Sunday, May 28, 2023

 புதிய பாராளுமன்ற திறப்பு விழாவும் கெட்ட சகுனமும் நாட்டிற்குக் கொடுக்கும் எச்சரிக்கை மணியா?

 

avargal unmaigalதகவல் 1 : சகுனங்கள் பார்த்துச் செயல்படும் ஒரு சமுகத்தில் புதிய பாராளுமன்ற திறப்பு விழா அன்று நில அதிர்வு ஏற்படுவது என்பது நல்ல அறிகுறியே இலைதானே மோடிக்கும் நல்லதல்ல.  சமுகத்திற்கும் ஒரு நல்ல அறிகுறியாகப்படவில்லை

அருங்காட்சியகத்தில் வைத்த செங்கோலை  மக்களவையில் கொண்டு வைக்க அறிவுரை சொன்னவர் யார்?

அவர் யாராக இருந்தாலும் மோடியின் அழிவிற்கு வழி வகுத்தவராகத்தான் வரலாற்றில் கருதப்படுவார்

அதுமட்டுமல்ல கைம்பெண்ணை  வைத்து திறப்புவிழா நடத்துவது சாஸ்திர விரோதம் என்றும் மீறினால் பதவிக்கு ஆபத்து என்றும் ஆடிட்டர் மூலம் எச்சரித்துத் தடுத்து நிறுத்திய மடம் இந்த கெட்ட சகுனமான  நில அதிர்விற்குப் பரிகாரம் ஏதும் சொல்லவில்லையா?


எனது அரசியல் நையாண்டி பதிவுகள் பிடிக்காதவர்களுக்கு


  
avargal unmaigalதகவல் 2 : மிகச்சிறந்த கட்டிடக்கலை அதிசயங்களில் பெரும்பாலானவை கல்லறைகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளன.  இந்தியாவின் புதிய பாராளுமன்றம் ஜனநாயகத்தைக் கொன்று புதைத்து அதன் மேல் கட்டப்பட்ட கல்லறையாகத்தான் இருக்கிறது


ஜனநாயகம் புதைக்கப்பட்ட மயானத்தில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது
   

      avargal unmaigalதகவல் 3 :  

திறப்பது பெரிய விஷயம் அல்ல. திறந்த பின் அங்குச் சிறப்பாகச் செயல்படுவதுதான் முக்கியம்

இது பொலிடிக்கல் பதிவு அல்ல.

புதிய பாராளுமன்ற திறப்புவிழாவிற்கும் இந்த பதிவிற்கும் சம்பந்தமில்லை.. இது புது ஸ்கர்ட் அறிமுகத்திற்கான பதிவு

   
avargal unmaigalதகவல் 4  :பாராளுமன்ற பிஜேபி உறுப்பினர்களுக்கு நமது பாரத பிரதமரால் கட்டப்பட்டு இருக்கும் புதிய பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின்  இருக்கைகளுக்கு எதிரே உறுப்பினர்கள் பயன்பாட்டிற்கு என லேப்டாப் வைக்கப்பட்டு இருக்கிறது

 இதில் பாராளுமன்றத்தில்  நடக்கும் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை அறிந்து கொள்வதற்காகத்தான் வைக்கப்பட்டு இருக்கிறது.  அதில் நமது கட்சி உறுப்பினர்கள் பாலியல் காட்சிகளைப் பார்ப்பதற்குக் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது . இது கண்ணியக்குறைவை பொதுவெளியில் நம் கட்சிக்கு ஏற்படுத்தும் என்பதால் இதற்கு பாஜக் கட்சித் தலைமை இதற்குத் தடை விதிக்கிறது.

ஜெய்ஹிந்த் பாரத மாதாகீ ஜெய்தகவல் 5 : புதிய பாராளுமன்றத்தின் திறப்பின் போது ஜனாதிபதி மட்டுமல்ல, அரசியலமைப்பு கூட இல்லை இருந்ததெல்லாம் மத அமைப்பு மட்டும்தான்


தகவல்  6 : அண்ணாவிற்கு, நேருவிற்கு இறுதி ஊர்வலத்தில் கூடிய கூட்டம் போல மோடிக்கு எல்லாம் கூட்டம் வராது என்றேன் என் சங்கி நண்பனிடம்.

அதற்கு அவன் அதை விடக் கூட்டம் அதிகம் வரும் என்றான்..

உடனே நான் முடிந்தால் மோடியை உடனே சாகச் சொல் கூட்டம் வருதா இல்லையாண்னு பார்த்துடுவோம் என்றேன்..

அவ்வளவுதான் என்னை ப்ளாக் செய்துவிட்டு போய்விட்டான் ஹீஹீ சங்கிகளை நாம் ப்ளாக் செய்ய வேண்டாம் நாம் கொடுக்கும் பதிலால் அவனே நம்மை ப்ளாக் செய்துவிட்டு ஒடிவிடுவான் இது அனுபவத்தில் நான் கற்றுக் கொண்டது
தாடிஜி சமத்துவம் காப்பதில் மிகக் கவனம் செல்லுத்துவார் .அதனால்தான் பாராளுமன்ற திறப்பு விழாவிற்குச் சைவ மடாதிபதிகளையும். கோயில் திறப்பு விழாவிற்கு  வைணவ மடாதிபதிகளையும் அதாவது அவாளையும் ரிசர்வ் செய்து வைத்து இருக்கிறார்


அன்புடன்
மதுரைத்தமிழன்


1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.