Friday, May 8, 2026

  தேர்தல் முடிவுகளும்... மதுரைத்தமிழனின் மௌனமும்!

#சரத்குமார் #அரசியல்நையாண்டி #மதுரைத்தமிழன் #தமிழ்நாடுஅரசியல் #தேர்தல்முடிவுகள் #சரத்குமார்150 #கூட்டணிக்குழப்பம் #அவர்கள்உண்மைகள் #SatireTamil


நண்பர் : அரசியல் நையாண்டி பதிவுகள் போடும் மதுரைத்தமிழனுக்கு என்னாச்சு? தமிழக தேர்தல் ரிசல்ட்  பார்த்து டயர்ட் ஆயிட்டீங்களா? ஒரு பதிவு கூட காணோம்?

மதுரைத்தமிழன்: ரிசல்ட் முக்கியம் இல்ல தம்பி, எங்க தலைவரோட அனாலிசிஸ் தான் முக்கியம். அவர் இன்னும் இந்தத் தேர்தலை ஏத்துக்கிட்டாரா இல்லையான்னே தெரியல. அவர் ஒரு முடிவுக்கு வந்தாதான் நான் ஒரு முடிவுக்கு வர முடியும்.

நண்பர் : யாருப்பா உங்க தலைவர்? இவ்வளவு விசுவாசமா இருக்கீங்க?

மதுரைத்தமிழன்: அது நம்ம அண்ணன் சரத்குமார்தான்.  காலையில ஒரு கட்சி, சாயந்திரம் ஒரு கூட்டணினு இல்லாம, எப்போவுமே "ஃபுல் கன்பியூஷன்" மோட்ல இருக்குற அவரே அமைதியா இருக்கும்போது, நான் அவசரப்பட்டு பதிவு போட்டுட்டா அப்புறம் வருங்கால முதல்வர் கோவிச்சுக்க மாட்டாரா? அதுவுமில்லாம 150 வருஷம் வாழப்போறவருக்கு இருக்குற நிதானம் நமக்கு வேண்டாமா?





இன்பாக்ஸில் நண்பர் ஒருவர்,  நான் பதிவுகள் ஏதும் போடாதது பற்றி விசாரித்து அதன் பின் நடந்த உரையாடலின் ஒரு பகுதிதான் இந்த  நையாண்டி பதிவு

 

அன்புடன்
மதுரைத்தமிழன் 


#சரத்குமார் #அரசியல்நையாண்டி #மதுரைத்தமிழன் #தமிழ்நாடுஅரசியல் #தேர்தல்முடிவுகள் #சரத்குமார்150 #கூட்டணிக்குழப்பம் #அவர்கள்உண்மைகள் #SatireTamil

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.