கிறுக்கலாக எழுதியவைகளில் நல்ல கருத்துகளும் ஒழிந்து இருக்கலாம் படியுங்கள் கண்டிபிடிங்க
கணவன் மனைவி உறவு என்பது வெளி உலகத்தில் இருந்து வரும் மன அழுத்தத்தை சமாளிக்க ஒருவருக்கொருவர் உதவுவதாக இருக்க வேண்டுமே தவிர தாங்களே தேவையற்ற மன அழுத்தத்தை ஒருவர் மீது மற்றவர் சேர்ப்பதில் இல்லை
தனக்கோ , தன் சாதிக்கோ ,மதத்திற்க்கோ அல்லது தன் இனத்திற்கு பாதிப்பு ஏற்படும் சமயத்தில் அல்லது கேலிக்குரியதாக்கப்படும் சமயத்தில் நமக்கு எழுந்து வரும் கோபத்தை போலத்தானே மற்றவர்களுக்கோ , மற்ற சாதி மத இனத்திற்கோ எழும்.
ஒரு காலத்தில் பெரிய ப்ரிண்ட் ஊடகங்கள் வெளியிடும் மற்றும் சேனல் ஊடகங்களில் விவாதிக்கப்படும் செய்திகளை வைத்தும் பலரும் சமுக இணையதளங்களில் எழுதிப் ,பேசி விவாதித்து வருவார்கள் ஆனால் இன்றைய நிலையில் அது தலைகீழாக மாறி இருக்கின்றது .இன்று சமுக இணையதளங்களில் பேசப்படும் விஷயங்களை எடுத்து நாட்டில் உள்ள மிகப் பெரிய ஊடகங்கள் எழுதியும் விவாதித்தும் வருகின்றது. #என்ன ஒரு மாற்றம்
நீங்கள் யாரையும் உங்களை விட பலவீனமானவர் அல்லது குறைவான முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று ஒருபோதும் கருத வேண்டாம். சிலர் கோபப்படுவதில் தாமதம் காட்டுவார்கள், அவர்களை எருமைமாட்டு தோல் என்று நீங்கள் தவறாக மதிப்பிடலாம், மேலும் அவர்களை அவமதிப்பதைப் பற்றி கவலைப்படத் தவறிவிடலாம். ஆனால் அவர்களின் மரியாதை மற்றும் பெருமையை நீங்கள் புண்படுத்தினால், அவர்கள் கோபத்தில் தாமதம் காட்டும்போது திடீரெனவும் தீவிரமாகவும் தோன்றும் வன்முறையால் உங்களை மூழ்கடிப்பார்கள்.
நீங்கள் யாரையாவது நிராகரிக்க விரும்பினால், அவர்களின் செயல்கள் துடுக்குத்தனமானதாகவோ அல்லது கேலிக்குரியதாகவோ இருப்பதாக நீங்கள் உணர்ந்தாலும், பணிவாகவும் மரியாதையுடனும் அதைச் செய்வது நல்லது. நீங்கள் அவர்களை நன்கு அறியும் வரை அவர்களை அவமானத்துடன் நிராகரிக்காதீர்கள். அமைதியாக நிதானமாக செயல்படுபவர்கள் எரிமலையைப் போல வெடிக்க கூடியவர்கள்
உங்கள் எதிர்காலத்தை முன்னறிவிக்கும் உங்கள் கைகளில் உள்ள கோடுகளை ஒருபோதும் நம்பாதீர்கள். ஏனெனில், கை இல்லாதவர்களுக்கும் எதிர்காலம் உண்டு. உன்மீது நம்பிக்கை கொள்
நாய்க்கு நாலு நாட்கள் உதவுங்கள் உணவிடுங்கள் அது வாழும் காலம் முழுவதும் உங்களை நினைவில் வைத்திருக்கும் ஆனால் மனிதர்களுக்கு உதவி பாருங்கள் உதவி கிடைத்ததும் நாலு நாட்களிலேயே மறந்துவிடுவார்கள் இது நாய்க்கும் மனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம் #அனுபவ உண்மை #Fact Verified
சாதிகள் மட்டும் இல்லையென்றால் நிறைய தலைவர்களின் பிழைப்புக்கு வழி இல்லாமல் போயிருக்கும் ஏன் நிறைய தலைவர்களே இருந்திருக்க மாட்டார்கள் அது மட்டுமல்ல சமுக இணையதளங்களில் எழுத கண்டெண்ட் இருக்காது
அன்புடன்
மதுரைத்தமிழன்
உதவி கிடைக்கும் வரை பேசிய பேச்சுக்கள் மறந்து போகும், உதவி கிடைத்தவுடன் என்ன பெரிதாக செய்து விட்டாய் ? என்று கேட்கும் காலத்தில் இருக்கிறோம். காலத்தில் செய்த உதவிகள் மறந்து போகிறது.
ReplyDeleteஉண்மைகள்...
ReplyDelete