Friday, May 26, 2023

 இப்படித்தான் இருக்கிறார்கள் வாழ்க்கையில் நாம் சந்திக்கும்  மனிதர்கள்
 

avargal unmaigal



நம் வாழ்க்கையில் ஒவ்வொரு குறிப்பிட்ட கால அளவிற்குப் பின் நாம் நிதானமாக நின்று யோசிக்க வேண்டும் அப்படி நாம் யோசிக்கையில்   நாம் சாதித்தது என்ன இழந்தது என்ன நாம் எந்த நிலையில் இருக்கிறோம் எந்த நிலையை அடைய வேண்டும் என்பது நமக்குப் புரியும்

இப்படி  நம் வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும்  நாம் யோசிக்கும் போது நம் வாழ்க்கையில் நாம்  சந்தித்த மூன்று வகையான மனிதர்கள் இருப்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம் அவர்களில் சிலர்  ஒரு சீசனிலும்  சிலர், ஒரு காரணத்திற்காகவும்  மற்றும் சிலர் நம் வாழ்க்கைக்காகவும் இருப்பதை அறியலாம்.

அப்படி நாம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும்  மனிதர்களை மூன்று வகையாக மரத்தின் இலை, கிளை, வேர் போன்றவர்கள் போலப் பிரிக்கலாம்


ஒன்று :(ம) இலைத் தன்மையை உடைய மனிதர்கள்..

சீசனை போல  நம் வாழ்க்கையில் வருவார்கள். அவர்களை நாம் சார்ந்தோ/நம்பியோ இருக்க முடியாது காரணம் காரணம் இவர்கள் மிக வீக்கானவர்கள். இலை எப்படி காற்று அடித்தால் மரத்திலிருந்து வீழ்ந்து விடுமோ அது போல  நம் வாழ்க்கையிலிருந்தும் வழுக்கிப் போய்விடுவார்கள் அவர்கள் மரம் செழிப்பாக இருக்கும் போது மரத்தோடு இருக்கும் இலையைப் போல நம் வாழ்க்கை செழிப்பாக இருக்கும் போது நம்மோடு ஒட்டி இருப்பார்கள் ஆனால் மிக அதிகமாகக் காற்று அடிக்கும் போது எப்படி மரத்தை விட்டு இலைகள் வீழ்ந்துவிடுமோ அது போல நமக்குப் பிரச்சனைகள் வரும் போது  நம்மைவிட்டு விலகி விடுவார்கள். இந்த மாதிரி இலை தன்மை உள்ள நபர்களிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்,

சமுக இணையதளங்களில் நம்முடன் உறவாடிக் கொண்டிருப்பவர்களை இவர்களுடன் ஒப்பிடலாம்  இவர்கள் இதற்கு  இலைத் தன்மையுடைய மனிதர்களுக்கு மிக  உதாரணமாகக் கூறலாம்

இவர்கள் மட்டுமல்ல நம் வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்மோடு வாழ்ந்தவர்கள் வந்தவர்கள் அப்படிப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னால் நம் தொடர்புக்கு அப்பால் உள்ளவர்கள் போல ஆகிவிடுவார்கள் . வாழ்க்கையில் ஒரு பருவத்திற்கு மட்டுமே இருக்கும் நபர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருப்பவர்களைப் போன்றவர்கள். இவர்கள் உயர் பட்டப்படிப்புக்குப் பிறகு நீங்கள் தொடர்பை இழந்த ஒரு குழந்தைப் பருவ நண்பராக இருக்கலாம்.



இரண்டு :(து) கிளைத் தன்மையுடைய உடைய மனிதர்கள்

இவர்கள் இலைகள் போன்றவர்கள் அல்ல அவர்களை விடச் சற்று வலிமையுடையவர்கள்தான் என்றாலும் நாம் முழுவதும் அவர்களை நம்பி இருக்க முடியாது . எப்படி அதிக எடையைத் தாங்க முடியாமல் கிளைகள் ஒடிந்து மரத்திலிருந்து விலகி விடுமோ அது போல நமக்குப் பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகள் வரும் போது அவர்களால் நமக்குத் தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்க முடியாது மேலும் இனிமேல் நம்முடன் ஓட்டி இருப்பது அவர்களுக்கு  எந்த நன்மையையும் தராது  என்பதால்  விலகி விடுவார்கள். இது மனித மனத்தின் இயற்கைதான் .இவர்கள் இலையை விடச் சற்று  சிறப்பானவர்கள் என்று வேண்டுமானால் கருதலாம்

நம்முடன் அலுவலகத்தில்  உடன் உழைப்பவர்களோ அல்லது நாம் நல்ல நட்புடன் இருக்கும் அண்டை வீட்டுக்காரர்களை இவர்களுக்கு இணையாக ஒப்பிடலாம்.


மூன்று :(ரை) வேர் தன்மையுடைய மனிதர்கள்

இவர்கள் நம் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள். இவர்கள் நமக்காக உதவுவது கூட வெளியுலகில் உள்ளவர்களுக்குத் தெரியாத மாதிரி உதவிக் கொண்டிருப்பார்கள் நம்மைப் புரட்டிப் போடும் அளவிற்கு வாழ்க்கை பிரச்சனைகள் இருந்தாலும் நம்மைவிட்டு எந்த நேரத்திலும் விலக மாட்டார்கள் கடைசி வரை நம்மோடு ஒட்டித்தான் இருந்து உதவுவார்களே தவிர விலக மாட்டார்கள். மலை போலப் பிரச்சனைகள் வந்து நாம் சமாளிக்க முடியாமல் சரிந்தாலும் கடைசிவரை நம்மோடு இருந்து போராடி நம்மோடுதான் வீழ்வார்களே தவிர நம்மை விட்டு விலகிப் போக மாட்டார்கள்


நமது பள்ளிக் காலத்திலிருந்து நம்மோடு  ஒட்டிக் கொண்டு வரும் நட்புகளோ அல்லது நம்முடைய உறவினர்களில் நம்முடன் மிக உரிமையுடன் மிக நட்போடு நம் வாழ்வில் ஒன்றோடு ஒன்றாகக் கலந்து கொண்டு வருபவர்களை இவர்களுக்கு ஒப்பிடலாம் பல நேரங்களில் அவர்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் நெருக்கமாக இருக்கும் சகோதரர்கள் அல்லது சகோதரிகள் போன்ற குடும்ப உறுப்பினர்களாக இருப்பார்கள். மற்ற நேரங்களில், அவர்கள் நண்பர்களாக இருப்பார்கள்,

ஒருவருக்கொருவர் திருமணங்களில் இருப்பார்கள், உங்கள் குழந்தைகளை ஒன்றாக வளர வைப்பது, அடிப்படையில் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் இருப்பார்கள். இந்த நபர்களைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நீங்கள் எப்போதும் அவர்களுடன் தொடர்பில் இருக்க முடியாது, ஆனால் எப்படியாவது அவர்கள் உங்களுக்காக எப்போதும் இருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களுக்குத் தெரிந்த நண்பர்களைப் போல, பல மாதங்களாகப் பேசாமல் இருந்தும், எதுவும் மாறாமல் இருந்தும் நீங்கள் அழைக்கலாம். அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை அறிய உங்களுக்கு நிலையான உத்தரவாதம் தேவையில்லை.


அவர்கள் செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும், அது உங்களுக்கு போதுமானது. எதுவாக இருந்தாலும் உங்களுடன் இருப்பார்கள் என்று உங்களுக்குத் தெரிந்தவர்கள் இவர்கள். அவர்கள் எப்போதும் உங்களுடன் உடன்பட மாட்டார்கள், ஆனால் அவர்கள் உங்களை ஒருபோதும் நியாயந்தீர்க்க மாட்டார்கள். உங்களுக்கு இன்னும் சிக்கல்கள் இருக்கலாம் மற்றும் அவற்றிலிருந்து விஷயங்களை வித்தியாசமாகப் பார்க்கலாம், ஆனால் அவர்கள் உங்களைக் கைவிடுவது அல்லது உங்களை விட்டு விலகுவது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் திரும்பிச் செல்வீர்கள், அதில் ஒருவித ஆறுதல் இருக்கிறது. அவர்கள் எங்கும் செல்லவில்லை, அவர்கள் வாழ்நாள் முழுவதும் அதில் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட தன்மை உடைய மனிதர்களில் ஒன்று இரண்டு பேர்  நமக்குக் கிடைத்து இருந்தால் நாம் மிகப் பெரிய வரம் பெற்ற அதிர்ஷ்டசாலிகள்தான்

இப்படி நாம் சந்திக்கும் பல தன்மையுடையவர்கள் நம்மிடம் அன்பு கொண்டு  வாழ்க்கை முழுவதும் வரமாட்டார்கள் முக்கியமாக  வேர் தன்மையுடைய களை தவிர்த்து மற்றவர்கள் என்றென்றும் நிரந்தர மானவர்கள் அல்ல என்பதைப் புரிந்து கொண்டால் நாம்  வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம்

கொசுறு: எல்லோருக்கும் தேவையான நட்பு , நான் இறுதியில் சொல்லி இருக்கும் நட்பாகத்தான் இருக்கும். அதில் மாற்றம் ஏதும் இருக்காது. இப்படிபட்ட நண்பர்கள் நமக்கு வேண்டும் என்பதை நாம் எதிர்பார்ப்பது போலத்தானானே மற்றவர்களும் எதிர்பார்ப்பார்கள்.. அதனால் அவர்களின் எதிர்ப்பார்ப்புக்கு இணங்க நாமும் மற்றவர்களுக்கு இப்படி ஒரு நல்ல நட்பாக இருப்பதுதானே சிறந்தது.


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : ஆங்கிலத்தில் படித்த ஒரு தகவலை எனது பாணியில் இங்கே எழுதி இருக்கின்றேன்



5 comments:

  1. இன்றைய சூழலில் அனைத்தும் சிரமம் தான்...

    ReplyDelete
  2. சிறப்பான ஒப்பீடு. வேர் போன்ற நல்ல நண்பர்கள் அமைவது வரம். எனக்கு அப்படி சில நண்பர்கள் உண்டு.

    ReplyDelete
  3. ஒப்பீடு அருமை. வலுவான நட்பு, உறவு அமைவது அரிது கொடுத்தும் வைத்திருக்க வேண்டும். எனக்கு உறவுகளில், நட்பில் சிலர் உண்டு.

    கீதா

    ReplyDelete
  4. அருமையான கட்டுரை.
    நட்பை அன்றைய பெரியோர்
    மிகவும் ஒட்டுவது அல்லது வேரோடு பிடுங்குவது என்று சொல்வார்கள்.
    நீங்கள் சொல்வதின் அர்த்தம் புரிகிறது. நல்ல வேர்பிடித்து இருக்கும் நட்பும், உறவும் நம்மை விட்டு விலகுவது இல்லை.

    வேர் கண்ணுக்கு தெரியாது இருப்பது போல அவர்கள் அன்பும், பாசமும் வெளியே தெரியாது. எப்போதும் நமக்காக நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்கள்.

    அவர்களின் அன்பும், அரவணைப்பும் என்றும் வேண்டும்.

    ReplyDelete
  5. ட்றுத்.. நலம்தானே... எப்படி இருக்கிறீங்கள்? வயசாகியிருக்கும் என நினைக்கிறேன்:), பார்த்துக் கனகாலமாச்செல்லோ ஹா ஹா ஹா.

    போன போஸ்ட்டுக்கு வந்து கொமெண்ட் போட்டிருந்தேன், கொமெண்ட்டைக் காணம்...

    மரமும் மனிதர்களும் உண்மைதான், கொசுறுதான் டாப்பூஊஊ:).

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.