விஜய் எப்படி ஜெயிச்சார்னு இப்ப ஊர்ல இருக்குற அத்தனை அரசியல் பஞ்சாயத்து பரமேஸ்வரன்களும் ஆளாளுக்கு ஒரு தியரியை கிளப்பிவிட்டுக்கிட்டு இருக்காங்க. ஆனா நாம சும்மா இருக்கலாமா? அதானால் நான் என் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ஆழமான ஆராய்ச்சியில் இறங்கினேன்.. சொல்லப்போனா இந்த விஷயத்தை சாதாரணமா விட்டுடக்கூடாதுன்னு அமெரிக்காவுல இருக்குற நம்ம நாசா விஞ்ஞானி நண்பர்கள்கிட்டயே போன் போட்டு கேட்டுட்டேன். அவங்களும் ராக்கெட் விடுற வேலையெல்லாம் அப்படியே போட்டுட்டு, ஒரு மூணு நாள் தூங்காம கண்ணு முழிச்சு ஆராய்ச்சி பண்ணி ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க. அந்த ரிப்போர்ட்டை படிச்சு பார்த்தா எனக்கே தலை சுத்திருச்சு.
அவங்க கண்டுபிடிச்ச முதல் விஷயம், நம்ம முதலமைச்சர் ஸ்டாலின் செஞ்ச அந்த இமாலய தப்புதான். அது வேற ஒன்னும் இல்ல, வைகோவை தன் பக்கம் சேர்த்துக்கிட்டது தான். வைகோவோட ராசி பத்தி தான் நமக்கு தெரியுமே, அவர் கால் வச்ச இடம் என்னைக்கு உருப்பட்டிருக்கு? இதையெல்லாம் கணக்குல எடுத்துக்காம அவரை கூட வச்சுக்கிட்டது தான் விஜய்க்கு பாதி வெற்றியை ஈஸியா தேடிக்கொடுத்திருக்குன்னு நாசா விஞ்ஞானிகள் அடிச்சு சொல்றாங்க.
அடுத்ததாக விஜய் செஞ்ச ஒரு புத்திசாலித்தனமான காரியம் என்னன்னா, தமிழருவி மணியனை தன் பக்கம் சேர்த்துக்காம விட்டதுதான். ஒருவேளை தமிழருவி மணியன் உள்ள வந்திருந்தா, வழக்கம் போல காந்தியம் பேசி கட்சியை ஒரு வழியாக்கியிருப்பார். அவரை தள்ளி வச்சதுலயே விஜய் பாதி கிணற்றை தாண்டிட்டாருன்னு அந்த ஆராய்ச்சி சொல்லுது. ஆகமொத்தம் இந்த ரெண்டு விஷயமும் தான் தவெகவோட வெற்றிக்கு அஸ்திவாரமா அமைஞ்சிருக்கு.
இதை நான் சொல்லலப்பா, அமெரிக்காவுல இருக்குற அந்த வெள்ளைக்கார விஞ்ஞானிகளே மெச்சின உண்மை இது. இதை விட வேற என்ன சாட்சி வேணும்? இதையெல்லாம் புரிஞ்சுக்காம இன்னும் சில பேர் எலக்ஷன் ரிசல்ட்டை பார்த்துட்டு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க, பாவம் அவங்க!
அன்புடன்
மதுரைத்தமிழன்

|
சித்தாந்தச் சவப்பெட்டியும்... சசிகாந்த் செந்திலின் ‘புனித’ முதுகுகுத்தலும்: காங்கிரஸின் ‘அந்தர் பல்டி’ அரசியல்!"
https://avargal-unmaigal.blogspot.com/2026/05/blog-post_09.html |
|
தமிழக அரசியல் இழுபறி: மோடிஜியின் "மெய்சிலிர்க்கும்" ஆனந்தம்!
https://avargal-unmaigal.blogspot.com/2026/05/blog-post_8.html |
அன்புடன்
மதுரைத்தமிழன்
#தவெக #நாசாஆராய்ச்சி #அப்பாவிபிளாக்கர் #விஜய்வெற்றி #அரசியல்நையாண்டி #மதுரைத்தமிழன் #TVKVetri #VijaySuccessSecret

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.