Wednesday, May 10, 2023

 'கர்நாடக தேர்தல் முடிவுகள் பற்றிய  நையாண்டி பதிவு

   

@avargal unmaigal



மக்களின் தீர்ப்பை விட ஜெயித்து வந்த எம்.எல்.ஏக்கள் தரும் தீர்ப்புதான் இந்த கர்நாடக தேர்தலில் முக்கியம்

 காங்கிரஸ் கட்சி மிகக் குறைந்த பெரும்பான்மையில் ஜெயித்தால் ராகுல் காந்தி தன் கட்சி எம்.எல்.ஏக்களை உடனடியாக ஒரு விமானத்தில் ஏற்றி நித்தியானந்தாவின் கைலாச நாட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைக்க வேண்டும். அதன் பின் பதவி ஏற்கும் போது அவர்களை வரவழைத்து பதவி ஏற்றுவிட்டு ,மீண்டும் உடனே கைலாசாவிற்கு அனுப்பி வைத்து விட வேண்டும் அதன் பின் சட்டசபை கூடும் போதுமட்டும் ,இங்கு அழைத்து வந்து கலந்து கொள்ளச் செய்து விட்டு , மீண்டும் கைலாசாவிற்கே அனுப்பி வைத்தால் மட்டும் கர்நாடகாவில் காங்கிரஸ் தொடர்ந்து  ஆட்சியில் இருக்க முடியும் அப்படி இல்லையென்றால் பாஜக அவர்களை விலைக்கு வாங்கிவிடும்.


கர்நாடக மக்கள் பாஜகவை ஜெயிக்க வைத்தால் அவர்களைப் போல முட்டாள்கள் யாருமே இருக்க முடியாது. ஒரு வேளை அவர்கள் பாஜகவைத் தோற்கடித்தால் மோடியைப் போல ஒரு முட்டாள் இந்த உலகத்திலே இருக்க முடியாது காரணம் தேர்தல் ஆணையம். நீதித்துறை, வருமான வரித்துறை மற்றும்  உலகத்திலே அதிக அளவு கட்சி நிதியைக் கொண்டிருக்கும் பாஜக கட்சி இத்தனை இருந்தும் அந்த கட்சி தோற்றுப் போனால் மோடியை விட முட்டாள் யாரும் இருக்க முடியாதுதானே

கர்நாடக மக்கள்  ஒரு வேளை தங்கள் ஆதரவைத் தந்து காங்கிரஸை ஜெயிக்க வைத்து ,ராகுலிடம் ஆட்சியைக் கொடுத்தாலும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராகுலுக்கு அந்த வெற்றியைக் கொடுப்பார்களா என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் .

காங்கிரஸ் ஒரு வெற்றிகரமான தோல்வியையும் பாஜக ஒரு தோல்விகரமான வெற்றியையும் இந்த கர்நாடக தேர்தலில் பெறும்



காமர்ஸ் குருப்பில் 600/600 மதிப்பெண் எடுத்த பெண்  மருத்துவம் கல்லூரியிற்குப் போக முடியாதோ அது போலக் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையில் ஜெயித்தாலும் ஆட்சி அமைக்க முடியாமல்  போகலாம்


தமிழக கல்வித்துறையிடம் கர்நாடக மாநில தேர்தல் முடிவை அறிவிக்கும் பணியை ஒப்படைத்தால் மோடியையும் ராகுல் காந்தியையும் ஃபுல் மெஜாரிட்டியில் ஜெயிக்க வைத்து விடுவார்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்


2 comments:

  1. Replies
    1. தனபாலன் உங்கள் எண்ணம் நிறைவேறியது மகிழ்ச்சி இதுபோல 2024 ல் பெரிய சங்காக ஊதிவிடுங்கள்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.