உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, May 19, 2011

தமிழனுக்கும் , உடன்பிறப்புகளுக்கும் கலைஞர் எழுதிய கடிதம்


தமிழனுக்கும் , உடன்பிறப்புகளுக்கும் கலைஞர் எழுதிய கடிதம்


என் உயிருக்கும் மேலான உடன்பிறப்பே தோல்விகள் நமக்கு புதிதல்ல. அதிலிருந்து மீண்டு வந்து ஊழல் செய்வதும் நமக்கு புதிதல்ல. தமிழக மக்கள் நம் ஆட்சிக்கு முழுமையான ஆதரவுதான் தரவில்லை. அதற்க்காக இந்த பார்ப்பன பத்திரிக்கைகள் எழுதுகின்றன தமிழக மக்கள் கருணாநிதியை வெறுக்கின்றனர் என்று .அவர்கள் என்னை அப்படி வெறுத்தால் என் தொகுதியிலும் நான் தோற்றுதானே போயிருப்பேன்.இதுபோல இந்த பத்திரிக்கைகள் திரித்து எழுதுவது இன்று நேற்றல்ல என்பது உனக்கு புரிந்திருக்கும் .


இன்று இன்னொரு உண்மையை நான் உனக்கு கூறப்போகிறேன். நான் புதிய சட்டசபை கட்டியது எனக்காக அல்ல. நான் மனதுள் நேசிக்கும் அந்த அம்மையாருக்காக பார்த்து ரசித்து கட்டிய தாஜ்மாஹால். ஆனால் அந்த அம்மையாரின் பத்திரிக்கை நண்பர் அந்த அம்மையாரின் மனதை கெடுத்து பழைய இடத்துக்கே போக சதி செய்துவிட்டார்.

வெற்றி கனியை நாம் மட்டும் சுவைத்தால் மட்டும் போதாது மாற்று கட்சியினரும் வெற்றிக்கனியை சுவைக்க நாம் தோல்விக்கு தோள்தான் கொடுத்துள்ளோம்.அதுமட்டுமில்லாமல் நமது கட்சியில் எனது குடும்பத்தினருக்கே எல்லா பதவிகளையும் நான் கொடுக்கிறேன் என்று அந்த அம்மையார், விஜயகாந்த் மற்றும் அந்த பார்ப்பன பத்திரிக்கைகள் எழுதின. இந்த தடவை அந்த மாதிரி பேச்சுக்கள் ஏதும் வந்துவிடக்கூடாது என்று நமது கட்சிக்காக உழைக்கும் துரைமுருகனுக்கு திமுக கட்சியின் மிகப் பெரிய பதவியான சட்டசபை தலைவர் பதவியை கொடுக்கலாம் என்று ஆலோசித்து வருகிறேன் .ஆனால் இந்த பத்திரிக்கைகள் இன்னும் மாறாமல் கீழ்கண்டாவாரு திரித்து எழுதி வருகின்றன. அதை உன் பார்வைக்கு வைக்கிறேன்.
2011
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர்களில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ள மாட்டார் என்றும். மேலும் சட்டசபை திமுக தலைவராக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பேச்சும் அடிபடுகிறது.

1991
ல் திமுகவுக்கு மிகப் பெரிய தேர்தல் அடி விழுந்தது. அந்தத் தேர்தலில் தமிழகத்தில் கருணாநிதி, பரிதி இளம்வழுதி இரண்டு பேர் மட்டுமே திமுக சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது கருணாநிதி சட்டசபைக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை. மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்த பிறகுதான் சட்டசபைக்கு அவர் வந்தார்.

ஆனால் இப்போது திமுகவுக்கு அந்த அளவுக்கு அடி கிடைக்கவில்லை என்றாலும் அப்போது கிடைத்த பெரும் தோல்விக்குச் இணையான தோல்வியாகவே தற்போதைய வீழ்ச்சி பார்க்கப்படுகிறது. காரணம், எந்த தேமுதிகவை படு மோசமான பார்வை பார்த்ததோ திமுக, அந்தக் கட்சி இன்று திமுகவை விட மேம்பட்ட நிலையில் எதிர்க்கட்சியாகவும் மாறியுள்ளது.

இது திமுகவினரால் ஜீரணிக்க முடியாத விஷயமாகி விட்டது. ஏதோ ஜந்துவைப் போல பார்த்த தேமுதிக, இன்று எதிர்க்கட்சி அந்தஸ்துடன் கம்பீரமாக சட்டசபைக்குள் நுழைந்திருப்பது திமுகவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுமட்டடுமால்லாமல் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரை வரவழைத்து திறந்த கட்டடத்தை, பார்த்துப் பார்த்துக் கட்டிய கட்டடத்தை ஜெயலலிதா புறக்கணித்து சட்டசபையை மீண்டும் கோட்டைக்கே மாற்றுகிறார் . இதுவும் கருணாநிதி மற்றும் திமுகவினரை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது..

இதுமட்டுமால்லாமல் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கூட்டணியாக ஆளும் கூட்டணி திகழ்கிறது. வெறும் 31 இடங்கள் மட்டுமே எதிர்க்கட்சிக்குக் கிடைத்துள்ளது.

இப்படி எங்கு திரும்பினாலும் பாதகமாகவே தெரிவதால் கருணாநிதி சட்டசபைக் கூட்டங்களில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. மேலும் சட்டசபை திமுக தலைவராக மு..ஸ்டாலினும் செயல்பட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எனவே துரைமுருகனுக்கு அந்தப் பொறுப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

உடன்பிறப்பே நான் நல்லது செய்ய நினைத்தாலும் இந்த பத்திரிக்கைகள் அதை செய்யவிடாமல் தடுக்கின்றன.


நான் ஆட்சியில் இருந்த போது எப்போதும் குடும்ப பணி செய்கிறேன் என்று சொன்னார்கள் அவர்களின் பேச்சை மாற்றி காண்பிக்க இப்போது உன்னோடு சேர்ந்து பணி செய்ய தாயாரகிவிட்டேன் வரும் ஐந்து ஆண்டுகள் நான் எனது உடன் பிறப்புக்காக மட்டுமே உழைக்க போகிறேன்.அதன் பிறகுதான் எனது குடும்பம். நான் அம்மையார் மாதிரி அறிக்கை மட்டும் விட்டு ஏதோ ஒரு பங்களாவில் படுத்து கிடக்க போவதில்லை.

நமது கழக கண்மணிகள் தோல்வியை கண்டு துவண்டு விடமாட்டார்கள் . நமது கழக வரலாற்றிலே, காணாத தோல்விகளை புதிதாக ஒன்றும் இந்த கழக கண்மணிகள் காணப்போவதில்லை. ஒப்பாரி வைத்து ஓலமிடும் அளவுக்கு இந்த தோல்விகள் ஒன்றும் புதிதல்ல நமக்கு. நின்றோம் ...முயன்றோம்....தோற்றோம்! வருங்காலதில் நிற்போம்....முயல்வோம்....வெல்வோம்! திமுக கழகம் அழிந்துவிட்டது... திமுக கழகத்தை அழித்துவிட்டோம் என்று ஆனந்தக் ௬ச்சலிடும் நமது எதிரிகள் வரலாற்றை புரட்டி பார்க்க நினைவுப்படுத்துகிறேன்.

உடன்பிறப்பே! இது தோல்வியல்ல கடும் பணிச்சுமைகளுக்கு கிடைத்த தற்காலிக ஓய்வுதான்.மக்களுக்கு அயராது உழைத்துவிட்டோம் என்று நம்மை ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டனர். சிறிது காலம் இளைப்பாறி மீண்டும் மக்கள் சேவை மகேசன் சேவை என்று பணியை தொடர்வோம். ஒய்ந்து விட்ட நாம் வீழ்ந்துவிடவில்லை என்பதை நாம் இங்கே நினைவு கொள்வோம்.

நாம் ஒய்ந்திருக்கும் வேளையிலேஎதிரிகள் எள்ளி நகையாடுவார்கள், இறுமாப்பாய் பேசுவார்கள். நாம் புன்முறுவலோடு நன்முகம் காட்டி இயல்பாய் கடந்து சொல்வோம். களங்கள் பலகண்ட கழகத்திற்கு போர்க்களம் காணும் நேரம் இன்னும் இருக்கிறது. வீழ்ந்துவிட்டோம் என்று ஆர்ப்பரித்தவர்களை வெற்றி பவனியில் அரவணைக்கும் காலம் வரும். அது வரை பொறுத்திரு...
--------

இதை நகைச்சுவைக்காக தான் எழுதி இருக்கிறேன். தோல்வியில் இருப்பவர்களை புண்படுத்துவது எனது நோக்கமல்ல....

7 comments :

 1. //ஐந்து ஆண்டுகள் நான் எனது உடன் பிறப்புக்காக மட்டுமே உழைக்க போகிறேன்.//

  ஹா ஹா ஹா அருமையான காமெடி...

  ReplyDelete
 2. உடன்பிறப்பே! இது தோல்வியல்ல கடும் பணிச்சுமைகளுக்கு கிடைத்த தற்காலிக ஓய்வுதான்.மக்களுக்கு அயராது உழைத்துவிட்டோம் என்று நம்மை ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டனர். //

  சரி சரி..

  புரியுது .. :)

  ReplyDelete
 3. தோல்வியில் இருந்து மீண்டு வந்து
  ஊழல் செய்வது நமக்கு புதிதல்ல..
  அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்
  சொல்ல வேண்டியதை மஞ்சள் கோடிட்டு
  காட்டி இருப்பது இன்னும் சிறப்பு
  நல்ல இடைக்குத்துப் பதிவு
  ரசித்துப் படித்தேன்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.

  Share

  ReplyDelete
 5. தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...தருமம் மறுபடியும் வெல்லும்..

  ReplyDelete
 6. ஹா ஹா காமெடி காமெடி...
  எவ்வளவுகாலம்தான் லவ் லெட்டர் மண்ணாங்கட்டி லெட்டர் எண்டு எழுதப்போராரோ??

  நேரம் இருந்தா இங்கயும் வாங்க..
  சிறையிலிருந்து ராசா எழுதிய கடிதம்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog