Monday, April 2, 2018

கடவுளுக்கும் நடிகர்களின் கட்ட அவுட்டிற்கும்  அப்படி என்ன போட்டி?


நடிகர்களின் கட்ட அவுட்டிற்க்கு போட்டியாக கடவுளின் சிலைகளும் போட்டி போட்டு கொண்டு வளர்கின்றன. இல்லையென்றால் நடிகர்களை கடவு
ள்களாக நினைத்து கடவுளை மறந்துவிடும் அபாயம் இருக்கிறதோ என்னவோ

ஒரு காலத்துல கடவுள் தூணிலும் இருப்பார் துருமபிலும் இருப்பார்கள் என்று நினைத்து கொண்டார்கள். ஆனால் இன்று கடவுள் மிக பிரமாண்டபமாக இருந்தால்தான் கடவுளுக்கு பவர் அதிகம் என்று மக்கள் கூட்டம் நம்பி  கொண்டிருக்கிறது..


கடவுளுக்கு மரியாதையும் பவரும் அவர் இருக்கும் இடத்தை பொருத்துதான் இருக்கிறது போல.. ஒரு வேளை பூஜைக்கு வழியின்றி பாழ்பட்டு போய் இருக்கும் கோயிலின் சாமிக்கு இருக்கும் பவரைவிட வசதியான சாமியார்களால் நடத்துபடும் கோவில் சிலைக்குதான் பவர் அதிகம் இருக்கிறது என்று மக்கள்  நினைக்க தொடங்கிவிட்டார்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்
02 Apr 2018

10 comments:

  1. நல்ல பதிவு மதுரைத் தமிழன். இந்தக் கட் அவுட் கல்சர் கேரளத்திலும் கொஞ்சம் ஊடுருவி உள்ளது.

    கடைசி பத்தியில் அந்தச் சிவப்பு வரிகளுடன் வரும் கருப்பு வரிகள் அருமை. சரிதானோ என்றும் சிந்திக்க வைக்கிறது.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. அந்த சிவப்பு வரிகள் சரிதான் என்ற மனநிலை வரக் கூடாது அப்படி வந்தால் கடவுளின் மீது உள்ள பற்றே போய்விடும் என நினைக்கிறேன் சரிதானே

      Delete
  2. ஆலயங்கள் அனைத்தும் இப்ப வியாபார தலமாகிட்டுது சகோ. சாமிகூட தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில்...

    ReplyDelete
    Replies
    1. அப்படிபட்ட தளங்களை தவிர்த்து சிறுகோயில்களில் கூட போய் பிராத்தனை செய்தால் பிரார்த்தனை பலிக்கும் என்ற மனம் நமக்கு வர வேண்டும்

      Delete
  3. நிதர்சனமான உண்மை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. இந்த நிதர்சனம் உண்மை தகர்க்கப்பட வேண்டும்

      Delete
  4. கடவுளை வைத்து தொழில் செய்ய கற்றுக்கொண்டால் பிரமாண்டம் காட்டித்தான் ஆகவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அப்படிப்பட்ட தொழிலகள் வளரநாம் அதற்கு காரணமாக இருந்துவிடக் கூடாது

      Delete
  5. பெரிய கட் அவுட் அதிகம் எதிர்பார்ப்பு போகிறபோக்கைப் பார்த்தால் மிஞ்சுவது உழக்கு கூட இருக்காட்து

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.