50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சீனா இப்போது இல்லை அது அசுரவேகமாக வளர்ச்சியடைந்து உலகின் முக்கிய வல்லரசாக மாறி அமெரிக்காவிற்குச் சாவால் விடும் ஒரு நாடாக மாறியுள்ளது அதே நேரத்தில் அமெரிக்காவும் முன்னாள் இருந்தது போல இப்போது இல்லை அது கொஞ்சம் ஆட்டம் கண்டுதான் இருக்கிறது .ரஜினி சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக நிலவரத்தைக் கண்டு தமிழகத்தில் தலைவருக்கான இடம் காலியாக இருக்கிறது அதுமட்டுமல்ல சிஸ்டமும் சரியில்லை என்று சொன்னார் அது தமிழகத்திற்குப் பொருந்தியதோ இல்லையோ ஆனால் இன்றைய நிலவரப்படி அமெரிக்காவிற்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது..
அமெரிக்க இது வரை சிறிய அரபு நாடுகளுடன் விளையாடி வந்தது ஆனால் சீனா அந்த அரபு நாடுகள் மாதிரி அல்ல அது அசுரபலம் கொண்ட நாடு என்பதை அமெரிக்கா தெரிந்தும் அதனுடன் சீண்டிக் கொண்டிருக்கிறது..ஆனால் சீனா அதற்குத் தக்க பதில் அடி கொடுக்கும் நேரம் வந்துவிட்டது ...அதுவும் விளையாட்டில் காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டது என்று சொல்லாம்.
அமெரிக்காவுக்கும் தைவானுக்கும் இடையிலான உறவு எப்போதும் சீனாவுடன் சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. தைவான், ஒரு ஜனநாயக மற்றும் இறையாண்மை கொண்ட நாடானது, 1940களில் இருந்து சீனா தனது சொந்த பிரதேசமாக உரிமை கோரியது. இது இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான உறவுக்கு வழிவகுத்தது, தைவானை ஒரு தனி நாடாக அங்கீகரிக்க வேண்டாம் என்று சீனா மற்ற நாடுகளுக்கு அடிக்கடி அழுத்தம் கொடுக்கிறது.
எழுத்தாளர் அபிலேஷ் சந்திரன் செய்வது சரியானதுதானா??
சமீபத்திய ஆண்டுகளில், தைவானை ஆதரிப்பதில் அமெரிக்கா மிகவும் சுறுசுறுப்பான பங்கை எடுத்துள்ளது, இது சீனாவுடனான உறவுகளை மேலும் சீர்குலைத்துள்ளது. அமெரிக்க நிர்வாகம், குறிப்பாக, தைவானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறது, உயர்மட்ட அதிகாரிகளைத் தைவானிற்கு அனுப்புகிறது. இது தைவான் ஜலசந்தியில் இராணுவப் பயிற்சிகள் மற்றும் பிற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுடன் பதிலடி கொடுக்க சீனா வழிவகுத்தது.
இதற்கிடையில், கியூபா அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக உள்ளது. 1959 ஆம் ஆண்டு கியூபா புரட்சியில் பிடல் காஸ்ட்ரோ ஆட்சிக்கு வந்து சோசலிச அரசாங்கத்தை நிறுவியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே ஒரு இறுக்கமான உறவு இருந்தது. 60 ஆண்டுகளுக்கும் மேலாகக் கியூபாவுடன் வர்த்தகத் தடையை அமெரிக்கா கடைப்பிடித்து வருகிறது.
மறுபுறம், சீனா, கியூபாவின் வலுவான நட்பு நாடாக இருந்து, பொருளாதார மற்றும் அரசியல் ஆதரவை வழங்கி வருகிறது. இது கியூபாவுடனான உறவுகள் தொடர்பாகச் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாக, அமெரிக்கா மற்றும் தைவான், மற்றும் சீனா மற்றும் கியூபா இடையேயான உறவுகள், சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இடையே பதற்றம் மற்றும் மோதலுக்கான ஆதாரங்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு இடையே நிலவும் அதிகாரப் போட்டிகளும் கருத்து வேறுபாடுகளும் தீர்க்கப்படாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது..
தைவானுக்கு அமெரிக்க அதிக அளவு உதவி செய்ய ஆரம்பித்து இருக்கும் நேரத்தில் சீனாவும் கியூபாவில் தனது படைத்தளங்களை நிறுவ ஆரம்பித்துள்ளது கியூபாவிற்கும் அமெரிக்காவிற்கும் உள்ள தூரம் 90 மைல்கள்தான் சீனா இப்படி படைத்தளங்களை நிறுவுவதன் மூலம் நினைத்த நேரத்தில் அமெரிக்காவின் கதவுகளைத் தட்ட இயலும் .
இந்த இரண்டு நாடுகளின் பிரச்சனைகள் அடுத்த ஆண்டில் உச்சம் தொடலாம் அதன் காரணமாகச் சீனா தைய்வானுக்கு இடையே பெருத்த சண்டைகள் ஏற்படலாம் அது அமெரிக்கச் சீனப் போராக மாறும் என்பது நிச்சயம்..
இதனை நன்கு உணர்ந்த அமெரிக்க இனிமேல் அந்த பிராந்தியத்தில் சீனாவிற்கு அருகில் இருக்கும் சவூதி அமெரிக்காவிற்குக் கைகொடுக்காது என்பதைப் புரிந்து கொண்ட அமெரிக்கா சீனாவிற்கு இன்னுமொரு செக் வைப்பதற்காக இந்தியாவை தேர்ந்தெடுத்து இருக்கிறது .இதற்குக் காரணம் அந்த பிராந்தியத்தில் சீனாவிற்கு அடுத்த பெரிய படைபலம் பொருந்திய மிகப் பெரிய நாடு இந்தியாதான் அதுமட்டுமல்ல இந்தியாவிற்கும் சீனாவிற்கும் உள்ள உறவு உலகறிந்தது .அதனால் இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்ளத்தான் இந்தியப் பிரதமரை அமெரிக்காவிற்கு அழைத்து மிக முக்கியத்துவும் கொடுத்து மிக சிறப்பான வரவேற்பும் கொடுத்து இருக்கிறது.. இது மோடியின் சாதனை என்று இந்தியாவில் பேசப்பட்டாலும் இது உண்மை இந்த நேரத்தில் மோடிக்குப் பதில் இந்தியப் பிரதமராக ஒரு குப்பனோ சுப்பனோ இருந்தால் கூட அவருக்கும் இந்த நேரத்தில் அமெரிக்க வரவேற்று சிறப்புச் செய்து இருக்கும் என்பதுதான் உண்மை
இறுதியாக இந்தப் பயணத்தின் முடிவு எதுவாக இருந்தாலும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு இரு நாடுகளுக்கும் ஒட்டுமொத்த உலக சமூகத்திற்கும் முக்கியமானது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விஜயம் இந்த உறவின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முடிவில், மோடியின் அமெரிக்கப் பயணத்தின் நோக்கம் மற்றும் விளைவு இன்னும் விவாதத்திற்குத் திறந்தே உள்ளது. எவ்வாறாயினும், இந்த விஜயம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெளிவாகிறது, மேலும் அதன் தாக்கம் வரும் நாட்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
ம்ம்.... நடக்கட்டும்...
ReplyDelete