Friday, June 16, 2023

 செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும்

 

avargal unmaigal


துர்கா ஸ்டாலின் : என்னங்க நான் கும்பிட்ட தெய்வம் என்னை கைவிடலீங்க..

ஸ்டாலின் : என்னம்மா சொல்லுறே?

துர்கா ஸ்டாலின் : நாம் பையன் முதல்வராவதற்குச் செந்தில் பாலாஜி வருங்காலத்தில் இடைஞ்சலாக இருக்கலாம் என நினைத்தேன் அதனால் அவர் இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று வேண்டினேன் அதற்குக் கடவுள் செவி சாய்த்து அவரை கைது பண்ண வைச்சிட்டாருங்க...

ஸ்டாலின் : அம்மா தாயே அதே கடவுள்கிட்ட போய் சீக்கிரமா அவர் பாஜகவுல போய்ச் சேர்ந்திடக் கூடாது என்று வேண்டிக்கோம்மா அப்படி சேர்ந்திட்டால் அது மிகப் பெரிய ஆபத்துமா. நம்ம புள்ளை மட்டுமல்ல நானும் கூட முதல்வராகத் தொடர்ந்து இருக்க முடியாத நிலை ஏற்படலாம்மா



முதல்வர் ஸ்டாலின் போடும் திட்டங்கள் எல்லாம் முன்னோக்கு திட்டங்களாகத்தான் இருக்கும்.

அப்படியா எதை வைச்சு சொல்லுறே?

சிறைச்சாலை உணவு மெனுவில் சிறப்பான மாற்றம் கொண்டு வந்தார் அல்லவா?

ஆமாம் அதற்கு என்ன?

அவருக்குத் தெரியும் செந்தில் பாலாஜி  ஜெயிலுக்கு போவார் என்று அதனால்தான் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார் யார் கண்டா அவருக்கு அடுத்தபடியாக பல் பேர் உள்ளே சென்றாலும் செல்லலாம் அல்லவா?

இந்திய தொலைக்காட்சி சேனலில் நடத்தப்படும் அடுத்த சூப்பர் ஸ்டாருக்கான தேடுதல் போட்டியில் இது வரை முன்னிலை வகித்த மோடியை  பின் தள்ளிவிட்டு செந்தில் பாலாஜி முன்னணிக்கு வந்து இருக்கிறார்.. இப்போதுதான் போட்டி  மிகக் கடுமையாகி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது... தொடர்ந்து  இணைப்பில் இருங்கள்......


செந்தில் பாலாஜிக்கு இருப்பதெல்லாம் இரண்டு வழிதான் ஒன்று  நான் திராவிடன் என்று சொல்லிக்கொண்டு கோர்ட்டு கேஸுன்னு அலைகிறது அல்லது எதிர்கால இந்தியாவிற்கு மோடிதான் சிறந்த தலைவர் என்று சொல்லி சரண்டர் அடையறது. பிழைக்கத் தெரிந்தவன் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுப்பான் . மேலும் செய்திகளுக்குத் தொடர்ந்து  இணைப்பில் இருங்கள்......




கங்கையில் குளித்தால் பாவங்கள் போகும் என்பது மூடநம்பிக்கை.  ஆனால் பாஜகவில் சேர்ந்தால் குற்றங்கள் எல்லாம் இல்லாமல் போகும்  என்பதுதான் பகுத்தறிவு இதுதான் செந்தில் பாலாஜிக்குத் தெரிய வேண்டிய விஷயம்




கொசுறு : கலைஞரின் சாதனைகளுக்காக அவர் நினைவாகக் கடலில் அரசு செலவில் பேனா சிலை வைக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர் குடும்பத்தினரின் நிதியிலிருந்தோ அல்லது கட்சியின் நிதியிலிருந்தோ கலைஞர் எழுதி வெளியிட்ட புத்தகங்களையோ  அல்லது அவரின் பேச்சுகளையோ  அச்சிட்டு இலவசமாகப் பொதுமக்களுக்கோ அல்லது பள்ளி மாணவர்களுக்கோ இலவசமாக அச்சிட்டுக் கொடுக்கலாம்தானே அதனால் அவர் என்ன ஆண்டியாக ஆகிவிடப் போகிறாரா என்ன? கலைஞரின் கருத்துக்கள் சீர்திருத்தக் கருத்துக்கள் என்றால் அதை இந்த தலைமுறையும் அதை கற்றுக் கொண்டு முன்னேறலாம்தானே??


அன்புடன்
மதுரைத்தமிழன்



2 comments:

  1. இந்த நேரம் பார்த்து நெஞ்சுவலி வருகிறதே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.