இப்படிப்பட்டவர்கள் பலர் உங்களை சுற்றி இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
பிரகாசிப்பதற்காக மட்டுமே வாழ்ந்த மின்மினிப் பூச்சியை ஒரு பாம்பு துரத்த ஆரம்பித்தது.
தன்னை துரத்திய பாம்பை நிறுத்தி மின்மினிப் பூச்சி நான் உங்களிடம் மூன்று கேள்விகள் கேட்கலாமா என்றது
அதற்கு பாம்பு சரி கேள் என்றது.
என்னை சாப்பிட விரும்புகிறீர்களே நான் உங்கள் உணவுச் சங்கிலியைச் சேர்ந்தவனா?
பாம்பு “இல்லை” என்றது.
நான் உனக்கு ஏதாவது கெடுதல் செய்தேனா?
பாம்பு “இல்லை” என்றது.
பிறகு ஏன் என்னை விழுங்க நினைக்கிறீர்கள்?
பாம்பு பதிலளித்தது, ஏனென்றால் நீ எப்போதும் பிரகாசிப்பதைப் பார்த்து என்னால் தாங்க முடியால
கதையின் கருத்து:
பெரும்பாலும், சிலருக்கு நீங்கள் ஜொலிப்பதைப் பார்க்க சகிக்க முடியாது, அதனால்தான் அவர்கள் பாம்புகளைப் போல அமைதியாகவும், உங்களை அழிக்கத் தயாராகவும் இருக்கிறார்கள்!
இப்படிப்பட்டவர்கள் பலர் பல உறவுகளில் உங்களை சுற்றி இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அதனால் நீங்கள்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
கசப்பான உண்மை...
அன்புடன்
மதுரைத்தமிழன்
சரிதான்...
ReplyDeleteசூப்பர்....
ReplyDeleteகீதா
அனைத்து வித மனிதர்களும் நம்மைச் சுற்றி...
ReplyDeleteபிறர் நன்கு இருப்பதை பார்க்க பிடிக்காத மனிதர்கள் இருக்கிறார்கள்தான்.
ReplyDelete