ஆணவக் கொலையில் விகடனின் பங்கு
ராமதாஸின் உண்மை முகமும்.....அன்புமணியின் போலித்தனமும்
ஆணவக் கொலையில் விகடனின் பங்கு
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும் பன்றி கூ...Read more
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?தம...Read more
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும் துர்கா ஸ்டாலின் : என்னங்க நான் ...Read more
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
அவர் தந்தை ஆரம்பித்த சாதியக் கட்சியின் சார்பாகத்தான் அன்புமணி முதலமைச்சராக ஆசைப்படுகிறார் என்று கூறுகிறீர்கள். பாட்டாளி மக்கள் கட்சி ஒரு சாதி அமைப்பாக இருந்து அரசியல் இயக்கமாக மாறி இருந்தாலும் தற்போது சாதிக்கு அப்பாற்பட்டு செயல் படுவதாக முன்னிலைப்படுத்திக் கொள்ளுகிறது. யாராக இருந்தாலும் நாம் சொல்வதை பல்லாயிரம் மக்கள் கேட்பதற்கு ஒரு மேடை தேவை. இதை உருவாக்குவது ஒன்றும் ப்ளாக் ஆரம்பிப்பது போன்ற எளிதான வேலை அல்ல. கிடைத்த மேடையை பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு? அவர் சொல்வது நன்றாய்த்தான் உள்ளது. அது செயல் வடிவில் எவ்வாறு ஆகும் என்பது அவருக்கு ஒரு வாய்ப்பளித்தால் மட்டுமே தெரியும். தற்போது தமிழ்நாட்டை ஆண்டுகொண்டு இருக்கும் மற்றும் ஆண்ட கட்சிகளின் வண்டவாளம் நமக்குத்தெரியும். எனவே முன்னிலைப்படுத்தப்படும் ஒருவருக்கு முதல்வராகும் வாய்ப்பைக்கொடுப்பதில் தவறில்லை என்பது என்னுடைய கருத்து. களத்தில் இருக்கும் நபர்களில் அன்புமணியை விட தகுதியானவர் யார்? குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!!!!!
ReplyDeleteஎதை வைத்து அன்புமணியைத் தகுதியானவர் என்று சொல்கிறார்கள்? (1) அவருடைய கல்லூரியில் இலவசமாக மாணாக்கர்களைச் சேர்க்கிறார்களா? (2) மதுவை ஒழிப்போம் என்று சொல்வதன் காரணம் என்ன? கா.வெ.குரு வின் சாம்ராஜ்யம் விரிவடையவேண்டும் என்பதற்காகவா? (3) அவர் கட்சியின் கா.வெ.குரு மீது எந்த எந்த கேஸ்கள் இருக்கின்றன என்பது அன்புமணிக்குத் தெரியுமா? (4) இளவரசன்/திவ்யா திருமணத்தில், அன்புமணி எந்தவித ஸ்டாண்ட் எடுத்தார், தற்போது உடுமலைப் பேட்டை விஷயத்தில் அப்படியே மாறுபட்ட ஸ்டாண்ட் எடுக்கிறாரே அதன் காரணம் என்ன (5) மற்றவர்களை ஊழல் என்று சொல்லும் அன்புமணி, அவர் சம்பாதித்தது எல்லாம் ரியல் எஸ்டேட் தொழிலில் வந்தது என்பதன் மர்மம் என்ன (6) பிரம்மாண்டமான கூட்டங்களுக்கு எங்கிருந்து காசு வருகிறது? அதன் மர்மம் என்ன (இது எல்லோருக்கும் பொருந்தும். ஆனாலும், தான் நேர்மையானவன், வித்யாசமானவன் என்று சொல்லும் அன்புமணி இதற்கு விளக்கம் அளிக்கவேண்டாமா?
ReplyDeleteஇதுக்குப் பேசாமல், நடிகர் அஜீத்துக்கு முதல்வர் பதவி அளித்துவிடலாம். அவர் ஏற்கனவே பணக்காரர். நேர்மையானவர். கொள்ளை அடிக்க வேண்டிய அவசியமில்லை.
இவர்கள் எல்லோரும் (கூட்டத்துக்கு வந்தவர்கள் எல்லோரும்) நேர்மையானவர்களாக இருந்தால், ஐ.ஐ.டியிலும், நீதிமன்றத்திலும் தகுதிப்படிதான் நியமனம் நடைபெற வேண்டும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட போன்ற காரணத்துக்காக இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று சொன்னால் அது நியாயம். இட ஒதுக்கீட்டில் படித்த அனைவரும் அவரவர் டாக்டர் பட்டங்களைத் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அது நியாயம். தலித் என்பதால் ஏறி மிதிக்கலாம், தாங்கள் எல்லோரும் பெரிய சாதி என்று பேசும் அறியாமையை நினைத்து எரிச்சல்தான் வருகிறது.
ReplyDeleteதிரு.நெல்லைத்தமிழன் அவர்களே:
ReplyDeleteஒருவர் முதலமைச்சர் ஆகவேண்டும் என்றால் சொந்தக் காசில் கட்டிய கல்லூரியில் அனைவருக்கும் இலவசமாகக் கல்வி வழங்க வேண்டுமா?
மது பற்றி அவர் ஒவ்வொரு மேடையிலும் விரிவாக விளக்கம் அளிக்கிறார். கா.வெ.குரு தவறு செய்து இருந்தால் சட்டம் அதைப் பார்த்துக்கொள்ளும். அன்புமணி சாதி மறுப்புத் திருமனங்களுக்கு எதிரானவர் இல்லை. காதல் என்கின்ற பெயரால் திட்டமிடப்படும் ஏமாற்று வேலைகளில் தான் அவருக்கு உடன் பாடு இல்லை எனக் கூறுகிறார். அவர் சம்பாத்தியத்திற்குக் கணக்குக் காட்ட சட்டத்துக்கு அவர் கடமைப்பட்டவ்ரே. தான் சொல்ல வேண்டியதை கூட்டம் போட்டுத் தானே சொல்லவேண்டியது இருக்கிறது. அதற்கு எவ்வளவு பணம் செலவழித்தார் என்பதற்கு அவர் கணக்குக் காட்டவேண்டும். இது அனைவருக்கும் பொருந்தும். நடிகர் அஜித் முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதை யார் தடுத்தார்கள்? ரஜினியையும் தான் அனைவரும் அழைத்தார்கள். வந்தாரா? கடைசியில் விஜயகாந்த் தான் கிடைத்தார். ஏற்கனவே பணக்காரர் என்பதால் கொள்ளை அடிக்க வேண்டியதில்லை என்பது முதல்தர ஜோக். கொள்ளை அடிப்பவர் எல்லோரும் ஏழைகளா? யார் வேண்டுமானாலும் தங்களை உயர் சாதி என்று அழைத்துக்கொள்ளட்டுமே, யார் தடுத்தார்கள்?
நீங்கள் சொல்லும் குறை ஏதும் இல்லாதவர்கள் யார்? எரியும் கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி என்று தேர்ந்தெடுப்பது மட்டுமே உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை. அதற்க்கு மட்டும் நீங்கள் பதில் சொன்னால் போதும். மற்றபடி நெல்லைத்தமிழனோ அல்லது மதுரைத்தமிழனோ முதலமைச்சராக முன்னிலைப்படுத்தப்பட்டால் நான் ஓட்டளிக்கத்தயார். அந்தத் துணிச்சலும் வாய்ப்பும் உங்களுக்கு உண்டா?
மதுரை தமிழனின் ஜாதிவெறிக்கு எதிரான நல்ல பதிவு.
ReplyDeleteSUPER
ReplyDelete