Monday, April 16, 2018

@avargal unmaigal
குமுதத்தில் வெளிவராத மோடியின் புதிய பயோடேட்டா

குமுதத்தில் பயோடேட்டா என்று ஒரு பக்க செய்தி  ஒன்று  நான் பள்ளி படிக்கும் பருவத்தில் வந்தது. அது இன்றும் வருகிறதா என்று தெரியவில்லை. அது இன்று ஞாபகத்திற்கு வந்ததால் அது போன்ற ஒரு பதிவுதான் இது. அதில் முதலில் சிக்கியவர் நம்ம மோடி அவர்கள்தான். இனி வரும் நாட்களில் மற்ற தலைவர்களின் பயோடேட்டாக்களும் வரும்




பயோடேட்டா

பெயர் : மோடி

வயது : என்றும் பதினாறு

தொழில் : பிரதமர்

உப தொழில் : புரோக்கர்

பொழுது போக்கு : ட்விட்டரில் பதிவுவதும் ரேடியோவில் பேசுவதும்

நம்புவது : எலக்ட்ரானிக் வோட்டிங் மிஷினை

நம்பாதது : அத்வானி போன்ற ஸ்லீப்பர் செல்களை

சிறுவயதில் விற்றது : டீ

இப்போது விற்பது : இந்திய வளங்களை

விரும்புவது : மக்களின் தேசபக்தி

விரும்பாதது : ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி

பிடித்தது : அம்பானி அதானி குடும்பங்களை

வெறுப்பது : தமிழக மக்களை

பயப்படுவது : செய்தியாளர்கள் சந்திப்பிற்கு

பேசுவது : தேச பக்தி

செய்வது : தேச தூரோகம்

அவமானப்பட்டது :  தமிழகத்தில்

எளிமைக்கு உதாரணம் : பலகோடி மதிப்புள்ள கோட் அணிவது

பிடிக்காத பெண் ; கட்டிய மனைவி

பிடித்த பெண் ; அடுத்தவன் மனைவி

மக்களிடம் சொன்னது : கறுப்பு பணம் ஒழிப்பு

மக்களுக்கு செய்தது : மக்களிடம் இருந்த பணத்தை ஒழித்தது

வாக்கு அளித்தது ; ராமருக்கு கோயில்

வாக்கு அளிக்காமல் செய்வது : வல்லபாய் படேலுக்கு பல்லாயிரக் கணக்கில் சிலை செய்வது

சமீபத்திய சாதனை : தமிழக தலை நகரத்திற்குள்ளேயே "தைரியமாக" ஹெலிகப்டரில் பயணம் செய்தது

அன்புடன்
மதுரைத்தமிழன்
16 Apr 2018

4 comments:

  1. பயலோட டேட்டா இப்பத்தான் பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. //மக்களிடம் சொன்னது: கறுப்புப்பணம் ஒழிப்பு
    மக்களுக்கு செய்தது: மக்களிடம் இருந்த பணத்தை ஒழித்தது//
    நெத்தியடி

    ReplyDelete
  3. அவரதுநடத்தை அவரின் கொள்கை பிடிப்பைக் காட்டுகிறதோ

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.