Friday, February 3, 2017

தமிழக கல்வியாளர்களும் கல்வித்துறையும் மட்டுமல்ல பொதுமக்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய பதிவு

இன்றைய வாழ்வில் உணவு  உடை இருப்பிடம்  கல்வி எவ்வளவு முக்கியமோ மனித வாழ்க்கைக்கு அப்படி ஒரு முக்கியம் இணையத்திற்கும் வந்துவிட்டது. இனி வருங்காலத்தில் இணைய அறிவு இல்லாமல் வாழ்வது என்பது இயலாத காரியமாகவே இருக்கும். அதனால் கல்வி கூடங்களில் நாம் எப்படி மொழி ,கணிதம் அறிவியல் பாடங்களை குழந்தைகளுக்கு கற்று தருகிறோமோ அது போல இணையம் என்பதை ஒரு பாடமாக வைத்து கற்று தர வேண்டிய அவசியம் வந்து விட்டது என்று நான் கருதுகிறேன்


இன்றைய சமுகம் மிகப் பெரிய  அளவில் இணைய மற்றும் மின்னணுத் தொழில் நுட்பச் சமுகமாகத்தான் ஆக வேண்டிய அவசியம் அதிகரித்து கொண்டே போகிறது. அதுமட்டுமல்லாமல்  இந்த இணைய மற்றும் மின்னணுத் தொழில் நுட்பங்கள் விரைவில் மாறிக்கொண்டே இருக்கின்றது ஒன்றை நாம் கற்று அதை பழகுவதற்குள் அது பழையதாக மாறி புழக்கத்தில் இருந்து மறைந்து கொண்டே இருக்கின்றன அதனால் இத்தகைய மாற்ற வேகத்தை உணர்ந்து அதற்கு ஏற்ற  இன்றியமையாத தன்மைகள் சிலவற்றையாவது நான் இனம் கண்டு வளர்த்துக் கொள்வதால்தான் எதிர்காலத்தில் நாம் மற்றவர்களுடான போட்டியில் வெற்றி பெற முடியும் உலக அளவில் இந்த மாற்றங்களை அறிந்து அதன் வேகத்துடன் மேலை நாட்டினர் மாறிக் கொண்டிருக்கையில் நாம் நாம் பின் தங்கிவிடக் கூடாது என்பதால் இணையக் கல்வி என்ற பாடத்திட்டம் மிக அவசியம்.

இங்கு நான் இணயக் கல்வி என்று சொல்லும் போது  மென்பொருள், திண்பொருள்(சாஃப்ட்வேர்/ஹார்ட்வேர்) பற்றிய டெக்னாலிஜியை பற்றி  குறிப்பிடவில்லை அதனால் விளைந்த மாற்றதில் ஏற்பட்ட பயன்பாட்டை பற்றி சொல்லுகிறேன். இந்த பயன்பாட்டை மாணவர்கள் உணர்ந்து செயல்படுத்த சில அணுகு முறைகள் தேவை . அதற்குதான் இணைய பாடத்திட்டம் தேவை


இப்படி தேவை என்றும் சொல்லும் போது அது எதற்கு என்ற கேள்வியும் எழுவது இயல்பே மேலும் இணைய பயன்பாடுதான்  அநேக பேருக்கு தெரியும் அதனால் இது தேவையா என்றும் கேள்விகளும் எழக் கூடும் அதற்கு பதில் ஆமாம் தேவைதான் காரணம் இணையப்பயன்பாடுகள் பற்றி பலருக்கு தெரிந்திருந்தாலும் அதை பயன் உள்ள முறையில் பகுத்தறிந்து பயன்படுத்த இந்த கால சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தெரியவில்லை என்பதுதான் உண்மை.


இந்த விஷயத்தை சற்று அழமாக பார்த்தால்  இன்றைய தினங்களில் இணையத்தில் பார்க்கும் படிக்கும் தகவல்கள் எல்லாம் அனைத்தும் உண்மையாக இருப்பதில்லை. இதையே 20 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தால் அதில் கிடக்கும் தகவல்கள் அனேகமாக உண்மையான தகவல்களாக இரூக்கும் ஆனால் இன்று இணையங்களில் பதியப்படும் தகவல்கள் லைக்ஸ்களுக்காகவும் வைரலாக பரவ வேண்டும் என்பதற்காகவும் உண்மைக்கு புறம்பாக எழுதப்பட்டு பதியப்படும்  தகவல்களாகவே இருக்கிறது மேலும் இணைய எழுத்துக்களில் 99.9% வெறும் அபிப்பிராயங்களாகவே இருக்கின்றன ஆழ்ந்து சிந்தித்து  உண்மையை எடுத்துரைக்கும் பதிவுகளும் குறைவாக இருப்பதால் இப்படிப்பட்ட தகவல்கள் சிந்தனை மிக்க, உண்மையை எடுத்து சொல்லும் விஷயங்களை எளிதில் மூழ்கடித்து விடுகின்றன  மேலும் இன்றைய அவசர உலகத்தில் பலரும் மேலோட்டமாகவே படித்து செல்கின்றனர் ஆழ்ந்து படித்து சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை


இதுமட்டுமல்ல இணையத்தில் தனிப்பட்ட மனித தாக்குதல் ஒரு குறிப்பிட்ட குழுவால் தொடுக்கப்பட்டு சிறுவர்கள் பெண்மணிகள் சமுக அந்தஸ்த்தில்  உள்ளவர்கள் பாதிக்கப்பட்டு மனநிலை குலைந்து போகின்றனர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மிக எளிதில் ஏமாற்றப்படுகின்றனர் புதிய ஆப்ஸ்கள்  பலவித பயன்பாடுகளை நமக்கு ஏற்படுத்தி கொடுத்தாலும் அதன் மூலமும் பல வகைகளில் ஏமாற்றப்படுவதும் நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது அரசியல் தலைவர்கள் முதல் சமுக விரோதிகள் வரை போட்டோஷாப் போன்றவைகளின் மூலம் பல தவறான தகவல்களை மக்களிடம் பரப்பு பிரச்சனை தூவு அவர்களுக்கு சாதகமாக்கி கொள்கின்றனர், இதையெல்லாம் அறியாமல் பலரும் ஏமாந்து போகின்றனர் மேலும் நாட்டின் சட்ட திட்டங்கள் தெரியாமல் பலரும் தேசத்தூரோக செயல்களிலும் ஈடுபடுகின்றனர் எதிராகவும் பேசி வருகின்றனர் இன்னும் இப்படி பல உதாரணங்களை சொல்லி வரலாம்.

ஆனால் இதற்கு எல்லாம் நல்ல முடிவு தரமான இணைய அறிவு பாடத்திட்டமே அப்படிபட்ட பாடத்திட்டம் கொண்டு வருவதால் இணையத்தில் இருக்கும் விஷயங்களின் தராதரத்தை மேலோட்டமாகக் விரைவில் கண்டுகொள்ளும் திறமை உண்டாகும்  மேலும் இணையச் சேமிப்பில் வந்தவண்ணம் இருக்கும் எழுத்துகளும் பல் ஊடகத் தகவல்களையும் நின்று நிதானமாக  முடிவெடுக்கச் சாத்தியமில்லை என்பதால் இந்த இணைய அறிவு பாடத்திட்டம் மூலம் ஒரே பார்வையில் இந்த எழுத்து நல்ல தரமுள்ளதா  மேலும் தகவல் உண்மை மற்றும் கருத்துச் சீர்மை முதலியனவற்றை கொண்டதா என்பதை இனம்காணும் திறமையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள உதவும் அப்படி அவர்கள் இதை பெரும்படி நமது கல்விதுறை மற்றும் கல்வியாளர்கள் பாடத்திட்டதை அமைத்து அதை செயல்படுத்த வேண்டும் அப்படி அவர்கள் செய்வ்தால் மாணவர்களின் சிந்தனை, தேடல், ஆய்வு முறையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டு படிப்பதைக் குறித்த கேள்விகளை முன் வைத்தல் கற்றதை கற்பதை உரசிப் பார்த்துப் படித்து தெளி நிலை அடைதல் மேலும் பல புதிய தகவல்கள் பழைய முடிவுகளை எப்படி மாற்றுகின்றன அதற்குத் தொழில் நுட்பத்தை எவ்வளவு உதவியாக ஆக்க முடியும் என்ற இத்தகைய முனைப்புடன் கூடிய தெரிவு போன்றவை  நல்ல பாதையில்  அவர்களை இட்டு செல்லும்  என்று சொல்லாம்.

இப்போது சொல்லுங்கள் தரமான இணைய அறிவு பாடத்திட்டம் எல்லா வயது மாணவர்களுக்கும் தேவையா இல்லையா என்று?

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : சமிபத்தில் தடுப்பு ஊசி போடுவது தவறு, தனிமனித தாக்குதல்கள் குறிப்பாக சிறுவர்கள் பெண்மணிகள், சமுக தளம் மூலம் ஏமாந்து வாழ்க்கையை பறி கொடுத்தல் ஆன்லைன் பேங்கிங்க் மற்றும் பல விதங்களில் பொதுமக்கள் ஏமாற்றபடுதல் தலைவர்கள் அல்லது குறிப்பிட்ட சமுகத்தினர் அல்லது குழுக்கள் மற்றவர்களை குழப்பி அதின் மூலம் பலன் பெறுதல் போன்ற செய்திகளை கேள்விபட்ட போது இதற்கெல்லாம் முடிவு சரியான இணைய அறிவு பாடத்திட்டமே என நான் உணர்ந்தேன் அதன் விளைவே இந்த பதிவு.

4 comments:

  1. நம்ப மதுரை தமிழன் வலைப்பதிவா?! இல மாறி வந்துட்டேனா?!

    ReplyDelete
  2. மதுரைத் தமிழன் மிக மிக சூப்பர் பதிவு!!! ஆம் இணையப்பாடத் திட்டம் மிக மிக அவசியம். மட்டுமல்ல அதனை மட்டுறுத்திக் கொடுத்து, தேவையான தகவல்களுக்கு ஆதாரமுள்ள நல்ல சுட்டிகள் கொடுத்து, கல்வித்துறையே நல்ல ஒரு தளம் அமைத்து அதில் தகவல்களைத் தொகுத்துக் கொடுத்து, அவற்றை மட்டும் அக்சஸ் செய்யும்படியும், வேண்டாத தளங்கள் செல்ல முடியாத அளவிற்குச் செய்து இணையக் கல்வி கொடுக்க முடியும்தானே?

    மிக மிக நல்ல ஆலோசனை! பாராட்டுகள்.

    எங்கள் இருவரின் கருத்தும்..

    ReplyDelete
  3. சமீபத்தில் என் உறவினர் ஒருவர் மொபைலில் பேங்க் கால் வர தன் பின் நம்பர் கொடுத்ததும் இவருக்கு மெசேஜ் வருது அவரது அக்கவுண்டில் இருந்து 75 ஆயிரம் வித்ட்ரா செய்ததாக....செய்த பார்ட்டி வட நாட்டுப் பார்ட்டி!!! என் உறவினர் கண் முன்னேயே சிறிது சிறிதாக அவரது அக்கவுண்டிலிருந்து 75 கே போச்!!! பேங்க் கால் என்று வந்தால் யாரும் அட்டென்ட் செய்யாமல் இருத்தல் நலம். அது எப்படிப்பட்ட காலாக இருந்தாலும் சரி..நாம் தொடரக் கூடாது. மட்டுமில்லை ஆன்லைன் பேங்கிங்கிலும் மற்றொரு உறவினர் ஏமாந்தார்.
    கீதா

    ReplyDelete
  4. சிறப்பான பதிவு. பலருக்கும் இது பற்றிய விவரங்கள் தெரிவதில்லை. சரியான நேரத்தில் சரியான பகிர்வு. அரசாங்கம் இந்த மாதிரி யோசித்தால் நல்லது!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.