Thursday, May 14, 2026

 ஸ்டாலின்: சொல்லில் வீரரா? செயலில் வீரரா?
    

#PoliticalSatire,cartoon,political,Tvk,dmk,Stalin,vijay,Tamilnadu,#கனிமொழிக்கோ,politics,MaduraiThamizhan




தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கின்றேன். வெற்றி கிடைக்கும்போது அதன் பெருமையை ஏற்றுக்கொள்கின்ற நான், தோல்வி ஏற்படும்போதும் அதற்கான பொறுப்பை ஏற்பதுதான் நியாயம். அதில் எந்த தவறும் இல்லை."

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
(தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து...)


தி.மு.க. தலைவரின் இந்த அறிக்கை குறித்து மதுரைத்தமிழனின் விமர்சனம் 

சாதாரணமாக ஒரு விபத்து நடந்தால் ஓட்டுநர் பொறுப்பேற்றுக்கொண்டு சிறைக்குப் போவார். ஒரு அலுவலகத்தில் தவறு நடந்தால் அதிகாரி பொறுப்பேற்றுக்கொண்டு பதவியை விடுவார். ஆனால் அரசியலில் மட்டும், “நான்தான் பொறுப்பு” என்று சொன்னாலே அந்தத் தவறு காணாமல் போய்விடும் என்பது ஒரு வினோதமான பகுத்தறிவு!

வெற்றி வரும்போது மாலையும் மரியாதையும் ஒருவருக்கே சேரவேண்டும் என்றால், தோல்வி வரும்போது அந்தப் பதவியின் நாற்காலியும் ஒருவரை விட்டு நகரத்தானே வேண்டும்? “தோல்விக்கு நான் பொறுப்பு, ஆனால் நாற்காலிக்கு நானேதான் தலைவர்” என்பது எந்த ஊர் நியாயம் ஸ்டாலின் அவர்களே?

விஜய் கட்சித் தொண்டர்களை ‘அறிவில்லாதவர்கள்’ என்று விமர்சிக்கும் திராவிட உடன்பிறப்புகள், தங்கள் தலைவரின் இந்த ‘பெயரளவு பொறுப்பை’ மட்டும் எப்படிக் கொண்டாடுகிறார்கள்? நிஜமாகவே பொறுப்பேற்பதாக இருந்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு #கனிமொழிக்கோ அல்லது கட்சியில் உழைத்த வேறு ஒருவருக்கோ அந்த இடத்தை விட்டுக் கொடுப்பதுதானே முறையாக இருக்கும்?

அதைச் செய்யாமல், வெறும் வார்த்தைகளில் மட்டும் ‘பொறுப்பு’ என்று விளையாடுவது மக்களை ஏமாற்றும் வெறும் வித்தை. பதவியைத் துறக்காத இந்த ‘பொறுப்பேற்பு’ ஒரு வேடிக்கையான நாடகம். இதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் கைதட்டுபவர்களைப் பார்த்தால், அவர்கள் ‘பகுத்தறிவு’ பேசும் தற்குறிகளா என்ற சந்தேகம் வருவதைத் என்னால் தவிர்க்க முடியவில்லை!

“பொறுப்பு என்பது பதவியில் அமர்வதல்ல... பதவியை விலகுவதே உண்மையான நேர்மை!”



அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.