Saturday, June 17, 2023

 செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்?
   

avargal unmaigal



 செந்தில் பாலாஜி குற்றவாளி அவர் தண்டிக்கப்பட வேண்டும் அவருக்காக யாரும் குரல் கொடுக்கக் கூடாது என்று சொல்லும் நடுநிலைவாதிகள் செந்தில் பாலாஜி போன்று குற்றம் செய்த அரசியல் வாதிகள் எல்லாம் கண்டிப்பாகத் தண்டிக்கப்படவேண்டும் என்று ஏன் பேசுவதில்லை. இந்தியாவில் உள்ள எல்லா அரசியல்வாதிகளும் செந்தில் பாலாஜி போன்று சம்பாதித்தவர்களே அதில் ஒருவர் கூட விதிவிலக்கு கிடையாது. அது போல அரசியல்வாதிகள் மட்டுமல்ல அரசு அலுவலங்களில் வேலை பார்க்கும் அநேக பேர் அயோக்கியர்களே அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க எது தடுக்கிறது


செந்தில் பாலாஜி பாஜகவில் சேர சம்மதித்தால் நீதிமன்றத்தின் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும். செந்தில் பாலாஜி விருப்பப்படி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வைத்துத்தான் அவருக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் அதுவரை காவல்துறை அவரை எந்தவித தொந்தரவு பண்ணாமல் இருக்க மாநில மத்திய அரசுகள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்


அடேய் செந்தில் பாலாஜி கேஸில் ஆதரவு நிலை எதிர்ப்பு நிலை என்று சமுக இணைய தளங்களில் களமாடிக் கொண்டு கையில் இருக்கும் 2000 ரூபாயை மாற்ற மறந்துடாதிங்கடா


கடந்த சில தினங்களாக பாஜக & திமுக அடித்துக் கொள்வதெல்லாம்  செந்தில் பாலாஜி  என்ற  குற்றவாளி  தண்டிக்கப்படவேண்டும் படக் கூடாது என்பதற்கான பிரச்சனைக்காக அல்ல அந்த குற்றவாளியை யார் பக்கம்  தக்க வைத்துக் கொள்வதற்கான  என்ற பிரச்சனைக்காகத்தான்


நல்ல உடல் நலத்துடன் இருக்கும் அரசியல்வாதிகள் குற்றங்கள் காரணமாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் போது உடல் நலக் குறைவு என்று பொய்  சொல்லி போலி சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் அதே சமயத்தில்  நல்ல உடல்நிலை உள்ளவர்கள் சமுக குற்றங்கள் செய்ததற்காக விசாரணைக்கு அழைத்தது செல்லப்படும்  போது உண்மையிலே வழுக்கி விழுந்து கால் கைகளை உடைத்ததற்காகச் சிகிச்சை அளிக்கப்படுக்கிறது. இதனால் அரசிற்கு வீணாகச் செலவு ஏற்படுகிறது இதைச் சமாளிக்க இனிமேல் மருத்துவத்துக்குப் படித்தவர்களையே காவலராக நியமிக்க அரசு ஏற்பாடு செய்யலாம்தானே


மத்திய அரசு மறைமுகமாகச் செந்தில் பாலாஜிக்குக் கருணை காட்டுகிறது புத்தி இருக்கிற புள்ளைப் பிழைத்துக் கொள்ளும்.

 


செந்தில் பாலாஜியைப் பார்க்க மருத்துவமனை வாராத அமைச்சர் #பிடி.ஆர்.பழனிவேல்ராஜன் என்று சிலர் கேள்விகள் எழுப்புகிறார்கள்
அவர்களுக்குச் சொல்லுவது சாக்கடைக்கு அருகில் சந்தனம் கிடைக்காது என்பதுதான்


 
 


ஐசியுவில் இருக்கும் ஒருவர் எப்படி எழுந்து உட்கார முடியும்.. செந்தில் பாலாஜி  நடிப்புக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம்" - ஜெயக்குமார்

அப்ப இந்த அம்மாவிற்கு ஆஸ்கர் விருது கிடைக்க நீங்கள் குரல் கொடுக்காதது ஏன் கோபாலு?


எங்காத்து பொண்ணுக்கு உள்ள தைரியம் கூட செந்தில் பாலாஜிக்கு இல்லை பார்த்தீங்களான்னா
 



 


நாட்டுல எவ்வளவு பிரச்சனைகள்.. இந்த நேரத்தில் இந்த ஒய்.ஜி.மதுவந்தி அமைதியாக இருப்பது நாட்டு நலனுக்கு உகந்தது அல்ல

அன்புடன்

மதுரைத்தமிழன்

1 comments:

  1. பிறக்கும் போதே மூளை வலிமை உள்ள மாமீஸ், மாமாஸ், அமைதி காப்பது நாட்டிற்கு பேராபத்து...!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.