Wednesday, April 25, 2018


ஊருக்குள்ள இப்படி பேசிக்கிதாங்க


வீடுகளில் கொள்ளை அடித்து செல்லுபவர்களை பொது மக்களே விரட்டி பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் ஆனால் நாட்டை கொள்ளை அடிக்கும் கொள்ளையர்களை அப்படி பிடிக்க முடியாது ஏனென்றால் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு இருக்கிறது


மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த ஆடியோவில் பேசியது நாந்தான் என்று நிர்மலா தேவி நேரடியாக சாட்சி சொன்னாலும் அது உண்மையில்லை என்று கோர்ட்டு சொன்னாலும் சொல்லும்


உங்கள் மீது கொலைக் குற்றம் அல்லது கிரிமினல் குற்றம் இருந்தால் வக்கிலை தேடி ஒட வேண்டாம் பிஜேபியில் சேர்ந்து ஏதாவது ஒரு தலைவராக ஆகிவிடுங்கள் அதன் பின் உங்கள் மீது உள்ள வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு நீங்கள் நிராதிபதியாகிவிடுவீர்கள்# தன் காசை செலவு செய்து பிராணவாயு வாங்கி பல உயிர்களை காப்பாற்றிய Dr.Khafeel Khan க்கு சிறை தண்டனை, விசாரணை இல்லாமல் பல மாதங்களாக சிறையில் இருக்கிறார்.
#SaveDrKhafeelKhan.


எஸ்வி சேகர் பற்றி மட்டும்  கருத்து சொன்ன ரஜினிகாந்த  ஹெச்.ராஜா கனிமொழி பற்றி சொன்னதற்கு பதில் சொல்லாமல் ஒடியதற்கு காரணம் தமிழக் சாணக்கியன் குருமுர்த்தி அதுக்கு மேல ரஜினிக்கு பேச வசனம் எழுதி கொடுக்கலைய்யாம் அதனாலதான் துண்டைக்காணும் துணியக் காணும் என்று ஒடிட்டாராம்

மோடி நினைச்சிருந்தால் இந்நேரம் ராமருக்கு கோவில் கட்டி முடித்து இருப்பார். ஆனால் அவருக்கிட்ட இப்ப இருக்கும் குழப்பம் என்னவென்றால் எத்தனை பெட் ரூம் வைச்சு கட்டுறதுன்னுதான் அதனாலதான் கட்டுவது தள்ளி போய்கிட்டு இருக்காம்




இந்துமத பக்தர்களுக்கோ  கடவுள் எழுந்தருளியிருக்கும் இடம் பள்ளியறை ஆனால் பக்தாள்ஸுக்கோ அது படுக்கையறை


அன்புடன்
மதுரைத்தமிழன்
25 Apr 2018

5 comments:

  1. நறுக்குகள்....

    தமிழா...உங்கள் நூல் வெளியீட்டு விழா குறித்து வாசித்தேன்....அழைப்பிதழ் இல்லை???

    ReplyDelete
    Replies
    1. நான் நூல் வெளியிடுகிறேனா அப்படி யார் சொன்னதது? அப்படி புத்தகம் வெளியிடும் அளவிற்கு நான் ஒன்றும் எழுதவில்லை.... என்னுடைய பதிவுகள் எல்லாம் அன்றாட நிகழ்வுகளை படித்து நையாண்டி செய்வதுதான் அதை எல்லாம் புத்தகமாக போட முடியுமா என்ன?

      Delete

  2. கோவில் என்பதால் பள்ளியறை
    எனச் சொல்லி இருந்தால் கூடுதல்
    எஃப்ஃபெக்ட் கிடைத்திருக்குமோ ?

    ReplyDelete
  3. நானும் கேள்விப்பட்டேன் உண்மைதானா ???

    ReplyDelete
  4. நறுக்குகள் நன்றாகவுள்ளன.. வாழ்த்துக்கள் நண்பரே..!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.