Sunday, May 3, 2026

 அரியணை ஏறுவது 'அம்பாள்' அருளிலா? இல்லை 'அடிதட்டு' மக்களின் தயவிலா?  ஒரு நறுக் அரசியல் நையாண்டி!

  

#தமிழகம்2026 #அரசியல்நையாண்டி #பகுத்தறிவு #மக்கள்மகேசன் #அவர்கள்உண்மைகள் #மதுரைத்தமிழன் #தேர்தல்2026 #தமிழகஅரசியல் #விஜய் #ஸ்டாலின் #PoliticalSatire #TamilnaduPolitics2026


மதுரைத் தமிழன்:  ஏண்டா தம்பி... ஒரு நிமிஷம் நில்லு! இந்த 2026 தேர்தல்ல உங்க 'தளபதி' விஜய் ஒருவேளை ஜெயிக்காமப் போயிட்டாருன்னு வையேன்... அப்போ அவர் இத்தனை நாளா முட்டிப் போட்டு, மாலை போட்டு , யாகம் வளர்த்துக் கும்பிட்ட அந்தச் சாமிங்க எல்லாம் ஏமாத்து வேலைன்னு தானே அர்த்தம்? அவரைக் காப்பாத்தாத அந்தச் சாமிங்களுக்கு அப்புறம் எதுக்குடா அர்ச்சனை?

நண்பர்:  ஆமாண்ணே... நீங்க சொல்றது சரிதான். கும்பிட்ட தெய்வம் கைவிட்டுடுச்சுன்னு தான் ஒத்துக்கணும்!"

மதுரைத் தமிழன் : அட முட்டாள் பயலே... இங்கே தான்டா நீ கோட்டை விடுறே! ஒருவேளை விஜய் தோற்றுப்போய், எந்தச் சாமியையும் நம்பாம, சாமியே இல்லைன்னு சொல்ற கொள்கையில வந்த ஸ்டாலின் ஜெயிச்சு மறுபடியும் முதல்வர் ஆனாருன்னு வையேன்... அப்போ அது எதைடா காட்டுது? பதவிக்கு வர்றதுக்கு வானத்துல இருக்குற அந்த 'வாட்ச்மேனை' கும்பிடத் தேவையில்லை; உன் முன்னாடி 'வாக்காளர்' உருவத்துல நிக்கிறாங்களே... அந்தச் சனங்களைக் கும்பிட்டா போதும்னு தானே அர்த்தம்?

தம்பி புரிந்துகொள்... வெற்றி பெற வேண்டியது விக்ரகங்கள் அல்ல; வாக்காளர்கள்! பதவிப் பிரமாணத்தை உறுதி செய்வது பூசாரிகளின் மந்திரங்கள் அல்ல; பாமர மக்களின் வாக்குகள்! கடவுளைத் தேடி மலை ஏறுபவன் திசை தெரியாமல் தடுமாறலாம், ஆனால் மக்களைத் தேடிச் சென்று அவர்களின் கவலைகளைத் துடைப்பவன் மகுடம் சூடுவான். வெற்றிக்குத் தேவை விபூதி அல்ல... விவேகம்! தேவை சாமி தரிசனம் அல்ல... சாமானியனின் தரிசனம்!"

நண்பர்: "ஙே...!!"  

 
மதுரைத்தமிழனின் 'நச்'  கமெண்ட் 


"சாமிக்குத் தேர்தல் கமிஷன்ல ஓட்டு கிடையாது தம்பி! பூத்துக்குப் போய் பட்டன் அமுக்குற சாமானியனுக்குத் தான் இங்கே பவர்! அதை நம்புறவன் ஜெயிப்பான், வானத்தைப் பாக்குறவன் முழிப்பான்!"


யோசிப்போம்... பிறகு பேசுவோம்.


 

தமிழ்நாடு தேர்தல் 2026  ஊடகங்களின் 'ஆருட' அரசியலும், மக்கள் என்னும் புதிரும்! 
https://avargal-unmaigal.blogspot.com/2026/05/2026-satirepolitics.html


 




ராஜதந்திரச் சதுரங்கம்: பிரிக்ஸ் மேடையில் இந்தியா... மகுடம் சூடியதா? அம்மணமாகி மௌனம் சாதித்ததா?  https://avargal-unmaigal.blogspot.com/2026/05/blog-post.html



டிஸ்கி : வாரநாட்களில் பிஸியாக இருப்பதால் வார இறுதியில்தான் பதிவுகள் போட நேரம் கிடைக்கிறது. அதனால் ஒரே நாளில் பல பதிவுகள் சிறிது இடைவெளிவிட்டு வரும்.. அம்புட்டுதான்



அன்புடன்,
மதுரை தமிழன்




#தமிழகம்2026 #அரசியல்நையாண்டி #பகுத்தறிவு #மக்கள்மகேசன் #அவர்கள்உண்மைகள் #மதுரைத்தமிழன் #தேர்தல்2026 #தமிழகஅரசியல் #விஜய் #ஸ்டாலின் #PoliticalSatire #TamilnaduPolitics2026

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.