உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, March 16, 2014

ஒரு நாள் செய்தியும் அதை படித்த மதுரைத்தமிழனின் ஒன்றரை வண்டி நக்கலும்
செய்தி :தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.


மதுரைத்தமிழன் : ஐயா நீங்கள் விதை போட்டு இருந்தால் இப்போது வளர்திருக்கும் அல்லவா?

செய்தி :இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் அரசு திறம்பட செயல்படவில்லை: வெங்கய்ய நாயுடு


மதுரைத்தமிழன் : ஹலோ வெங்காய நாயுடு காங்கிரஸ் அரசு எந்த விவகாரத்தில்தான் திறம்பட செயல்பட்டு இருக்கிறார்கள். நீங்கள் சொல்வதை பார்த்தால் மற்ற எல்லா விஷயங்களில் திறமையாக செயல்பட்ட மாதிரி இருக்குதே .ஆமாம் நீங்கள் காங்கிரஸாரிடம் பொட்டி வாங்கிட்டுத்தான் இப்படி பேசுறிங்களா?செய்தி :தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டியிருப்பதால் சில மூத்த தலைவர்கள் போட்டியிடவில்லை


மதுரைத்தமிழன் : ஹலோ ஞான தேசிகரே தேர்தல் நேரத்தில் மூத்த தலைவர்களை மிக கவனமாக பிரச்சாரம் பண்ண சொல்லுங்க இல்லையென்றால் பழக்க தோஷத்தில் திமுகவிற்கு பிரச்சாரம் பண்ணி விடுவார்கள்
செய்தி மு..அழகிரி ஆதரவுடன் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெறும் என்று மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜய்பிரபாகர் தெரிவித்தார்.


மதுரைத்தமிழன் : ஐயா விஜய்பிரபாகர் வருவது மக்களைவை தேர்தல் இது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அல்ல என்பதாவது நினைவு இருக்கிறதா?
செய்தி : மத்தியில் பாரதிய ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்தால் அதில் அதிமுக கூட்டணி சேரும் என்றார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.


மதுரைத்தமிழன் : மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதில் திமுக கூட்டணி சேருமே அதை சொல்லவில்லையே நீங்கள்
செய்தி : தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களைச் சந்திப்பவர் ஜெயலலிதா என திமுக பொருளாளர் மு..ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.மதுரைத்தமிழன் : அண்ணாச்சி நீங்கள் மட்டும் எப்படி? தோல்வி அடைந்த நேரத்தில்தானே மக்களை பற்றி சிந்திப்பீங்க,,,& சந்திப்பீங்கசெய்தி : தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் பா... பெரிய அளவிலான கூட்டணியை அமைத்துள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.மதுரைத்தமிழன் :தேர்தலுக்கு அப்புறம் தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் பா... பெரிய அளவிலான கூட்டணி மிகப் பெரிய தோல்வியை தழுவியது என்று சொல்ல தயாராக இருங்கள்.செய்தி :மோடியால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்: விஜயகாந்த்
மதுரைத்தமிழன் : அப்ப அவரை ஊழல் ஒழிப்பு அதிகாரியாக நியமித்துவிடலாமே
செய்தி :மக்களவைத் தேர்தல் கூட்டணி விவகாரத்தில், தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் அணுகுமுறை மிகவும் ஏமாற்றம் அளித்ததாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன் தெரிவித்தார்.


மதுரைத்தமிழன் : ஜெயலலிதா அப்படி செய்யாமல் இருந்திருந்தால் மக்களுக்கு ஏமாற்றம் அளித்தாகியிருக்குமே பரதன்செய்தி :நாடாளுமன்றத்தில் கட்சிகளின் வருகைப் பதிவு: முதலிடத்தில் அதிமுக; திமுகவுக்கு 3வது இடம்


மதுரைத்தமிழன் : நீதிமன்றத்தில் திமுக கட்சிகார்களின் வருகை அதிமுக வைவிட அதிகமாக இருந்து முதலிடத்தை பெற்று இருப்பார்கள்தானேசெய்தி ; சென்னையில் அரசு அதிகாரி போல நடித்து பெண் தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயன்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


மதுரைத்தமிழன் : தலைவர்கள் போல நடித்து மக்களை, அரசாங்க சொத்தை கொள்ளை அடிப்பவர்கள் மட்டும் போலிஸார் பாதுகாப்புடன் உலவி வருகிறார்கள்செய்தி : காங்கிரஸை யாராலும் அழிக்க முடியாது: தம்பி பவன் கல்யாணுக்கு சிரஞ்சீவி பதில்


மதுரைத்தமிழன் : ஆமாம் அது உண்மைதான் அது தானகவே தன்னை அழித்து கொள்ளும்செய்தி :கும்மிடிப்பூண்டி பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் என் பேச்சைக் கேட்கறீங்க ஆனா ஓட்டு மட்டும் போட மாட்டேங்கிறீங்கஎன்றார்.


மதுரைத்தமிழன் ;சும்மா வேடிக்கை பாக்க வந்தா டைம் பாஸ் ஆகும்னு வந்தோம் அதுக்காக நாங்க உங்க பேச்சை கேட்டு நடப்போம்னு நினைச்சிகிட்டீங்களா?செய்தி :ஆண்ட கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் இதுவரை பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை. எந்த மாற்றமும் ஏற்படவில்லை. விஜயகாந்த் பேச்சு


மதுரைத்தமிழன் : அது சரிதாங்க ஆனால் தடுமாறும் ( அதாவது தள்ளாடும் ) கட்சிமட்டும் வந்து என்ன கிழித்துவிடப் போகுதாம்.அன்புடன்
மதுரைத்தமிழன்9 comments :

 1. உண்மையைச் சொன்னமாதிரித்தான் இருக்கு
  நக்கலாகத் தெரியவில்லை
  மிகவும் ரசித்தேன்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. கேள்விகளையும் பதில்களையும் படிக்கும்போது ஜெயலலிதாவுக்கு நன்றாக ஜால்ரா போடுகிறீர்கள் என்று தெரிகிறது. அடுத்த தேர்தலில் உங்களுக்கு ADMK சீட் நிச்சயம். தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்வதைப் பார்த்தால் எல்லா கட்சிகாரர்களும் எனக்கு சீட்டு கொடுப்பாங்க....காரணம் எல்லா கட்சிகளையும் பாராட்டியும் நக்கல் அடித்தும் எழுதி இருக்கிறேன் இதில் எந்த கட்சியும் விதிவிலக்கு அல்ல.

   அடுத்ததாக நான் அமெரிக்க குடிமகனாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது அதனால் எனக்கு இந்திய குடியுரிமை கிடையாது ஒட்டு போடவும் உரிமை கிடையாது ஒரு வேளை அம்மா பிரதமராக வந்து அமெரிக்க குடிமகனும் இந்திய தேர்தலில் போட்டியிடலாம் என்று சட்டம் கொண்டு வந்தாலே ஒழிய நான் போட்டியிட முடியாது.

   Delete
 3. கலக்கல் மதுரைத் தமிழன்......

  த.ம. +1

  ReplyDelete
 4. "அவர்கள் உண்மை" உண்மையாகத்தான் இருக்கிறது! லொள்ளு இல்லாமல் அதே சமயம் நையாண்டியுடன்! அப்படித்தானே இருக்கிறார்கள்! நம்ம தலவருங்க! விஜயகாந்தின் பேச்சுக்கு மதுரைத்தமிழனின் பதில் செம நையாண்டி!

  த்.ம.

  ReplyDelete
 5. உண்மைகளைச் சொல்லிட்டு...

  "நக்கலும்" எங்கே...?

  ReplyDelete
 6. மதுரைத் தமிழனிடம் கொஞ்சம் கவனமாக இருக்கணும் ஐயா
  உண்மைகளைக் கூட இப்படி லொள்ளின் மூலம் சொல்லாமல்
  சொல்லிக் காட்டி உள்ளான் .இதுக்குத் தான் தம்பி அடிக்கடி
  பூரிக் கட்டையால வாங்கிக் கட்டுறாரோ ! உண்மையைச் சொன்னால்
  எப்படி அடி விழாமல் போகும் ? வாழ்த்துக்கள் சகோதரா அடி
  வாங்குவதற்கு அல்ல இது வேற :))))))) த .ம 6

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog