Wednesday, May 3, 2023

 வாயை மூடங்கள் !!!

 

@avargal unmaigal



வீடு வாங்குகிறீர்களா?
வாயை மூடங்கள்

புதிய கார் ஒன்றை வாங்குகிறீர்களா?
வாயை மூடங்கள்

திருமணம் கூடி வரப் போகிறதா ?
வாயை மூடங்கள்

விடுமுறைக்குச்  சுற்றுலா போகப் போகிறீர்களா?
வாயை மூடங்கள்

ஒரு புதிய படிப்பைப் படிக்கப் போகிறீர்களா?
வாயை மூடங்கள்

பதவி உயர்வு கிடைக்கப் போகிறதா?
வாயை மூடங்கள்

 
@avargal unmaigal


99% நேரம் நமது கனவுகள்/தரிசனங்கள் நிஜமாகாமல் இருப்பதற்குக் காரணம், தவறான நேரத்தில் தவறான நபர்களிடம் நாம் விரைவில் வாய் திறப்பதுதான்.

"நண்பர்கள்" என்று கூறும் நபர்களுடன் உங்கள் திட்டங்கள்/வெற்றிகளைப் பகிர்வது தவறு.


அப்படிப் பகிர்வது  என்பது பொறாமையும் கீழ்த்தரமான பொறாமையும் உள்ளவர்களுக்கு  நாமே தீணியைப் போடுவது போலத்தான் அதுவே சில சமயங்களில்  நமக்கு நடக்க வேண்டியவைகள் நடக்காமல் போவதற்கும் ஒரு காரணமாக இருக்கும்

அதனாலாவது வாயை மூடி இருங்கள்




உங்கள் "நண்பர்களில்" பெரும்பான்மையானவர்கள், நீங்கள் சிறப்பாகச் செயல்படுவதைக் காண விரும்புகிறார்கள் ஆனால் அவர்களை விட ஒருபோதும் சிறப்பாக  இருக்க அவர்களின் மனது இடங்கொடுக்காது !

நமது சகோதர சகோதரிகளிடம் கூட இப்படி ஒரு பொறாமை இருக்கலாம்


ஆனால், கடவுள் உங்களுக்காக வைத்திருப்பதை அவர்களால் தடுக்க முடியாது!

புத்திசாலித்தனமாக இருங்கள்,  ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் மீன்  வாயை மூடினால் மீனவனின் கொக்கி அதைப் பிடிக்காது.

இந்த ஒரு வரி  போதும் புத்திசாலிகள் புரிந்து கொள்ள


அன்புடன்
மதுரைத்தமிழன்

03 May 2023

5 comments:

  1. சிறப்பான கருத்து

    ReplyDelete
  2. நல்ல கருத்து . வாய் மூடி இருப்பது நலமே!

    ReplyDelete
  3. நல்ல கருத்து. நன்றி

    ReplyDelete
  4. உன்மை, அருமை பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.