Sunday, June 4, 2023

 கலைஞர் மட்டும் இன்னும் உயிரோடு இருந்திருந்தால் தமிழகத்திற்கு  இன்னும் பல நல்ல காரியங்களை செய்து இருப்பார்
 

avargal unmaigal




நான் : கலைஞரின் உடல் மிக ஆரோக்கியமாக இருந்து இன்னும் உயிரோடு இருந்தால் தமிழக மக்களுக்கு இன்னும் பல நல்ல காரியங்கள்  செய்து இருப்பார்.
என் நண்பர் :உண்மையாகவா ?அப்படி அவர் என்ன நன்மையைச் செய்து இருப்பார் என்று நினைக்கிறீர்கள்.
நான். அவர் உயிருடன் இருந்திருந்தால் ஸ்டாலின் தலைவராகவோ முதல்வராகவோ வந்து இருக்க மாட்டாரில்ல அது நாட்டு மக்களுக்குச் செய்யும் நல்ல காரியம்தானே?
நண்பர் : ஹீஹீஹீ உம்முடைய  நையாண்டிதனத்திற்கு அளவே இல்லை



தன்னை கஷ்டப்பட்டுப் பெற்று  வளர்த்துப் படிக்க வைத்து ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த பெற்றோர்களின் பெருமைகளைப் பேசுவதற்குப் பதிலாகக் கலைஞரால் நாங்கள் சோறு சாப்பிட்டோம் இளையராஜாவால்தான் நாங்கள் உயிர் வாழ்கின்றோம் என்பது போலப் பலரும் சமுக இணையதளங்களில் எழுதி வருவதைக் காண முடிகிறது.. இப்படிப்பட்டவர்களைப் பெற்று வளர்த்ததற்குப் பதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அரளிவிதையை அரைத்துக் கொடுத்துக் கொன்று இருக்கலாம், இப்படிப்பட்ட நன்றி கெட்டவர்கள் வாழ்வதற்குப் பதில் செத்துப் போவதே நலம்


உடன் பிறப்புக்கள் எழுதும் ரைட்டப்புகளை கலைஞரின் குடும்பத்தினர் படித்தால் தங்களுக்குத் தெரியாமலே கலைஞர் நாட்டிற்கு இப்படி எல்லாம் செய்து இருக்கிறாரா என்று நினைத்து ஆச்சரியப்பட்டுப் போவார்கள்''


செய்தி ரிசர்வ் வங்கியின் அறிவிப்புப் படி  இந்திய மாநிலங்களிலே தமிழகம்தான் மிக அதிக கடன் வாங்கி இருக்கிறது உபி மிகக் குறைந்தளவே கடன் வாங்கி இருக்கிறது

கடன் வாங்கியாவது பிள்ளைகளைப் படிக்க வைப்பது போலக் கடன் வாங்கியாவது தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்று தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் நினைக்கிறார்கள் ஆனால் உத்திர பிரதேசத்தில் உள்ள முதல்வர்கள் உழைக்காமலே அடுத்தவர்களின் சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிடும் வெட்டிப் பயல்களாக அவர் ஆளும் மாநிலத்தின் மக்களை  ஆக்குகிறார்கள்... முட்டுக் கொடுத்தாலும் இப்படி முட்டுக் கொடுக்கணுமாக்கும்


ஒரிசாவில் நடந்த ரயில் விபத்தை அறிந்து மத்திய அரசு அதிர்ந்து போய் உள்ளது. இனிமேல் இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடாது என்பதற்காக மத்திய அரசு ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி இனிமேல் ஒவ்வொரு ரயில் நிலயத்திலும் ஒரு சாஸ்திரிகள் நியமிக்கப்படுவார்கள் அவர்கள் அந்தந்த ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் முன்பு வேத மந்திரங்கள் முழங்கப் பூஜைகள் செய்து ரயில் சக்கரத்திற்கு அடியில் எலுமிச்சம்பழம் வைப்பார்கள் . இதனால் அசுத்த சக்திகள் ரயிலைச் சேதப்படுத்துவதில் காப்பாற்றலாம் .இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிப்பது போல ரயில்களுக்குப் பாதுகாப்பு வசதிகள் செய்வதும் சாஸ்திரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்  செயற்கரிய செயலை செய்து இருக்கிறார் நமது பாரதப் பிரதமர்.. இதோடு அவர் விட்டுவிடவில்லை ஒவ்வொரு ரயில் எஞ்சின் முன்புறம் எலுமிச்சம்பழம் மிளகாய் மற்றும் மஞ்சள் துண்டை கட்டி தொங்கவிடச் சொல்லி இருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட பிரதமரை நாம் மறக்காமல் 2024ல் ஜெயிக்க வைக்கவேண்டும் ஜெய்ஹிந்த்


ஒரிசாவில் நடந்த ரயில் விபத்திற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் எந்தவொரு சம்பந்தமில்லை என்பதை நாடே அறியும். அதனால் இந்த விபத்திற்கு யார் காரணகர்த்தா தான்தான் அதற்குக் காரணம் என்று ஒத்துக் கொண்டால் அவருக்கு பொது மன்னிப்பு அளிப்பதோடு அவருக்குத் தக்க சன்மானம் அளிக்கப்படும் என்பதை இந்த மோடி அரசு பெருமையாக அறிவித்துக் கொள்கிறது. இது மக்களுக்காக அரசு இப்படி ஒரு செய்தி கூடிய சீக்கிரம் வாட்ஸப் யூனிவர்சிட்டியில் இருந்து  வெளிவராமலா போய்விடும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. இரண்டு நாட்களாக மூடனின் நடிப்பு சிவாஜியை வென்று விட்டது...

    ReplyDelete
  2. அருமை பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.