்த அவதாரம் விஷ்ணுவின் மிக முக்கியமான அவதாரமாக கருதப்படுகிறது
சொன்ன சொல்லை காப்பற்றுவதுதான் ராமயனத்தில் ராமர் நமக்கு எடுத்து சொல்லும் ஒரு முக்கியமான செய்தி. அதில் நாம் சொன்ன சொல்லை காப்பாற்ற எந்த பிரச்சனையை எதிர்கொண்டாலும் சரி என்ன விலை கொடுத்தாலும் சரி அதனை காப்பாற்ற வேண்டும் என்பதுதான். தசரதன் தனது மனைவியான கைகேயிக்கு அளித்த வாக்குறுதியை காப்பற்ற தனது மூத்த மகனான ராமரை பரத்துதான் அடுத்த மன்னர் என்று அறிவிக்க செய்து அதன் பின் வனவாசத்திற்கு காட்டுக்கு அனுப்பிவைத்தார். ராமரும் தந்தைக்கு வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து வேறு எந்த வித சிந்த்னைகளும் எழாமல் தந்தைக்கு வாக்குறிதி கொடுத்து அதன்படியே நடந்து வந்தார்
ஆனால் ராம நாமத்தை சொல்லி ராமரை பூஜிக்கும் நம்ம பாரத பிரதமர் சொன்ன வாக்குறிதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறார் அப்படிபட்டவர் நிச்சயம் ராம பக்தராக எப்படி இருக்க முடியும்
2, மனைவியிடம் விசுவாசமாக இருங்கள்.
ராமர் வனவாசம் சென்ற போது அவர் கூட சென்ற சீதாவை ராவணன் கடத்தி சென்ற போது இதயம் உடைந்த ராமர் ராவணனுடன் போர் தொடுத்து மனைவியை மீட்டு வந்தார், அப்படி மீட்டு வந்த சீதாவின் மீது சந்தேக கேள்வியை எழுப்பின போது அவரை தீக்குளிக்க செய்து மனைவி களங்கமற்றவள் என்பதை நிலை நிறுத்தி தன் வாழ்க்கை பயணத்தை அவருடன் மீண்டும் தொடங்கினார்..
ஆனால் ராம நாமத்தை சொல்லி ராமரை பூஜிக்கும் மோடியின் மனைவியை யாரும் கடத்தவில்லை அவர்தான் விட்டு சென்றார். சரி அப்படி விட்டு சென்ற அவர் ராஜ்யத்தை ஆளும் நிலைக்கு வந்த பின்னாவது கூட்டி வாழ்க்கை நடத்துவ்துதானே ராமரை பூஜ்ஜிக்கும் அவருக்கு ஒரு தகுதி ஆனால் அதிலும் ராமரின் வழியை பின்பற்றாமல் ராமரின் பக்தராக அவர் எப்படி இருக்க முடியும்
3. ஒரு மென்மையான & இரக்கமுள்ள மனித மனிதராக இருங்கள்
வனவாசம் செய்தாலும் அங்கு ராமர் மிக எளிமையான மனிதராகவே வாழ்ந்தார், தனக்கு பசித்த போது சப்ரி என்ற பெண் கடித்து சுவைத்த பழத்தை முக கோணாமல் வாங்கி தின்று தன் பசி தீர்த்தார அது போல இலங்கைக்கு பாலம் கட்டும் போது பலரும் அதற்கு உதவினார்கள் அப்போது சிறு அணிலும் அதற்கு உதவியை பார்த்த ராமர் அதை தன் கையில் எடுத்து தடவி கொடுத்தார்,மேலும் நம் வாழ்வில், நாம் ஒருபோதும் மக்களுக்கு இடையில் ஒருபோதும் பாரபட்சம் காட்டக்கூடாது அல்லது அவர்களது தோற்றத்தால் அவற்றை தீர்த்து வைக்கக் கூடாது. மேலும் விலங்குகளுக்கு நாம் காட்டுகின்ற கொடூரமும் இரக்கத்தின் செயலிலிருந்து தொலைவில் உள்ளது.
ஆனால் ராம நாமத்தை சொல்லி ராமரை பூஜிக்கும் மோடியின் செயல்களோ இதற்கு எதிர்மாறாக இருக்கிறது, மோடி மென்மையானவராக இரக்கமிக்கவராக இருப்பதற்கு பதிலாக அப்படி இருப்பது போல நடிக்கிறார். விவசாயிகள் பலர் நாடும் முழுவதும் தற்கொலை செய்த போதிலும் காவிரி பிரச்சனைகளில் விவசாயிகள் பலர் தற்கொலை செய்த போதிலும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசாத இரக்கம்ற்றவராக இருக்கிறார். அப்படிபட்ட இவர் ராம நாமத்தை சொல்லுவது மகா பாவம்
4 .நீதியின் பூர்வீகம்
தர்மத்தின் பாதையைத் தொடர்ந்து, மரியாதா புருஷோத்தம் ராமர் தனது வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் உண்மையாகவும் நேர்மையானவராகவும் எடுத்துக் கொண்டார்.
அவர் உண்மையாக வெற்றி பெற்று அரியனையில் ஏரும் போது அவர் மனைவியின் மீது சந்தேக முட்களை தூக்கி எறிந்த போது அந்த சந்தேகங்களை களைந்து அரியனையின் புனிதத்தை ராஜ்யத்தின் முன் தனது தூய்மையை நிருபிக்க கொடுரமான சோதனையான அக்னி பரிட்சையில் சீதாவை பங்கேற்க வைத்து நிருபித்து காட்டினார்
ஆனால் ராம நாமத்தை சொல்லி ராமரை பூஜிக்கும் மோடியோ இவைகளில் ஒன்றை கூட செயல்படுத்தவில்லை.. இவரது ஆட்சியில்தான் நீதியை வழ்ங்கும் நீதிபதியின் மேல் சந்தேகம் வந்தாலும் அந்த நீதிபதி தொடர்ந்து நீதி வழங்குவதற்கு பதில் அநிதி வழங்கினாலும் ராமரிம் பெய்ரால் ஆட்சி நடத்தும் மோடி மெளனம் காத்து வருகிறார்
அதுமட்டுல்ல ராம நாமத்தை சொல்லி ராமரை பூஜிக்கும் மோடியின் பக்தர்களும் மோடியை போலவே இருக்கிறார்கள். இவர்கள் ராம ராஜ்யத்தை பற்றி பேசுவது ராமருக்குதான் இழுக்கு.
ஒரு வேளை ராமர் மனித அவரதாரம் எடுத்து வந்தால் இந்த பதிவில் உள்ள படத்தில் சொல்லுவது போலத்தான் சொல்லி சென்று இருப்பார்
அன்புடன்
மதுரைத்தமிழன்
படிக்குறது ராமாயாணம், இடிக்குறது ராமர் கோவில்ன்னு சும்மாவா சொன்னாங்க.
ReplyDeleteஹீஹீ சரியாகத்தான் சொல்லுறீங்க
Deleteராமரையும் மோடியையும் ஒரெ தராசில் நிறுத்துவதைக் கண்டிக்கிறேன் ராமர் ஒரு கற்பனைகதா பாத்திரம் ஆனால் மோடியோ ரத்தமும் சதையுமாக நம் முன்னே உலவுபவர் ஒருவரோடு ஒருவரை ஒப்பிடுதல் சரியா
ReplyDeleteராமரையும் மோடியையும் ஒரே தராசில் நிறுத்தவில்லை... ராமர் பெயர் சொல்லி ஊரே ஏமாற்றுவதைத்தான் இங்கே சொல்லி இருக்கிறேன்
Deleteஎன்ன மாதிரியான சமூகத்துல சார் இருக்கோம்? எங்கள் ராமன் சம்பூகன் தலையை கொய்ததைப்போல ராமனின் தற்கால அவாதாரங்களான மோடியும் அமித் ஷாவும் லோயா போன்ற ராமரின் பக்தர்களுக்கு விரோதிகளின் எத்தனை தலைகளை தினந்தோறும் கொய்து ராமராஜ்யத்தை உங்கள் கண்முன்னே நடத்திக்காட்டுறது தெரியாம எப்ப பார்த்தாலும் மோடியவே குத்தம் சொல்லிக்கிட்டு... ச்சை.. ராமன் கூட வாலியை மறைஞ்சு நின்னுதான் தாக்கினான்.. ஆனா எங்க தலைவரு அப்படியா? என்ன சார் ஒரு நேர்மை வேணாம்?
ReplyDeleteஹாஹஹாஹா
Delete