Saturday, May 20, 2023

 பிரபல பள்ளிகளும் பெற்றோர்களின் போலிக் கெளரமும்
  

avargal unmaigal


 
அரசுப் பள்ளிகளில்  படிக்கும் மாணவர் ஏழைக் குடும்பங்களைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் ஆனால் அங்கு கற்றுத் தரும் ஆசிரியர்கள் அறிவில் குறைந்தவர்கள் இல்லை. அந்த ஆசிரியர்களின் கற்றுத் தரும் திறன் பிரபல பள்ளிகளில் கற்றுத் தரும் ஆசிரியர்களின் திறனைவிட மிக அதிகம்தான்.


பிரபல பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வசதியில் ஆரோக்கியத்தில் படிப்பு திறன் அதிகம் உள்ள மாணவர்கள் சேருகிறார்கள் அவர்களுக்கு அங்குள்ள ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்து பொதுத் தேர்விற்கு அனுப்புகிறார்கள் அதே தேர்வுக்குத்தான் வசதியில் குறைந்த உடல் ஆரோக்கியம் அதிகம் இல்லாத சுமாராக படிக்கும்  மாணவர்கள் அரசுப் பள்ளிக் கூடங்களிலிருந்து வருகிறார்கள் அப்படிப்பட்ட இவர்களுக்கு அரசு ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்து பொது போட்டி தேர்விற்கும் அனுப்புகிறார்கள் அப்படிப்பட்ட மாணவர்களில் அநேகம் பேர் பிரபல பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாகத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை புரிகிறார்கள். அப்படியானால் இங்கு எந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அறிவித் திறன் அதிகம் என்பதைச் சற்று யோசித்தால் நன்கு புரியும் இந்த அரசுப் பள்ளிகளுக்கு அரசும் பொது நிறுவனங்களும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து கொஞ்சம் நிதி  உதவிகள் செய்தால் இந்த பள்ளிகள் பிரகாசிக்கும் அங்குப் படிக்கும் மாணவர்களின் திறமையும் சுடர் விடும்

ஆனால் இது நன்கு புரிந்தாலும் தமிழக மக்களின் எண்ணம் என்பது வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது அவர்களுக்குத் தரமான பள்ளியை விடப் பிரபலமான பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் படிப்பதுதான்  மிகப் பெருமையாகக் கருதுகின்றனர்.. அதற்காக தங்களின்  தகுதிக்கும் அல்லது வருமானத்திற்கும் மீறி தங்கள் குழந்தைகளைப் பிரபல பள்ளிகளில் அதிகம் பணம் கொடுத்துச் சேர்க்கின்றனர். மேலும் அங்குச் செல்லும்  இப்படிப்பட்ட  குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்ற நன்றாகப் படிக்கும் குழந்தைகளுடன் போட்டியிடும் போது  மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் இப்படி உள்ளாகும் போது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அங்கு நடக்கும் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்படாததால் அந்த பள்ளிகளிலிருந்து தூக்கி எரியப்படுகிறார்கள் காரணம் அவர்களுக்குத் தேவை ரிசல்ட் சதவிகிதம்தான் தவிர மாணவர்கள் சிந்தித்து கற்கிறார்கள் என்பது அல்ல.. அப்படித் தூக்கி அடிக்கப்படும் மாணவர்கள் தங்கள் நன்றாகப் படிக்கத் தகுதியில்லாதவர்கள் என நினைத்து தவறான வழிகளில் இறங்குகிறார்கள் இதுதான் இன்று நடந்து கொண்டு இருக்கிறது இப்படிப்பட்ட பிரபல பள்ளிகளில் கற்றுத்தரும் ஆசிரியர்கள் சொல்லித் தருவது புரியாமல் பல குழந்தைகள் தவிக்கும் போது அதௌ குழந்தைகள் குறைகள் என்று ஆசிரியர்களால் கல்வி நிறுவனத்தால் அந்த பெற்றோர்களிடம்
 சொல்லப்படுகிறது அதனால் அந்த பெற்றோர்கள் கவலைப்பட்டு தங்கள் பிள்ளைகளுக்கு வெளி இடங்களில் டியூசன் சொல்லித் தர ஏற்பாடும் செய்யப்படுக்கிறது இதற்காகப் பணம் செலவிடப்படுகிறது காலம் விரயமாகிறது இப்படி அழுத்தத்தில் படிக்கும் குழந்தைகள் தேர்வில் தேர்வு பெற்றாலும் சிந்தித்துப் புரிந்து செயல்படுவதில் தோற்றுத்தான் போகிறார்கள் இதனால்தான் என்னவோ வேலை தேடும் நேரங்களில் பிரபல பள்ளிகளில் படித்து இருந்தாலும் வெற்றி கிடைக்காமல் வேலையற்று அலைகிறார்கள்

இதே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கெளரவம் பார்க்காமல் அரசுப் பள்ளிகளில் சேர்த்து இருந்தால் அங்கு அவர்களுக்கு மன அழுத்தம் ஏதுமில்லாமல் அங்கு நன்றாக கற்றுத் தரும் ஆசிரியர்களால் நங்கு கற்றுக் கொள்வார்கள் அப்படிப்பட்ட மாணவர்களுக்குப் பெற்றோர்கள் சற்று கவனம் செலுத்தி வெளியிடங்களும் நல்ல ஆசிரியர்களை வைத்தோ அல்லது அவர்களே தனிக் கவனம் செலுத்திச் சொல்லிக் கொடுத்தால் குன்றிலிருந்து வெளிச்சம் தரும் விளக்கு போல இந்த மாணவர்கள் மிகச் சிறப்பாகச் சுடர் விடுவார்கள்தானே

இதை ஏன் எந்த பெற்றோர்களும் சிந்திப்பது இல்லை தங்களின் போலியான சமுக கெளரவத்திற்காகத் தகுதி மீறிச் செயல்பட்டு தங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையைப் பாழாக்குகிறார்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. நல்ல பதிவு. தேவையான நேரத்தில் தேவையான கட்டுரை.
    பெற்றோர்கள் உணர்ந்து நடந்து கொண்டால் நல்லது.
    தினம் பத்திரிக்கையில் வரும் மாணவர் , மாணவிகள் தற்கொலை செய்திகள் மனதை கலங்க வைக்கிறது.

    நீங்கள் சொல்வது போல அரசு பள்ளிகளுக்கு ஊக்கமும் , பள்ளி கூடகட்டிடங்களை சீர் அமைத்து வசதிகள் செய்து கொடுத்தால் பிள்ளைகள் சேர்வது அதிகமாகும்.

    ReplyDelete
  2. பெற்றோர்கள் உணர வேண்டியது உண்மை...

    ReplyDelete
  3. இங்கே எல்லாமே போட்டி தான். குழந்தைகளுக்கு நல்லது என்று நினைத்து சில பெற்றோர்கள் செய்யும் அடாவடிகள் வேதனையானவை. நல்ல இடுகை.

    ReplyDelete
  4. ஆஆ ட்றுத் இருக்கிறாரா எனப் பார்க்க வந்தேன்:), நல்லவேளை இன்று மோடி அங்கிளைத் திட்டவில்லை ஹா ஹா ஹா:).

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.