Tuesday, May 16, 2023

 கள்ளச் சாராய மரணங்கள் நடக்காமலிருந்திருந்தால்?? பாஜக தமிழகத்தை ஆட்சி செய்து இருந்தால்??


 

@avargal unmaigal



தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக நடந்த கள்ளச்சாராய சோதனையில் 1558 பேர் தைது செய்யப்பட்டு 19028 லிட்டர் கள்ளச் சாராயம் கைப்பற்றப்பட்டதாக தமிழக டிஜிபி சைலேந்திட பாபி செய்தியாளர்களிடம் பேசியதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன

கடந்த  2 நாட்களில் இத்தனை பேர்  கைது என்றால் , எந்தளவிற்குக்  கள்ளச் சாராயம்  தயாரித்து இருப்பார்கள் என்று யோசித்தால்  அது ஆறாகத்தான் தமிழகத்தில் ஒடி இருக்கிறது என்று சொல்லலாம்.

கடந்த  ஒரு சில வாரங்களுக்கு முன்பாக செந்தில் பாலாஜி டாஸ்மாக் கடைகளில் 500 கடைகளை மூடப் போவதாக அறிவித்து இருந்தார். ஒரு வேளை அவருக்கு இந்த கள்ளச்சாராய வியாபாரம் தெரிந்து  இருந்ததால்தான் இதை அடைக்க முன் வந்திருக்கிறாரோ என்னவோ என்று யோசிக்கத் தோன்றுகிறது...

டாஸ்மாக்கில் சரக்கு விற்றால் அரசுக்கு வருமானம் கள்ளச்சாராயம் விற்றால் ஆட்சியில் இருப்பவர்களுக்கு வருமானம் அடப் போடா மாதவா

இந்த கள்ளச் சாராய மரணங்கள் மட்டும் நடவாமல் இருந்து இருந்தால் இவை எல்லாம் வெளியே தெரியாமலேயே போய் இருந்திருக்குமோ என்னவோ
   

  

@avaragal unmaigal



திராவிட ஆட்சிக்குப் பதில் பாஜக ஆட்சி செய்து இருந்தால்  கள்ளச்சாராயம் குடிப்பவர்களுக்குப் பதிலாகக் கோமியம் குடிப்பவர்களின் எண்ணிக்கை வேண்டுமானால் அதிகரித்து இருக்கலாம் .........

கோமியம் குடிப்பவர்களுக்கு மூளை இல்லாமல் இருக்கலாம் ஆனால் உயிர் நிச்சயமாக இருக்கும் ....

திமுக  ஆட்சியில் முதல் ஆண்டில் பலரும் ஆஹா  ஓகோ என பாராட்டினார்கள் சிஸ்டம் சரியாடுச்சு என்று சந்தோஷப்பட்டார்கள்.. அந்த சமயத்தி நான் பாராட்டாமல் அமைதி காத்தேன் காரணம் எனக்கு தெரியும் புது துடைப்பம் நன்றாக பெருக்கும் என்று......


அன்புடன்
மதுரைத்தமிழன்


16 May 2023

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.