Saturday, March 15, 2014






உங்களுக்கு கல்யாணம் ஆன புதிதில் நீங்கள் சொல்வதற்கெல்லாம் உங்கள் மனைவி தலையாட்டிக் கேட்டு கொண்டே இருந்திருப்பார் ஆனால் இப்ப அப்படியெல்லாம் இல்லை என்று நினைப்பவர் நீங்கள் என்றால் மேலே தொடர்ந்து படியுங்கள்.



கல்யாணம் ஆன புதிதில் சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னா அதை கேட்டு புளித்து போனதால் அதை கேட்கமாட்டார்கள் அதனால் நாம் சொல்வதில் சில மாற்றங்கள் இருக்கனும்


உதாரணமாக


செல்லம் இன்றில் இருந்து நான் உனக்கு சமைத்து போடுகிறேன்.

வீட்டையும் நான் சுத்தம் செய்கிறேன்
துணியையும் நான் துவைத்து போடுகிறேன் என்று சொல்லிதான் பாருங்களேன் அதற்கு அவர்கள் எப்படி சரி சரியென்று சொல்லி தலையை ஆட்டுகிறார்கள் என்று..


அதுமட்டுமில்லைங்க. உன் இடுப்புக்கு ஒரு ஒட்டியாணம் தங்கத்தில் வாங்கிதறேன்
உன் அம்மா அப்பாவை நம் வீட்டோட வைத்து கொள்வோம்.

உனது மாமியார் மாமனாரை முதியோர் இல்லத்தில் விட்டுவிடுவோமா என்று கேட்டுதான் பாருங்களேன் அதற்கு கூட மறுப்பு ஏதும் சொல்லாமல் சரியென்று சொல்லுவார்கள்



இப்படியெல்லாம் செய்தால் நடக்குமா என்று கேட்பவர்களுக்கு இதில் பலதை நான் சொல்லி என் மனைவி சரியென்று தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறார். நான் என் அனுபவ உண்மைகளைத்தான் சொல்லுகிறேன்.


டிஸ்கி : சரி மக்களே நீங்கள் சொன்னால் உங்கள் மனைவி சரியென்று தலையாட்டுவார்கள் அதே மாதிரி உங்கள் மனைவி சொல்லுவதற்கெல்லாம் நீங்கள் தலையாட்டுவீர்களா என்று உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்பது எனக்கு புரிகிறது அதற்கு பதில் மனைவி சொல்வதற்கு நான் தலையாட்டவிட்டால் அதுக்கு அப்புறம் அவள் கை தானாக பூரிக்கட்டையை கொண்டு ஆடிவிடுமல்லவா?


அன்புடன்
மதுரைத்தமிழன்
15 Mar 2014

23 comments:

  1. தாய்க்குப் பின் தாரம் என்றால், என்றும் சுபம்...!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைதான்

      Delete
    2. தாய்க்குப் பின் தாரம் என்றால், சின்ன வயசில அம்மா அடிப்பாங்க, பிறகு தாரம் செம அடி அடிக்கும்.

      Delete
    3. சரியா சொன்னீங்க drogba....

      Delete
  2. மதுரைத் தமிழனை விட்டால் இப்படி ‘அரிய’ ஆலோசனைகள் சொல்வதற்கு யார் இருக்கிறார்கள்...? ஐடியால்லாம் சூப்பருங்கோ...! (இவ்வளவு பட்டும் இன்னும் பூரிக்கட்டையை மனைவி கண்ல படாம ஒளிச்சு வைக்கதில்லையா ம.த.?)

    ReplyDelete
    Replies
    1. ஒன்றா இரண்டா ஒழித்து வைப்பதற்கு?

      Delete
    2. டபுள் கராஜே பத்தவில்லை என்று கேள்விப்பட்டேன். நான் கேள்விப்பட்டது சரி தானே???

      Delete
  3. தலையாட்ட வைக்கும் தந்திரம் சூப்பர் .
    சரியான திஸ்கி

    ReplyDelete
    Replies
    1. மனைவியோ அல்லது கணவனோ அவரவர்களுக்கு ஏற்றவாறு சொன்னால்தான் சரியென்று தலையாட்டுவார்கள் இல்யென்றால் அவர்கள் நம் தலையை இல்லையென்று ஆக்கிவிடுவார்கள் தந்திரத்தை புரிந்து கொண்டீர்கள் முடிந்தால் செயல்படுத்து பாருங்கள்

      Delete
  4. அடடா மதுரைத் தமிழா! இப்படிக் கவுத்து விட்டீர்களே! "இப்படி எல்லாம் செய்தால் நடக்குமா என்று கேட்பவர்களுக்கு.......என் மனைவி சரியென்று தலைஆட்டிக் கொண்டி......"

    எல்ல யோசனையும் சொல்லிவிட்டு இப்படி கடைசியில் முததாய்ப்பாக மனைவி தலை ஆட்டிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால்....பூரிக்கட்டை அல்ல பெரிய மரக்கட்டியே வந்து விழுந்தாலும் ஆச்சரியமில்லை! (என்ன சொல்றீங்க சகோதரி..?)

    ReplyDelete
    Replies
    1. பெரிய மரக்கட்டை வந்து விழுந்தாலும் மீண்டும் விக்கிரமாதித்தனின் கதையில் வரும் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுவது போல் நான் மீண்டும் கலாய்த்து கொண்டுதான் இருப்பேன்

      Delete
  5. சிறந்த கருத்துகளை வெளிப்படுத்தும் பதிவு
    http://tamilsites.doomby.com/

    ReplyDelete
    Replies
    1. மற்றவர்களுக்கு பிடித்தை நாம் சொன்னால் யாரும் சரியென்று தலையாட்டுவார்கள் என நான் நகைச்சுவையாக சொன்னதை புரிந்து கொண்டதற்கு நன்றி

      Delete
  6. பொண்டாட்டி புராணம் போரடிக்கிறது தம்பி! வேறு டாபிக் எழுதுங்களேன்! (இப்படிச் சொல்வதற்குமுன் என் பெண்டாட்டியைக் கலந்தாலோசிக்கவில்லை என்பதை யாருக்கும் சொல்லிவிடாதீர்கள், ப்ளீஸ்!)

    ReplyDelete
    Replies
    1. 1.அண்ணா நீங்க நான் சொல்வது என் புராணம் மட்டுமே..

      2. நான் வேறு வேறு டாபிக்கைதான் எழுதிக் கொண்டிருக்கிறேன் ஆனால் நகைச்சுவையை என் புராணம் என்ற பாணியில் தர முயல்கிறேன். எனது தளத்தை தொடர்ந்து படித்து வந்தால் இது உங்களுக்கு புரியும்.

      3. உங்களுக்கு போராடிப்பதாக இருந்தால் ஸ்கிப் பண்ணி வேறு தளங்களில் வரும் நல்ல செய்திகளை படியுங்கள்

      4. யாரும் என்னை இப்படி எழுதுங்கள் அப்படி எழுதுங்கள் என்று சொல்வதை நான் கேட்பதில்லை எனக்கு என்ன எழுத தோன்றுகிறதோ அதைதான் எழுதுவேன் மற்றவர்கள் வருவதும் வாராததும் அவர்கள் அவர்கள் இஷ்டம்

      5. நான் எழுதுவது எனது பொழுது போக்கிற்காகவும் பொழுது போகாத மற்றவர்கள் வந்து படிப்பதற்காக மட்டும்தான் சமுகத்தை சீர் திருத்தவோ அல்லது தமிழை வளர்க்கவோ அல்ல


      அண்ணா இதை நான் உங்களுக்குமட்டும் சொல்லவில்லை எனது தளத்தை தொடர்பவர்கள் அனைவருக்கும் இதை சொல்லிச் செல்கிறேன் .விருப்பம் உள்ளவர்கள் மட்டும் வந்து படியுங்கள்

      Delete
  7. அருமையான யோசனைகள் மதுரைத் தமிழன்.....

    த.ம. +1

    ReplyDelete
    Replies

    1. ஹீ.ஹீ இதை செயல்படுத்தி கொண்டிருப்பதால்தான் இதை நீங்கள் அருமை என்று சொலவதாக எடுத்துக் கொள்ளலாமா வெங்கட்

      Delete
  8. +1;
    மூன்று negative வோட்டுக்கள் பார்த்தேன்; உடனே என் பிளஸ் வோட்டு!
    அது என்ன negative வோட்டு போடுவது?? பிடிக்கவில்லை என்றால் ஓடிப்போங்க!
    எழாவது ஒட்டு போட்டு மகுடம் ஏத்தியாத்ச்சு

    ReplyDelete
    Replies
    1. கடந்த முன்று ஆண்டுகளாக எழுதி வருகிறேன் மெதுவாக எனது தளம் வளர்ந்து வந்து இன்று எல்லோராலும் அறியப் பட்டு படிக்கப்படும் தளமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. தமிழ்மணம் ஒட்டு இல்லாமல்தான் எனது தளம் வளர்ந்து வந்தது அது எனது பழைய பதிவுகளை பார்த்தாலே உங்களுக்கு புரியும் அதனால் நான் தமிழ்மண ஒட்டுக்களை பற்றி கவலைப்படுவதில்லை...அந்த மகுட ஒட்டுக்களக்காவும் எழுதவில்லை. எனது தளத்திற்கு அதிகம் ஆட்கள் வரூவது கூகுல் மூலமே... அதனால் யார் பளஸ் அல்லது நெகட்டிவ் ஒட்டுப் போட்டால் கவலைபடுவதில்லை..... அதனால் உங்களுக்கு மனதில் என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள் நண்பரே..... முந்தைய கருத்தில் சொன்னது போல யார் வருகிறார்களோ வரவில்லையோ யார் படிக்கிறார்களோ படிக்கவில்லையோ அதைப்பற்றி எனக்கு துளி கூட கவலை இல்லை, நான் பதிவிடுவது எனது பொழுது போக்கிற்காகவே என்பதை மீண்டும் வலியுறுத்தி சொல்லிக் கொள்கிறேன்

      Delete
  9. இப்படிதான் உங்க வீட்டம்மாவை தலையாட்ட வச்சீங்களா!? சூப்பர்

    ReplyDelete
  10. எல்லா ஆண்களும் இப்படி இருந்துவிட்டால்
    வீடுகளில் சண்டையே வராது இல்லைங்க....

    ReplyDelete
  11. நீங்க எவ்வளவு தான் யோசிச்சு, யோசிச்சு மண்டையை காயவச்சாலும், உங்களால பூரிக் கட்டை அடியிலிருந்து தப்பிக்க முடியாது.
    (நீங்க அப்படி தப்பிச்சிட்டீங்கன்னா, அப்புறம் எங்களுக்கு எப்படி பொழுது போகும்!!!!!!!!!!!!!!!!!!)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.