என்னாட இது ரொம்ப அநியாயாமாக இருக்கிறது.
நான்: "ஹலோ, யாருப்பா?"
போஸ்ட்மேன்: "அண்ணே வணக்கண்ணே, போஸ்ட் ஆபீஸ்ல இருந்து போஸ்ட்மேன் பேசுறேன். உங்களுக்கு ஒரு பெர்சனல் லெட்டர் வந்திருக்குண்ணே."
நான்: "சரி தம்பி, எப்படியாச்சும் இன்னைக்குள்ள கொண்டாந்து குடுத்துருப்பா."
போஸ்ட்மேன்: "அதான்ணே போன் பண்ணினேன். பெட்ரோல் விலை விக்கிற விலையில இனிமே வண்டியெடுத்துட்டு வீட்டுக்கெல்லாம் வர முடியாதுண்ணே. நம்ம ஜீ எங்களை எல்லாம் Work From Homeனு சொல்லிட்டதால லெட்டரை நானே பிரிச்சு போன்லயே படிச்சுட்டு விவரத்தைச் சொல்லிடுறேன். 'அன்புள்ள மாமா...' அப்படின்னு ஆரம்பிக்குதுண்ணே, கேளுங்க..."
நான்: "யோவ்! அறிவிருக்காயா உனக்கு? அது என் பெர்சனல் லெட்டர்யா! நீ எப்படி பிரிக்கலாம்?"
போஸ்ட்மேன்: "என்னண்ணே நீங்க போயி... நமக்கெல்லாம் என்னண்ணே மறைவு வேண்டிக்கிடக்கு? உங்க தோழிதானே எழுதியிருக்காங்க... இருங்கண்ணே, அடுத்த வரியில 'உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்'னு உருகியிருக்காங்க, அதையும் படிச்சுடுறேன்!"
(டிஜிட்டல் இந்தியா வாழ்க! போஸ்ட்மேன் தம்பி பல்லாண்டு வாழ்க!) 🤦♂️😂
அன்புடன்
மதுரைத்தமிழன்
#DigitalIndia? #FuelPriceReality #postalproblems

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.