Sunday, April 22, 2018

பாலியல் பலாத்காரமும் புதிய சட்டமும் சொல்வது என்ன?

இந்தியாவில்  அதிக அளவில் நடை பெற்று கொண்டிருக்கும் தேசிய விளையாட்டான  பாலியல் பலத்காரத்தை ஒடுக்குவதற்கு  மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை நிறைவேற்றி ஜனாதிபதி கையெழுத்தும் வாங்கி நடை முறைக்கு வந்து இருக்கிறது,  ஐநா சபையே காரி துப்பியதற்கு அப்புறம்தான் சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்து இருக்கிறார்கள். இதற்கு நாம் நிச்சயம் மோடி அரசை பாராட்ட வேண்டும்..

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை  சட்டம் சொல்வதென்ன?

அனைத்து பாலியல் வன் கொடுமை வழக்குகள் 2 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும்


குற்றங்களும் தண்டனைகளும்

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கூட்டு வன்கொடுமை  :  தூக்கு தண்டணை

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு  வன்கொடுமை  :ஆயுள் தண்டனை

16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு  வன்கொடுமை  : முன் ஜாமின் மறுப்பு

16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு  வன்கொடுமை  :20 வருட சிறை

பாலியல் வன்கொடுமைக்கு குறைந்தபட்ச தண்டனை  : 7 வருடத்தில் இருந்து 10 வருடமாக உயர்வு


இந்த தண்டனைகளை பார்க்கும் போது மனதில் எழுவது ஏன் இவர்களுக்கு சிறை தண்டனை கொடுத்து அவர்களுக்காக நம் வரி பணத்தை செலவழிக்க வேண்டும் அதற்கு பதில் யாராக இருந்தாலும் தூக்கு தண்டனை அதுவும் பொது மக்கள் முன்னிலையில் கொடுக்க வேண்டும. வயதான பெண்களையும் இந்த மிருகங்கள் விட்டு வைப்பதில்லை அவர்களை பலாத்காரம் செய்தால் அதற்கு தண்டனை உண்டா என்றும் தெளிவாக சொல்லப்படவில்லை.  2 வயது சிறுமியை பலாத்காரம் செய்தாலும் சரி 100 வயது பாட்டியை பலாத்காரம் செய்தாலும் சரி  குற்றம் குற்றமே அதனால் எதற்கு வெவ்வேறு தண்டனை எல்லோருக்கும் ஒரே தண்டனை அதுவும் தூக்கு தண்டனை என்று அரசு சொல்லாதது ஏன்?



 இந்த சட்டத்தில்  அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் ,செலிபிரட்டிகளுக்கு   விலக்கு நிச்சயம் உண்டு அதையும் மீறி குற்றம் சுமத்தினால் இந்த் சட்டத்தில் இவர்களுக்கு விதிவிலக்கு உண்டா இல்லையா என்பது தெளிவாக குறிப்பிட படவில்லையாததால் கோர்ட் மத்திய அரசை விளக்கம் கேட்டு அதற்கு உடனடியாக பதில் பெற முடியாத நிலை நிலவும் அல்லது  பெண்கள்தான் இவர்களை பலாத்காரம் செய்து அதன் பின் குற்றம் சுமத்தி பணம் பறிக்க முயல்கிறார்கள் என்று தீர்ப்பு வழங்கப்படும்.



அதனால் பெண்களே உங்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.  உங்களுக்கு பிரச்சனை வந்தால் சட்டம் வந்து காக்கும் என நினைப்பதைவிட நீங்களே உங்களை காப்பாற்றி கொள்ள தற்காப்பு பயிற்சியை கற்றுக் கொள்ள வேண்டும் பெண்களுக்கு மனவலிமை மிக அதிகம்தான் ஆனால் உங்களை இந்த கொடிய மிருங்களிடமிருந்து பாதுகாக்க உங்கள் உடலையும் பலமாக்கி கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொறு பெண்ணும் எப்போதும் ப்ளேடு ஒன்றை வத்து கொள்ள வேணடும் அதை மிக எளிதில் எடுக்க கூடிய வண்ணம் மிக பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.. உங்களை யாராவது பாலியல் பலாத்காரம் பண்ண முயன்றால் முடிந்த வரை தப்பிக்க பாருங்கள் ஒருவேளை அப்படி முடியாவிட்டால் அந்த மிருகத்தோட ஒத்துழைப்ப்து மாதிரி நடித்து அவன் ஆண்குறியை தடவி கொடுத்து சந்தோஷப்படுத்துவது போல சில நிமிடங்கள் செய்து அதன் பின் சட்டென்று நீங்கள் மறைத்து பாதுகாப்பாக வைத்திருக்கும் பிளேடால் அவன் ஆண்குறியை அறுத்துவிடுங்கள் . அதுவும் இல்லையென்ரால் கடித்து குதறிவிடுங்கள் . ஒருவேளை அப்படியும் அதன் பின் அவன் பிழைத்து இருந்தால் ஜென்மத்திற்கும் அந்த தண்டனை போதும் அவனுக்கு..

திரெளபதியின் மானத்தை காக்க கடவுள் வந்தது போல உங்களை காப்பாற்ற கடவுள் வருவார் என்று  படித்ததை நம்பிக் கொண்டு இருக்க வேண்டாம்.. உங்களை பாலியல் பாலத்காரத்தில் இருந்து காப்பாற்றுவதற்கு எந்த மதக் கடவுளும் வரப் போவதில்லை..






Pic : courtesy : India Today. Thanks

அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. கடவுளும், சட்டமும் எதும் காப்பாத்தாது

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நாம்தான் தற்காப்புக்லையை கற்றுக் கொண்டு காப்பாற்றி கொள்ள வேண்டும்

      Delete
  2. சட்டத்தை இயற்றும் வாய்ப்பை அரசியல்வாதிக்கு கொடுக்கக்கூடாது. எப்படிலாம் தப்பிக்கலாம்ன்னு பார்த்துக்கிட்டுதான் சட்டமே போடுறாங்கன்னு நினைக்குறேன்

    ReplyDelete
  3. நம் நாட்டில்சட்டமும் ஒழுங்கும் இஷ்டத்துக்கு வளைத்துக் கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள் வழக்கு இழுத்தடிக்கப்ப்ட்டு ஆதாரங்கள் இல்லை நிரூபிக்கப் படவில்லை என்றுவிடுதலை ஆவார்க்சள் இந்த சினிசிசம் நடை முறைகளை பார்பதால் ஏற்படுவது

    ReplyDelete
    Replies

    1. தங்களுக்கு ஏற்றவாறு சட்டங்களை இயற்றிக் கொள்கிறார்கள் தலைவர்கள் அதனால் இப்போது எல்லாம் அவர்கள் சட்டத்தை வளைக்க அவசியமில்லாமல் போய்விடுகிறது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.