Saturday, July 1, 2023

 மருத்துவர் தினமும் மனநோயாளிகளான பொது மக்கள் சொல்லும் வாழ்த்துக்களும்

 

avargal unmaigal



இன்று இணையம் வந்தவுடன் கண்ணில் தென்பட்டது எல்லாம் மருத்துவர் தின பதிவுகள்தான். பலரும் பதிவு எழுதி மருத்துவர்களை வாழ்த்திக் கொண்டிருந்தனர்.. ஆனால் இவர்களில் ஒருவர் கூட நிச்சயம் அவர்களின் மருத்துவர்களை அழைத்து தொலைப்பேசியிலோ அல்லது நேரிலோ வாழ்த்துக்கள சொல்லி இருக்கமாட்டார்கள் . இவர்களைப் பார்க்கும் போது தோன்றுவது எல்லாம் காலையில் எழுந்ததும் சிறுநீர் கழிக்கச் செல்வது போலத் தூங்கி எழுந்ததும் சமுக இணையதளங்களில் ஏதாவது எழுதிப் பதிவிடுகிறவர்கள் மாதிரிதான் தோன்றுகிறார்கள் .அதுமட்டுமல்ல பலருக்கு என்ன எழுதுவது என்பதே தெரியாமல் முழிக்கும் சமயத்தில் இப்படிப்பட்ட தினங்கள் வந்து அவர்களுக்கு எழுத கண்டெண்ட் கொடுக்கின்றன என்பதைத் தவிர ஒருவரும் மனமார்ந்து யாருக்கும் வாழ்த்துக்கள்  சொல்வதில்லை என்பதுதான் உண்மை


மருத்துவர்கள் நம் உயிர் காக்கப் போராடுகிறார்கள்தான் ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு நாம் இணையதளத்தில் ஏதோ எழுதிக் கிறுக்குவதன் மூலம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்  சொல்வதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

அடேய் இப்படி நீங்கள் எழுதுவது ஏதும் அவர்களை மகிழ்விக்காது என்பதையறியாத அறிவிலிகளா நீங்கள். ஏது அவர்களை மகிழ்விக்கும்.. அவர்களை நேரில் சந்தித்தோ அல்லது அழகான வாழ்த்து அட்டை அனுப்பி அதில் அவர்கள் உங்களுக்கு உதவியதை பற்றி ஒரு சில வரிகள் எழுதி அனுப்பி இருந்தால் அதைப் படிக்கும் அவர்களது மனம் நிச்சயம் மகிழ்ச்சி கொள்ளும். அல்லது அவர்களுக்கு நம்மால் முடிந்த பரிசுப் பொருட்களை அனுப்பினால் அது மிகச் சிறிதாக இருந்தாலும் அவர்களது மனம் மகிழும்

மக்கள் மட்டுமல்ல அரசாங்கமும் இப்படி மோடி வாயால் வடை சுடுவது மாதிரி வாழ்த்துக்கள் சொல்லாமல் ,மருத்துவர்களுக்கா ஏதாவது சிறிய அளவிலாவது செய்ய வேண்டும் .அரசாங்கம் அரசு ஹாஸ்பிடலில் வேலை செய்யும் மருத்துவர்களுக்கு ஒருவேளையாவது இந்த தினத்தில்  நல்ல உணவை உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்து வழங்கலாம் அல்லது அவர்களுக்குப் பயன்படும் மருத்து உபகரணங்களை கிப்டாக வழங்கலாம் அல்லது ஒரு நாள் ஊதியத்தை கிப்டாக தரலாம் இப்படி ஏதாவது செய்து  அவர்களை மகிழ்விக்கலாம்


பொது மக்களும் தங்களுக்கு உதவிய தனியார் மருத்துவ மனை மருத்துவர்களுக்கு மேலே சொன்ன மாதிரி ஏதாவது உதவலாம். இப்படிச் செய்து அவர்களை வாழ்த்துவதுதான் அவர்களை மகிழ்விக்குமே தவிர இணைய தளத்தில் மொக்கையான ஒரு பதிவு எழுதி வாழ்த்துவது என்பது தலையிலிருந்து உதிர்ந்து போன ரோமம் மாதிரிதான் யாருக்கும் பயன் இருக்காது

இன்று மருத்துவர் தினத்திற்கு வாழ்த்து சொல்லும் பயபுள்லைங்க யாரென்று பார்த்தால் அவர்கள்தான் மருத்துவர்களை அவர்களின் சொத்துக்களை ஏமாற்றிப் பறிப்பவர்கள் என்பது மாதிரி எழுதிப் பதிந்தவர்களாகத்தான் இருப்பார்கள் அப்படிப்பட்டவர்கள் இன்று மருத்துவர் தினம் என்பதால் தங்களை நல்லவர்களாகக் காட்டிக் கொள்ள இன்று எழுதிப் பதிந்து கொண்டிருக்கிறார்கள்.


இப்படிதான் ஆசிரியர் தினம் அன்று ஆசிரியர்களுக்கு மனம் உருகிப் பதிவு எழுதி வாழ்த்து சொல்லுபவர்கள்தான்  கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து கொண்டு சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் மீது பொறாமை கொண்டு அந்நியனாக  மாறி அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தைக் கட் செய்யவேண்டும் என்று சத்தம் எழுப்பினார்கள். இப்படித்தான் செவிலியர் தினம், இராணுவிரர்கள் தினம் இப்படி பலவற்றைச் சொல்லிக் கொள்ளலாம் இந்த தினங்கள் எல்லாம் பதிவு எழுதி வெளியிடும் தினங்களாக மாறித்தான் இருக்கின்றனவே தவிர உண்மையிலே அவர்களின் தொழிலை மதித்து வாழ்த்து சொல்லும் தினங்களாக எனக்குத் தெரியவில்லை

இனிமேலாவது சொல்வதற்குத் தகுந்த மாதிரி  செயல் மூலம் வாழ்ந்து காட்ட முயலுங்கள் .அப்படி இல்லையென்றால் நீங்கள் பேசுவது எழுதுவது எல்லாம் பைத்தியக்கார ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிய நோயாளிகள் பேசுவது போலத்தான். அவர்களுக்கும் உங்களுக்கும் வேறுபாடு சிறிதுமில்லை. அவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள வேறுபாடு அவர்கள் ஹாஸ்பிடலில் இருந்து சிகிச்சை பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள் நீங்கள் அப்படிப்பட்ட சிகிச்சை எடுக்காமல் நோயாளிகளாகத் திரிந்து கொண்டு இருக்கிறீர்கள் அவ்வளவுதான். டாட்

அன்புடன்
மதுரைத்தமிழன்


3 comments:

  1. அந்த வேறுபாடு பற்றி சொன்னது செம...

    ReplyDelete
  2. பெரும்பாலான மருத்துவர்களுக்கு மருத்துவம் ஒரு பணம் கொழிக்கும் தொழில். சேவை மனப்பான்மையே மிகவும் அரிது . அந்த ஏமாற்று மருத்துவர்களுக்கு தேவை உங்கள் பணம் . வாழ்த்து அல்ல

    ReplyDelete
  3. நல்ல பாயின்ட். எனக்கு இந்த தினங்களில் நம்பிக்கை இல்லை,

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.