Friday, May 12, 2023


 பார்வைகள் பலவிதம் அதில் என் பார்வை ஒரு விதம் பி.டி.ஆர் பழனிவேல்ராஜன்  பற்றி ஒரு  சிறு அலசல்
  

 

@avargal unmaigal



பி.டி.ஆர் பழனிவேல்ராஜனின் குடும்பம் பெருமை மிக்க குடும்பம் அவர் மேலை நாட்டு பல்கலைகழக்கத்தில் படித்த படிப்பு மிகச் சிறப்பானது  அந்த படிப்பு பிரதமர் படித்த எண்டையர் பொலிடிக்கல் சயன்ஸ் மாதிரி அல்ல .அவர் மேலை நாட்டில் பெரிய நிறுவனத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றி உள்ளார்  பிடிஆர் என்கிற ஒற்றை மனிதரின் தைரியம், நேர்மை அவரின்  திற்மை. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.


அவரது குடும்ப செல்வாக்கும் படித்த படிப்பும் தான் அவருக்குத் தமிழக நிதியமைச்சர் பதவி கிடைக்கக் காரணமே தவிரத் தமிழக மக்களுக்கு (நல்ல  கவனியுங்கள் அவர் ஊர் மக்களுக்கு அல்ல) நல்லது செய்ததால்  தொண்டு ஆற்றியதால் கிடைத்தது அல்ல

அவர் தமிழக நிதியமைச்சராகப் பதவி ஏற்றதால் தமிழகம்   தமிழகப் பொருளாதாரம் மேன்மையுற்றது  என்று சொல்வது இங்கு ஒரு கேள்விக்குறிதான்.. அப்படி தமிழகம் மேன்மையடைந்தது என்பதற்கான எந்தவித புள்ளியில் தரவுகளும் இல்லை வளர்ச்சியும் இல்லை


கொரோனாவால் உலகப் பொருளாதாரமே ஆடிதான் போய் இருக்கிறது அதற்கு இந்தியாவும் தப்பவில்லை மேலும் மத்திய அரசின் இந்தியா பொருளாதார திட்டம் பற்றிச் சொல்லவே வேண்டாம் அதன் நிலமை எல்லோருக்குமே நன்றாகத் தெரியும் அப்படி இருக்கையில் இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமான தமிழக மட்டும் அதுவும் கொரோனா சமயத்தில் ஆட்சிக்கு வந்த 'ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டலின்படி' பிடி ஆர் கொண்டு வந்த திட்டங்களால் தமிழகப் பொருளாதாரம் மேன்மையுற்றது என்றால் சின்ன புள்ளைக் கூட சிரிக்கும்.


தமிழகப் பொருளாதாரம் மேன்மையுற்றது என்றால் இந்த 2 வருடத்தில்  இவர்களின் பொருளாதார திட்டத்தினால் தமிழகத்திற்கு வந்த அன்னிய முதலீடுகள் எவ்வளவு அதனால் எத்தனை புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டன எவ்வளவு வேலை வாய்ப்புக்கள் பெருகின. அதனால் தமிழகத்திற்கு அதிகரித்த வருமானங்கள் எவ்வளவு என்பதற்கு எந்த ஒருவிதமான புள்ளிவிவரங்களும் இல்லை. தமிழக பொருளாதாரம் மேன்மையடைந்து இருந்தால் டாஸ்மாக் வருமானத்தை எதிர்பார்த்து ஆட்சி நடத்த வேண்டியிருந்திருக்காதே ..  டாஸ்மாக் கடைகளில் பாதியாவது இழுத்து மூடி இருக்கமாட்டார்களா என்ன? அப்புறம் ஏன் இந்த அளவிற்கு பில்டப்பு...





பிடி ஆர் செய்து எல்லாம்  அவரது படிப்பு அறிவால்  பாஜகவினருக்கு (சங்கிகளுக்கு )சரியான பதில் அடி கொடுத்தது மட்டுமே அதிலும் ஆங்கில ஊடகங்களில் அவர் கொடுத்ததால்  இந்தியா முழுவதும் பார்க்கப்பட்டது.விமர்சிக்கப்பட்டது.  அவரின் தெளிவான ஆங்கில பேச்சும் பாஜகவிற்குப் பதில் அடி கொடுத்ததும்  பாஜக அரசு மீது கோபம் கொண்ட பாமர மக்களுக்கு அவர் ஒரு மாவீரனாகக் காட்சியளிக்கப்பட்டார்.

பாஜகவை விமர்சிப்பவர்களைப் பதிலுக்கு பாஜக மத ரீதியாகப் பதில் அடி கொடுக்கும் ஆனால் இவர் மீது அதைச் செய்ய முடியாமல் தவித்தது.. தேசப்பற்று பற்றிக் குறை சொல்லப் பிடி ஆர் மீது எந்த தப்பும் இல்லை அது போல அளவிற்கு அதிகமாக திருட்டுத்தனமாகச் சம்பாதித்தது ஏதுமில்லை மேலும் அவர் கட்டிய மேலை நாட்டு மனைவியும் இந்துவாக மாறி இருப்பதுமட்டுமல்ல போது வெளிகளில் அதிகம் பேசியது இல்லாததால் அவர் மீதும் குற்றம் சொல்ல இயலவில்லை

 பிடி ஆரும் சரி மன்மோகன் சிங்கும் சரி படித்த மேதைகளாக இருக்கலாம் ஆனால் அவர்கள் அரசியலுக்கு வந்தால் அதிகம் படிக்காத தலைவர்களுக்கு அடிமையாக வாய் பொத்திதான் இருக்க முடியும் அதைத்தான்  மன்மோகன் சிங்கும் செய்தார் இப்போது பிடி ஆரும் செய்கிறார் இவர்கள் நாட்டுக்காக  நல்லது ஏது செய்ய வேண்டுமென்று உண்மையாக நினைத்து இருந்தால் அரசியலுக்கு வராமலே இந்திய அரசின் உயர் பதவிகள் வகித்து அரசிற்கு நல்ல யோசனைகளைக் கொடுத்து அதன் மூலம் மக்கள் பயனடையும் படி செய்யலாம் ஆனால் இவர்கள் தரும் நல்ல யோசனைகள் எல்லாம் படிக்காத முதல்வர்கள் பெயரிலும்  பிரதமர் பெயரிலும்தான் வரும் அப்படி வந்தால் வந்துட்டு போகட்டுமே  எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் தப்பு இல்லையே

நல்லா கவனித்தவர்களுக்குத் தெரியும் மிக நன்றாக மேலை நாட்டில்  படித்தவர்கள் உயர் பதவிகளில் அமர்ந்து இருப்பவர்கள் நல்ல குடும்ப பெருமை கொண்டவர்கள் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட மக்களைப் பார்த்து இருப்பீர்கள் அப்படிப்பட்டவர்கள் மோடி அரசை கண்மூடித்தனமாக ஆதரிப்பார்கள் அதனால் அவர்களை சங்கிகள் என்று நாம் அழைத்து கேலி செய்து கொண்டிருப்போம்.. அவர்களுக்கு நன்றாகவே தெரியும் மோடி உண்மையில் எப்படிப்பட்டவர் என்று அப்படித் தெரிந்தும் ஆதரிக்கிறார்கள் என்றால் மோடியை எதிர்த்து தங்களால் ஒன்று செய்ய இயலாது அப்படி எதிர்த்தால் நல்ல பதவியில் அமர முடியாது  சமுதாயத்திற்கு தாங்கள் செய்து வரும் நல்ல செயல்களை உதவிகளைச் செய்ய முடியாது என்று தெரிந்து கொண்டு அதனால் அமைதியாகக் காரியம் ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்


அது போலப் பிடி ஆரும் செய்து கொண்டிருக்கலாம்தானே?


கொசுறு :

1. ஸ்டாலினுக்கு விபரமே பற்றவில்லை போல இருக்கிறது பொன்னியின் செல்வம் படம் வரும் போது 12 மணி நேர வேலைத் திட்டத்தை அறிவித்து இருக்கலாம் அது போலக் கர்நாடக மாநில தேர்தல் முடிவு வரும் போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வந்து இருக்கலாம் இப்படிச் செய்து இருந்தால் அதிக விமர்சனத்திற்கு ஆளாகாமல் இருந்திருக்கலாம்..ஹும்ம்ம் அவ்வளவு திறமை இருந்திருந்தால் கலைஞர் நல்லபடியாகச் செயலாற்றிக் கொண்டிருக்கும் போதே  கட்டியின் தலைவராகவோ அல்லது முதல்வராக வந்திருப்பார் அல்லவா


2. மாடு முட்டினால் வந்தே பாரத் ரயிலுக்கு சேதம்.. ஆனால் "ஆடு' முட்டினால் திமுக அமைச்சரவைக்கே சேதம்...


3. எடப்பாடி ஆட்சி செய்த போது பாஜக அவரை நேரில் அழைத்து குட்டு வைக்கும், ஸ்டாலின் ஆட்சியில் பாஜக போனில் அழைத்து குட்டு வைக்கிறது. மேட்டர் அவ்வளவுதான்



அன்புடன்
மதுரைத்தமிழன்


1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.