Saturday, June 24, 2023

எழுத்தாளர் அபிலேஷ் சந்திரன் செய்வது சரிதானா?

 

avargal unmaigal





உயர்ந்த குடியில் பிறந்த ஒருவர்( உயர்ந்த குடியில் பிறந்தவர் என்று சொல்லும் போது அவர் மிக வசதியான குடும்பத்தில் உள்ளவர் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இங்கு உயர்ந்த குடியில் பிறந்தவர்  என்று குறிப்பிடுவது நல்ல பண்புகள் நிறைந்த குடும்பத்தில் உள்ளவர் என்பதைக் குறிப்பதாகும்) திருமணம் செய்ய முடிவு செய்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் முடிந்த சில காலம் கழித்து அவர் மனைவியுடன் மகிழ்ச்சியாக இல்லை.  இது பற்றி பலரும் அவரிடம் கேட்ட போது நான் என் மனைவி பற்றி யாரிடமும் பேசுவதில்லை அப்படிப் பேசுவது அநாகரிகம் என்று சொன்னார்.


ஓர் ஆண்டிற்கு அப்புறம் அவர் விவகாரத்து செய்து கொண்டார்.. அப்போது பலரும் அவரிடம் வந்து காரணம் கேட்டார்கள்  அந்த பெண்ணை பற்றி அறிந்து கொள்ள முயன்றார்கள். அப்போது அவர் எனக்குச் சம்பந்தமில்லாத பெண்ணை பற்றி நான் யாரிடமும் பேசமாட்டேன் என்று கூறினார்

இதுதான் உண்மையான ஆணிற்கு அழகு அது ஆண்மையும் கூட

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண  நன்னயம் செய்து விடல்” எமக்குத் துன்பம் செய்தவருக்கும் நாங்கள் நன்மை செய்வதே உயர்பண்பு. இதன்மூலம் நமக்குத் துன்பம் தந்தவரே வெட்கி, தமது அறியாமையைஅகற்றித் திருந்தி விடுவார்

உயர்ந்த குடியில் பிறந்த ஒருவரின் செயல் இப்படித்தான் இருக்கும்

இதுதான் எனது  பொது எண்ணமும் உங்களின் எண்ணமாகவும் இருக்கும்/  இருந்தாலும் இந்த பொது எண்ணத்திற்கும் அபிலேஷின் தனிப்பட்ட செயல்களுக்கும் இது பொருந்தாமல் இருக்கலாம்


எழுத்தாளர் அபிலேஷ சந்திரன் அவர்களின் பதிவுகளை நேரம் கிடைக்கும் படிக்கும் போது அவர் ஒரு  நல்ல மனிதராகவே எனக்கு தோன்றுகிறார். இருந்த போதிலும் ஒருவரின் எழுத்தை வைத்து அவரின் குணத்தைத் தீர்மானிக்க முடியாது. அபிலேஷ தனது தனது திருமண வாழ்க்கையைப் பற்றி பொதுவெளியில் பேசுவது  நல்ல பண்பா என்று பார்க்கும் பொழுது அவர் திருமண வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார் மேலும் அவர் எழுத்தாளர் என்பதால் அவர்  தனது எண்ணங்களை  எழுத்தாகச் சமுகத்தில் எடுத்து வைக்கும் போது அவரது  வாழ்க்கையைப் பற்றியும் பொது வெளியில் எடுத்து வைக்கிறார்.


காரணம்  பெண்ணுக்கு ஒரு நீதி ஆணுக்கு ஒரு நீதி என்றுதான் நீதிமன்றம்  செயல்படுகிறதே தவிர இதுவரை சம நீதியாக பணியாற்றவில்லை என்ற அவரின் ஆதங்கத்தை பொது வெளியில் எடுத்து வைக்கிறார் நீதிமன்ற செயல்பாடுகளில் அவருக்குத் திருப்தி  இல்லை.. சம
நீதிக்காகச் செயல்படும் நீதிமன்றம் அதைத் தவறவிடும் போது அபிலேஷ் அதைச் சமுகத்திடம் எடுத்து உரைத்து சமுகம் என்நினைக்கிறது அதாவது தமக்கு ஒரு நல்ல தீர்ப்பு தரும் என்பது அவரின் எண்ணமாக இருக்கிறது என்பதாகவே எனக்குப்படுகிறது.



அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : ஒரு  நண்பரிடம்  அமெரிக்கர்களின் பண்பும் Vs இந்தியர்களின் பண்பும் பேசும் போது ஆண்கள் பண்பு பற்றி நான் சொன்னது அது தொடர்பாகப் பேசும் போது அபிலேஷ் பற்றிய பேச்சு வந்த போது அவர் பற்றி நான் சொன்ன கருத்துகளும்தான் இங்குப் பதிவாக வெளியிடப்படுக்கிறது


எனது பார்வையில் அமெரிக்கர்களின் பண்பும் Vs இந்தியர்களின் பண்பும் என்று பதிவு ஒரு சில தினங்களில் இங்கு வெளிவரும்.

4 comments:

  1. பொதுவில் பகிர்வது தவறாக தோன்றுகிறது....

    ReplyDelete
  2. பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் போலி உலகத்தில் வாழ்கிறார்கள் . பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் எதோ ஒரு ஆதாயத்துக்காக தனி மனிதனையோ அல்லது அவர்கள் சார்ந்த கட்சியை துதிப்பவர்கள்தான் .
    அபிலேஷ சந்திரன் அல்லது ஜெயமோகன் அல்லது சாரு போன்றவர்களுக்கு மொழி புலமை இருக்கலாம் . அதற்காக அவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று தூக்கி கொண்டாடும் ரகம் இல்லை . நம்மை போலவே அவர்களும் பணத்தின் பின்னால் ஓடுபவர்கள் . மிக நல்லவர் என நான் நினைத்த சுகி சிவமே திமுகவில் சேர்ந்துவிட்ட போது யாரையும் நம்ப முடியவில்லை

    திமுகவையோ பாஜகவையோ ஆதரிப்பவர்கள் நல்லவர்களாக இருக்க முடியாது . நமக்கு தெரிந்தது அபிலேஷ சந்திரனின் ஒரு பக்கம்தான். அபிலேஷ சந்திரனுக்கு உடலிலே நீரழிவு நோய் மற்றும் சில உபாதைகள்
    கட்டுமர குடும்பம் மற்றும் ராகுல் குடும்பம் கொள்ளையடிப்பதை ஆதரிக்கும் மனப்பான்மை . அதையே மோடி கும்பல் செய்தால் எதிர்ப்பது . இந்த லட்சணத்தில் தான் ஒரு புத்திசாலி அடுத்தவர்கள் முட்டாள் என்று நினைக்கும் மனப்பான்மை அந்த ஆளை பற்றி பேசி நேரத்தை வீணடிப்பது மடமை

    ReplyDelete
  3. I used to read Abilash's blog. In all his recent blogs, even though he could be the victim in his divorce, he is trying to create an illusion that in the society as a whole, the woman is at fault for every divorce, and men as a whole are being oppressed/discriminated by women.
    I think he belongs to some men's right organization or he is an incel .

    ReplyDelete
  4. இவரைப் பற்றி எனக்குத் தெரியாது வாசித்ததும் இல்லை. ஆனால் பொதுவாகவே ஒரு ஆணும் சரி பெண்ணும் சரி தங்கள் விவாகரத்து அல்லது இப்படியான விஷயங்கள் குறித்து வெளியில் பேசாமல் இருப்பதுதான் அழகு. அப்படி வெளியில் பேசும் போது நமக்குத் தெரிவது ஒரு பக்கம் தான். இதில் கொஞ்சம் புகழ்பெற்றவர்களாக இருந்தால் அவ்வளவுதான்.....இருவரும் மாற்றி மாற்றி மீடியாவில் அறிக்கை கொடுத்துப் பேசினால் அதுவும் மீடியாவில் அதற்கென்றே இருக்கும் மீடியா கூட்டம்...அவர்கள் ஒரு வேளை மனம் மாறி சேர்ந்திருக்கும் வாய்ப்பும் கூடப் போய்விடும் அந்த அளவிற்கு மோசமாகச் செயல்படுகிறது சில மீடியாக்கள் மற்றும் சமூகம்.

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.