பெண்ணியம் பேசும் பெருந்தகைகளே...
கோவை நகரின் வீதிகளில் இன்னமும் அந்தப் பத்து வயது சிறுமியின் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. மனசாட்சியுள்ள மனிதர்கள் எல்லோரும் பதறிப்போய் நிற்கிறார்கள். ஆனால், நம் ஊர் பெண்ணுரிமைப் போராளிகள் மட்டும் திடீரென்று மௌன விரதத்தில் இறங்கிவிட்டார்கள்.
ஆமாங்க, நான் நம்ம வானதி சீனிவாசன், குஷ்பு, தமிழிசை மூணு பேரையும் தான் சொல்றேன். அவங்கள தப்பா நினைச்சுக்காதீங்கப்பா... அவங்க வாய்ஸ் ரொம்ப காஸ்ட்லி. அது 'திமுக' ஆட்சியில ஏதாவது நடந்தா மட்டும்தான் தானா வெளிய வரும் போல.
இதே விஷயம் மட்டும் திமுக ஆட்சியில நடந்திருந்தா இந்நேரத்துக்கு என்னவெல்லாம் நடந்திருக்கும்? மைக் முன்னாடி மல்லுக்கட்டி, வரிசையில நின்னு, கேமராவுக்கு போஸ் கொடுத்து, பெரிய தர்ம யுத்தமே நடத்தியிருப்பாங்க! ஆனா இப்ப என்னடான்னா... ஊசி போட்ட மாதிரி அப்படியே அமைதியா இருக்காங்க. நியாயத்துக்கும் தர்மத்துக்கும் கூட இப்படி "அரசியல் கட்சி" பாரபட்சம் பார்த்து பக்குவமா குரல் கொடுக்குறாங்களே... இந்த பொதுநலத்துல கலந்திருக்கற சுயநலத்தை பார்க்கும்போது அப்படியே கண்ணுல தண்ணியே வருது.
சினிமா விவகாரம், அதுவும் ஜெயம் ரவி வீட்டுப் பிரச்சினைன்னு வந்தா உடனே குதியாய் குதிக்கும் குஷ்பு அவர்களே... இந்த சிறு பெண்ணிற்கு நியாயம் கேட்க உங்க பாசக் குரல் ஏன் எழல? சினிமா கிசுகிசுவுக்கு இருக்கிற வேகம் ஒரு பிஞ்சு உயிர் போனதுக்கு இல்லையா?
"கோயம்புத்தூர் என் கோட்டை, என் ஏரியா" என்று வீறாப்பு பேசும் வானதி சீனிவாசன் அவர்களே... உங்க கோட்டையிலேயே ஒரு குழந்தையின் மரணக் குரல் கேட்கும்போது உங்களுக்கு மட்டும் எப்படிக் கேட்காமல் போனது? டெல்லி வரைக்கும் கேட்கிற உங்க சத்தம், சொந்த ஊர் குழந்தையோட அழுகுரல் முன்னாடி ஏன் அடங்கிப் போச்சு?
தினம் தினம் காலையில எந்திரிச்ச உடனே திமுக அரசை கரித்துக் கொட்டும் தமிழிசை அவர்களே... இந்தக் கொடூரச் சாவுக்குப் பின்னால இருக்கிற ஆளும் அதிகார வர்க்கத்தை கரித்துக் கொட்ட உங்களுக்கு ஏன் இப்ப தயக்கம்?
வானதி சீனிவாசனின் மௌனமும், குஷ்புவின் பாராமுகமும், தமிழிசை சௌந்தரராஜனின் அமைதியும் இங்கே எதை உணர்த்துகின்றன? பாதிக்கப்பட்ட குழந்தை எந்த ஆட்சியா இருந்தா என்ன, நியாயம் ஒன்னு தானே? ஆனா இவங்களோட ஆக்ரோஷம் கூட பார்ட்டி பார்த்துதான் வரும் போல.
பிணத்தின் மீதும் அரசியல் வண்ணம் பூசும் இந்த அவலத்தை மக்களே நீங்களே யோசித்துப் பாருங்கள்!
|
அதிகாரத்தின் நாற்காலியும் அகப்போராட்டமும் The Chair of Power and the Inner Struggle. https://avargal-unmaigal.blogspot.com/2026/05/chair-of-power-and-inner-struggle.html |
அன்புடன்,
மதுரைத்தமிழன்


0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.