Wednesday, June 7, 2023

 மற்றவர்களை நாம் பார்க்கும் பார்வை

 




ஒரு இளம்  தம்பதியர் , ஒரு புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். மறுநாள் காலை அவர்கள் காலை உணவை ஜன்னலுக்கு அருகில் உடகார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​இளம் பெண் தனது பக்கத்து வீட்டுக்காரர் துணியை துவைத்து  வெளியே உலர்த்துவதைக்  கண்டார். அந்த துணிகள்
 சுத்தமாக இல்லை;பக்கத்துவீட்டு பெண்மணிக்கு சரியாகக்  துவைக்க  தெரியவில்லை அல்லது. ஒருவேளை அவர்களுக்கு  நல்ல சோப்புத்  தேவைப்படலாம் என்று நினைத்து தான் நினைத்ததை தன் கணவணிடம் சொன்னாள்.



பிறகு ஒவ்வொரு முறையும் அவளுடைய பக்கத்து வீட்டுக்காரர்  துணியைத் துவைத்துக் காயப்போடும் போது , அந்த இளம் பெண் அதே கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்தப் பெண்மணி,  பக்கத்துவீட்டுகாரர் துவைத்து காயப் போட்டிருந்த  துணி மிக  சுத்தமாக  இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்து, தன் கணவரிடம், " இங்கே பாருங்கள் நம் பக்கத்துவீட்டுக்காரர் கடைசியில் சரியாகக்  துவைக்க கற்றுக்கொண்டார் போலிருக்கிறது நிச்சயம் . இதை அவர்களுக்கு யாரோ ஒருவர்தான் சொல்லிக்  கொடுத்தது  இருக்க வேணடும் என்று சொல்லி ஆச்சரியப்பட்டுக் கொண்டார்

அதற்கு அவர் கணவர், "நான் இன்று அதிகாலையில் எழுந்து  நம்ம வீட்டு  ஜன்னல்களை சுத்தம் செய்தேன் என்று சொன்னார்.
வாழ்க்கையும் அப்படித்தான்...

மற்றவர்களைப் பார்க்கும்போது நாம் பார்ப்பது நாம் பார்க்கும் சாளரத்தின் தெளிவைப் பொறுத்தது.

 குறிப்பாக உங்கள் வாழ்க்கையின் கண்ணோட்டம் கோபம், பொறாமை, எதிர்மறை அல்லது நிறைவேறாத ஆசைகளால் மேகமூட்டம் போல தெளிவற்று  இருந்தால் நாம் பார்க்க்கும் கண்ணோட்டம் எல்லாம் தெளிவாக இருக்காது எனவே மற்றவர்களை விரைவாக மதிப்பிடாதீர்கள்,

ஒருவரைத் தீர்மானிப்பது அவர் யார் என்பதை வரையறுக்காது. நீங்கள் யார் என்பதை இது வரையறுக்கிறது.


சமுக  இணைய தளங்களில் உலா வரும் போது நாம் இப்படித்தான் ஒரு தவறானக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் தீர்மானிக்கிறோம் பலர் எழுதும் பதிவுகள் மிக மோசமாக இருக்கிறது என்றும் தீர்மாணிக்கிறோம்  மேலும்  இதன் காரணமாக் சமுக இணையத்தளங்களே மிக மோசம்  என்று நினைக்கிறோம் அது எழுதி பதிவர்களின் கண்ணோட்டத்தில் தவறு இல்லை அதை நாம் தவறான எண்ணத்தில் தவறான மனநிலையில் கோணத்தில் நாம் பார்க்கும் பார்வைகளால் ஏற்படும் தவறுகள்தானே தவிர எழுதிப் பதிவிடுவர்களின் தவறல்ல


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. நல்ல கருத்து, மதுரை

    கீதா

    ReplyDelete
  2. ஆஆஆஆஆஆ ட்றுத்துக்கும் ஞாஆஆஆனம் பிறந்திட்டுதூஊஊ:)).. இன்று நல்ல ஒரு கருத்துச் சொல்லிட்டார்ர்..

    அதுசரி அது என்ன பயக்கம்:)) பக்கத்து வீட்டில உடுப்புக் காயப்போடுவதைப் பார்ப்பது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.