Wednesday, May 17, 2023

 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்க நீங்கள் இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்


 

@https://avargal-unmaigal.blogspot.com



மனிதர்களாகிய நாம்  நமக்கு தேவையானவற்றைத் தெரிவு செய்யும் போது ,நன்றாக யோசித்து சர்ச் செய்து  வாங்குகிறோம் .உதாரணமாக ஒரு வீடு , வீட்டிற்குத் தேவையான வாஷிங்க்மிஷின், தொலைக்காட்சி, கணினி ,  பர்னிச்சேர் அல்லது ஏசி வாங்குகிறோம் என்றால் நமக்கு ஏற்றார் போல ,நமக்குப் பிடித்தது போல வசதிக்கு ஏற்றவாறு வாங்குகிறோம்,

 அது போல ஆணாக இருக்கட்டும் அல்லது பெண்ணாக இருக்கட்டும் .காதல் திருமணமோ அல்லது அரேஞ்ச்டு மேரெஜாக இருக்கட்டும், நமக்கு ஏற்ற துணையைத்தானே தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்து கொள்கிறோம். ஆனால்  கல்யாணம் முடிந்த பின் ஆண் பெண்ணை மாற்ற முயல்வது பெண் ஆணை மாற்ற முயலுவது நடக்கிறது,


நமக்கு ஏற்றவர்கள் என்று தெரிவு செய்து கல்யாணம் செய்து கொண்ட பின் அவர்கள் நமக்கு ஏற்றவாறு இல்லையென்று மாற்ற முயன்றால் நாம் முட்டாளாகத்தானோ தெரிகிறோம்.


இதை நான் இங்குச் சொல்லச் சிலகாரணங்கள் உண்டு அவை என்னவென்று பார்த்தால் நான் சொல்லவருவது உங்களுக்குப் புரியலாம்.

பலர் தங்களுக்கு  வேலைக்குச் செல்லும்  பெண் வேண்டும் என்று தேர்வு செய்தால்  அவளால் முழு நேரமும் வீட்டைக் கையாள முடியாது என்பதை ஏற்க வேண்டும்  அல்லது  உங்களைக் கவனித்துக் கொண்டு, வீட்டை முழுமையாக நிர்வகிக்கக் கூடிய ஒரு துணையைத் தேர்ந்தெடுத்தால், அவள் பணம் சம்பாதிக்க இயலாது  என்பதை கண்டிபாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

நமக்கு அடிபணியும் படியான  பெண்ணைத் தேர்ந்தெடுத்தால்,  அவள் எல்லாவற்றிற்கும் நம்மையே  சார்ந்திருக்கிறாள் என்பதை ஏற்க வேண்டும்

நீங்கள் ஒரு துணிச்சலான பெண்ணை   விரும்பினால், அவள் கடினமானவள், அவளுக்கென்று  சொந்த எண்ணங்கள் இருப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நீங்கள் ஒரு அழகான பெண்ணைத் தேர்ந்தெடுத்தால்,  அவள் அழகாக இருக்க எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொள்ளத்தான்  வேண்டும்


நீங்கள் மிகச் சிறந்த பெண்ணை தேர்வு செய்தால் , அவள் மிக நெஞ்சுறுதியடையாவளாக  இருப்பால்  என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


.இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட பெண்களைத் தேர்வு செய்து மணம் முடித்து வாழ ஆரம்பித்த பின்னால் நம் எதிர்பார்ப்பை  நேர் எதிர்மறையாக மாற்றிக் கொண்டு அதற்கு ஏற்றவாறு அவள் மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியாகும் என்ன?


 இது பெண்ணை தெரிவு செய்யும் ஆண்களுக்கு மட்டுமல்ல ஆண்களைத் தெரிவு செய்யும் பெண்களுக்கும் இது பொருந்தும்


எவரும்  மிக பெர்பெக்ட் கிடையாது.

ஒவ்வொருவரிடமும்   சில  "நல்ல விஷயம்" உள்ளது, அதுதான்  அவர்கள் யார் என்பதை வரையறுத்து அவர்களைத் தனித்துவமாக்குகிறது. அதைப் புரிந்து வாழ ஆரம்பித்தால் வாழ்வு இனிக்கும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. நல்ல அருமையன பதிவு மதுரை.

    சமீபத்தில் உளவியல் மருத்துவர் ருத்ரன் அவர்கள் பேச்சு ஒன்று எழுத்துகளாய்க் காண நேர்ந்தது. அதில், "சமீப காலமாக, என்னிடம் (ஆண்களை விடவும் பெண்கள் அதிகமாக) ‘இந்த நபர்’ வாழ்க்கைத் துணையாக ‘ஒத்து வருவாரா?’ என்று கேட்பது அதிகமாகி உள்ளது." என்றும் அதற்கு அவர்சொல்லியதும் வந்தது.

    புரிதல் என்பது இருந்துவிட்டால் அப்புறம் என்ன பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடலாம்.

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.