Saturday, August 5, 2023

 உங்கள் கையில் உள்ள கப்பை போலத்தான் உங்கள் மனதும்

  

avargal unmaigal



நீங்கள் ஒரு காபி கப்பைக் கையில் வைத்துக் குடித்துக் கொண்டு இருக்கும் போது உங்கள் அருகில் வரும் ஒருவர்  மோதியதால் உங்கள் கை அசைந்து  அங்கு உள்ள இடங்களில் காபி கொட்டி விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

அப்போது உடனே உங்களிடம் ஏன் காபியைக் கொட்டினாய் என்று கேட்டால்? உங்களின் பதில்  யாரோ ஒருவர் என் மீது மோதினர்  அதனால்தான் என்று பதில் சொல்லுவீங்க

அது சரியான பதிலா என்று பார்த்தால் சரியாகத்தான் தோன்றும் ஆனால் தவறான பதில்

காரணம்  உங்கள்  கோப்பையில் காபி இருந்ததால்  நீங்கள் காபியைக் கொட்டினீர்கள் ஆனால்  கப்பில்  டீ இருந்திருந்தால், நீங்கள் டீயைத்தான் கொட்டியிருப்பீர்கள். கப்பிற்குள் எது இருக்கிறதோ அதுதானே வெளியே கொட்டும்.

அது போலத்தான் வாழ்க்கை நிகழ்வுகளும்


வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்து  உங்களை உலுக்கும் போது (அது நடக்கும்), உங்களுக்குள் உள்ள அனைத்தும் வெளியே வரும்.


வாழ்க்கை கடினமாக இருக்கும்போது,   நாம்  நம்  கப்பில்  என்ன இருக்கிறது என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்...

​​​மகிழ்ச்சி, நன்றி, அமைதி மற்றும் பணிவா? அல்லது கோபம், கசப்பு, பாதிக்கப்பட்ட மனநிலை மற்றும் வெளியேறும் போக்கா?  இதில் என்ன கொட்டுகிறது என்பது உங்கள் கப்பில் என்ன இருக்கிறது என்பதை பொறுத்துத்தான் கொட்டும்


இதைப் படிக்கும் போது இது ஏதோ சிறுபிள்ளைகளுக்குச் சொல்லும் (மாரல்)  நீதி போதனை கதைகள் போல நினைத்துக் கடந்து விட வேண்டாம்.

இதை இன்றைய இந்தியாவில் நடக்கும் சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் உங்களுக்கு நாட்டின் நிலை புரியலாம்


உங்களுக்கான காபி கப்பில் தலைவர்கள்  மத  மற்றும் சாதிய வெறுப்பை துவேஷத்தை வன்மத்தை ஊற்றுகிறார்கள்
  அதைப் பருகிக் கொண்டிருக்கும் நீங்கள் நாட்டில் பிரச்சனைகள் உலுக்கும் போது உங்கள் கப்பில் என்ன நிறைந்திருக்கிறதோ அதையே கொட்டுகிறீர்கள்


வாழ்க்கை  நமக்கு ஒரு கப்பை  வழங்கும் போது , அதை எப்படி நிரப்புவது என்பதை நீங்கள் தேர்வு செய்யுங்கள் .மற்றவர்களை தேர்வு செய்ய விடாதீர்கள்  அவர்கள் உங்கள் மதிப்பிற்குரிய தலைவர்களாக இருந்தாலும் கூட உங்களுக்கு என்ன வேண்டும் என்பது நீங்களே தேர்வு செய்யுங்கள் அவர்களை தேர்வு செய்ய அனுகதிக்காதீர்கள்
.

இன்று நம்முடைய  கப்பை  நன்றியுணர்வு, மன்னிப்பு, மகிழ்ச்சி, உறுதிமொழிகள், நெகிழ்ச்சி, நேர்மறை  இரக்கம், மென்மை மற்றும் அன்பு. சகோதரத்துவம் ஆகியவற்றால்   நிரப்புவதற்கு முயற்சி செய்வோம்;  மற்றவர்கள் மீது அதை மட்டுமே கொட்டுவோம்


மக்களே உங்களுக்குக் கொஞ்சமாவது சிந்திக்கும் திறன் இருந்தால் சற்று நிதானமாக யோசியுங்கள்...


இதற்கு மேல் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்


பதிவு நாள் : ஆகஸ்ட் 5 2023
நேரம் : 9:23 AM ஈஸ்டன் நேரம்

2 comments:


  1. நன்றாக சொன்னீர்கள்.
    அருமையான பதிவு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.