Friday, May 8, 2026

தமிழக அரசியல் இழுபறி: மோடிஜியின் மெய்சிலிர்க்கும் ஆனந்தம்!

   

TNPolitics | #TNElectionResults #RamanyVsRamany #NextCM #TamilNadu   #PoliticalSatire #ModiJi #PetrolPriceHike



(வீட்டில் ரமணி பேப்பரைத் பிடித்துத் தீவிரமாக ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார். மனைவி ரமணி காபியுடன் வருகிறார்)


மனைவி ரமணி: என்னங்க... காலைல இருந்து அந்தப் பேப்பரையே பார்த்துட்டு இருக்கீங்க? 234 தொகுதியில யாரு ஜெயிச்சாங்கன்னு தெரிஞ்சு போச்சுல்ல? அப்புறம் என்ன ஆராய்ச்சி?

கணவன் ரமணி: அதுதான் இல்லை ரமணி! ஜெயிச்சவங்களுக்கே இப்போ தோத்துடுவோமோன்னு பயம் வந்துடுச்சு. ஒருத்தருக்கு 108... ஒருத்தருக்கு 47... ஒருத்தருக்கு 1... ஆனா மெஜாரிட்டிக்கு 118 வேணும். கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு இடிக்கிறதே!

மனைவி ரமணி:  இதென்ன நம்ம வீட்டு பட்ஜெட் கணக்கா இடிக்கிறதுக்கு? பேசாம அந்த 10 பேரை யாருன்னு கண்டுபிடிச்சு ஒரு லெட்டர் வாங்கிட்டா முடிஞ்சுதுல்ல?

கணவன் ரமணி: அதுக்குத்தான் இப்போ தமிழ்நாடே தவம் இருக்கு. ஆனா இதையெல்லாம் விட ஒருத்தர் மட்டும் ரொம்ப குஷியா இருக்காரு ரமணி. 

மனைவி ரமணி: யாரு... நம்ம பக்கத்து வீட்டு பஞ்சாபகேசனா? அவருக்குத்தான் மத்தவங்க சண்டை போட்டா பிடிக்குமே!

கணவன் ரமணி அவரை விடப் பெரிய ஆளு... நம்ம மோடிஜி! அவரு இப்போ டெல்லியில ஜெயகணேச ஜெயகணேச ஜெயகணேச பாஹிமாம  ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ரக்ஷமாம் பாட்டுக்கு வைப் பண்ணிட்டு இருக்காரு. ஏன்னா, ஊர்ல எல்லாரும் அடுத்த சி.எம் யாரு? தளபதியா? ஸ்டாலினா? எடப்பாடியான்னு டிவி முன்னாடி உட்கார்ந்து நகம் கடிச்சிட்டு இருக்காங்க. இந்த கேப்ல அவரு பெட்ரோல் விலையையும் கேஸ் விலையையும் அப்படியே சைலண்டா ஏத்திட்டு இருக்காரு. யாரும் கேக்க மாட்டேங்குறாங்க!

மனைவி ரமணி: அடப்பாவமே! ஆமாங்க... நேத்து கூட சிலிண்டர் விலை ஏறிடுச்சுன்னு சொன்னாங்களே. நான் கூட இந்தத் தேர்தல் ரிசல்ட் டென்ஷன்ல அதை மறந்துட்டேன்.

கணவன் ரமணி: அதான் அவர் பிளான்! தம்பிங்களா... நீங்க அங்க சீட்டுக்குச் சண்டை போடுங்க, நான் இங்க ரேட்டை ஏத்திக்கிறேன்னு டெல்லியில ஆனந்தமா இருக்காரு. அந்த ட்ரம்ப் கூட இப்போ வம்பு பண்ணாம, மோடி... உங்க ஊர்ல அந்த கோட் நடிச்ச தம்பி சி.எம் ஆயிடுவாரா?ன்னு மெசேஜ் பண்றாராம். 

மனைவி ரமணி:  நிஜமாவா? ட்ரம்புக்கு வேற வேலையே இல்லையா?

கணவன் ரமணி:  உலகமே இப்போ தமிழ்நாட்டைத் தான் பார்க்குது ரமணி. அதனால மோடிஜிக்கு இப்போ ஃபுல் வெக்கேஷன். ஆனந்தம்... இது பேரானந்தம்னு பாட்டுப் பாடிட்டு சமோசா சாப்பிட்டுட்டு இருக்காரு. இப்போ அவருக்கு எந்தப் போராட்டமும் இல்ல, எந்தத் தலைவலியும் இல்ல. 

மனைவி ரமணி: அப்போ கடைசியில யாருங்க சி.எம் ஆவாங்க?

கணவன் ரமணி:  எனக்கென்னவோ பிக்பாஸ் கமல் சார் தான் வந்து யாரு எலிமினேட். யாரு வின்னர்னு சொல்லுவாருன்னு நினைக்கிறேன். அதுவரைக்கும் நாமளும் கால்குலேட்டர் வச்சுக்கிட்டு கூட்டிக் கழிக்க வேண்டியதுதான்

மனைவி ரமணி: போதும் உங்க ஆராய்ச்சி. முதல்ல போய் சிலிண்டருக்குப் பணம் கட்டிட்டு வாங்க. நீங்க இங்க அரசியல் அனலைஸ் பண்ற கேப்ல மோடிஜி இன்னும் ஒரு நூறு ரூபா ஏத்திடப் போறாரு..

கணவன் ரமணி:  ஆமா ரமணி.. நீ சொல்றதும் சரிதான். பதவி முக்கியம் இல்ல... நமக்கு பெட்ரோல் தான் முக்கியம்.


மதுரைத்தமிழன் பஞ்ச்:   தமிழ்நாட்டுல இழுபறி  தலைவர்களுக்கு அது ஒரு வெறி, ஆனா மோடிஜிக்கு  அதுதான் பேரானந்த நெறி


 




தேர்தல் முடிவுகளும்... மதுரைத்தமிழனின் மௌனமும்!   https://avargal-unmaigal.blogspot.com/2026/05/satiretamil.html





அன்புடன்
மதுரைத்தமிழன்

  • #TNPolitics | #TNElectionResults #RamanyVsRamany #NextCM #TamilNadu 

  • #PoliticalSatire #ModiJi #PetrolPriceHike #இழுபறிஅரசியல் #யாருபாஅந்த10பேரு

  • #கோட்டைசாவியார்கிட்ட #ஆனந்தம்_பேரானந்தம்  #பரிதாப_ரமணிகள் 

  • #மக்களோ_கவலை

 


Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.