காலம் நமக்கு கற்றுக் கொடுத்த விஷயங்கள் இது புரியும் நேரத்தில் நம் காலம் விரயம் ஆகி இருக்கும்
நம்மால் எல்லோரையும் எல்லா நேரத்திலும் மக்களை மகிழ்விக்க முடியாது என்பது உண்மை. அதனால் முதலில் உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும் மகிழ்விக்கச் செய்யுங்கள் , மற்றவர்கள் எப்படியும் தங்களை மகிழ்விப்பதில் மும்முரமாகத்தான் இருக்கிறார்கள்,
நமது வாழ்க்கையின் பெரும்பகுதி தவறான இலக்குகளைத் துரத்துவதற்கும் தவறான கொள்கைகளை வணங்குவதற்கும் செலவிடப்படுகிறது. அதை நீங்கள் உணரும் நாளே நீங்கள் உண்மையில் வாழத் தொடங்கும் நாள்.
நாம் சரியாகச் செய்வதை எதையும் யாரும் உண்மையில் பார்ப்பதில்லை, ஆனால் நாம் செய்யும் சிறு தவறுகளைத்தா எல்லோரும் பார்க்கிறார்கள். அது நமக்கு தெளிவாகத் தெரிந்தால், நாம் சரியான காரணத்திற்காக விஷயங்களைச் செய்யத் தொடங்கவோம்,
வயதாக வயதாக நம் உடலின் வளர்ச்சி மாறிக் கொண்டே இருக்கிறது அதை எதிர்த்து நாம் இளமையாக இருக்க எடுக்கும் முயற்சிகள் எல்லாம் காற்றை கையால் பிடிக்க முயற்சியோப்பது போன்றது. அதை தலைகீழாக மாற்ற முயன்று நேரத்தை வீணாக்காதீர்கள், அதற்குப் பதிலாக அந்தந்த வயதில் புதியதில் அழகைக் காண உங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.
உங்களின் உடல் தோற்றத்திற்காகவோ அல்லது உடலின் நிறத்திற்காகவோ வருந்தி காலத்தைக் கடத்திக் கொண்டிருக்காதீர்கள் உடல் நமக்குப் பாத்திரம் போன்றதுதான் ஆனால் மனம் என்பது அதில் வைத்து பரிமாறப்படும் ஒரு சுவையான உணவைப் போன்றது நமக்குச் சுவையான உணவு முக்கியமா அல்லது அது வைத்து பரிமாறப்படும் பாத்திரத்தின் அழகு முக்கியமா? யோசித்துப் பாருங்கள் உங்களுக்குத் தெளிவான முடிவு கிடைக்கும்
உடல் ஆரோக்கியம் முக்கியமானது ஆனால் மன அழுத்தம், பயம் மற்றும் கவலை ஆகியவை நாம் உண்ணத் தவிர்க்கும் ய சுவையான உணவு அல்லது ட்ரிங்க்ஸை விட மிகவும் தீங்கு விளைவிக்கும். மகிழ்ச்சியும் அமைதியும்தான் வாழ்வும் மிகச் சிறந்த மருந்து.
யார் எதற்காக உங்களை நினைவு கூறுவார்கள் என்று யோசித்துப் பாருங்கள். உங்களது அன்பும் உங்கள் ஞானமும் மட்டும்தான் நீண்ட காலம் பேசப்படுமே ஒழிய நீங்கள் வைத்திருக்கும் ஆடம்பர பொருட்கள் பேசாது. காமராஜரும் சரி அப்துல்கலாமும் சரி அவர்களின் அன்பும் ஞானமும் மட்டும்தான் இன்று வரை பேசும் பொருளாக இருக்கிறது இவை இரண்டும்தான் உங்கள் கதைகளைக் காலம் காலமாகச் சொல்லும்
நாம் நீண்ட காலமாக வாழப்போவதில்லை லைஃப் இஸ் சார்ட் என்று சொல்லுவார்கள் வாழ்க்கையை அதன்போக்கில் போகவிட்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டுமே தவிர எப்போதும் வாழ்க்கையோடு எதிர் நீச்சலிட்டு போராடிக் கொண்டிருக்கக் கூடாது
நாளை அனுபவித்துக் கொள்ளலாம் என்று எதற்கும் தாமதித்துக் கொள்ளாதீர்கள் அன்றன்றே எல்லாவற்றையும் அனுபவித்து சந்தோஷமாக இருங்கள். நாளை என்று வைத்திருந்தால் அந்த நாளிற்கான உத்தரவாதம் நம்மிடம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்

மிகவும் அருமையான பதிவு.
ReplyDeleteநம்முடன் இருப்பவர்களை நாம் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது முற்றிலும் உண்மை.
எண்ணங்கள் அருமை...
ReplyDelete