Monday, May 11, 2026

 தமிழக அரசியல் நிகழ்வுகளைத் தோலுரிக்கும் "மூன்று" அப்பட்டமான அரசியல் கார்டூன்கள்!


நிஜத்தை விட நிழல் பெரிதாகத் தெரியும் இந்தக் காலத்தில், வார்த்தைகளால் சொல்ல முடியாத கசப்பான உண்மைகளை இந்த கார்ட்டூன் சித்திரங்கள் அப்பட்டமாகத் தோலுரிக்கின்றன. அதிகாரம் யாருக்காக? அரசியல் யாரால் சிதைக்கப்படுகிறது? சிரிப்பதா அல்லது இந்த அவல நிலையை எண்ணிச் சிந்திப்பதா? முடிவை உங்கள் வசமே விடுகிறேன். தமிழக அரசியலின் தற்போதைய முகத்திரையைக் கிழிக்கும் இந்த அதிரடி கார்ட்டூன்கள் இதோ உங்கள் பார்வைக்கு...


இன்று வந்த செய்தியை இப்பத்தான் பார்க்கின்றேன். 'தூயசக்தி'யும் 'தீயசக்தி'யும் கைகுலுக்கிச் சந்தித்ததாம்! எதிரும் புதிருமாக இருந்தவர்கள் இன்று கட்டிப்பிடித்துக்கொள்வதை 'அரசியல் நாகரிகம்' என்று நமக்கு பாடம் நடத்துகிறார்கள்.

கேட்கவே வேடிக்கையாக இருக்கிறது... தீயசக்தி + தூயசக்தி = பரிசுத்த சக்தியா? அல்லது இது வெறும் அதிகாரப் பசிக்காக நடத்தப்படும் ஒரு புனித நாடகமா? 

  

tamil political cartoon 2026



 நடிகரால் தொடங்கி... நடிகரால் முடியும் கதை!

தமிழக அரசியலின் ஒரு விசித்திரமான சுழற்சி இது. ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் ஒரு 'நடிகரால்' (எம்.ஜி.ஆர்) ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின் ஒரு 'நடிகையால்' (ஜெயலலிதா) இரும்புக்கரம் கொண்டு வழிநடத்தப்பட்டது. ஆனால் இன்று, அதே சினிமா பின்னணியில் இருந்து வந்த இன்னொரு 'நடிகரால்' (விஜய்) அந்தக் கட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் சூழல் உருவாகியிருப்பது காலத்தின் கோலம்! பிம்பங்களால் உருவான கோட்டை, பிம்பங்களாலேயே சிதைக்கப்படுவதை இந்த கார்ட்டூன் தத்ரூபமாகச் சித்தரிக்கிறது.

    



. கொள்கைக்காக அல்ல... 'கொள்ளை'யடிக்கவே இந்த சமாதி!

கட்சியில் இருப்பது மக்களுக்காகவோ அல்லது கொள்கைகளுக்காகவோ அல்ல; அது வெறும் 'கொள்ளை' அடிப்பது மட்டும்தான் என்பதை வேலுமணியும், சி.வி. சண்முகமும் தங்கள் செயல்களால் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடியார் ஒரு பக்கம் கண்ணீர் வடிக்க, மறுபக்கம் இவர்களே அந்த இயக்கத்திற்குச் சமாதி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். கட்சியின் அஸ்திவாரத்தை இவர்களே சிதைப்பதை விட ஒரு பெரிய துரோகம் இருக்க முடியுமா?
   


அரசியல் என்பது வெறும் சதுரங்க வேட்டை அல்ல; அது மக்களின் வாழ்வாதாரம். ஆனால் இன்று நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் ஒரு பகல் வேஷமாகத் தெரிகிறது. 

அன்புடன்
மதுரைத்தமிழன்

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.