Saturday, August 26, 2023

 

avargal unmaigal



என்னதான் நாம் திராவிட ஆட்சி என்று கேலிகள் செய்தாலும் அவைகள் செய்யும் நல்ல காரியங்களைத் தேசியக் கட்சிகள் கொஞ்சம் கூடச் செய்வதில்லையே?

என்னதான் நாம் திராவிட ஆட்சி என்று கேலிகள் செய்தாலும் அவைகள் செய்யும் நல்ல காரியங்களைக் கொஞ்சம் கவனித்துத்தான் பாருங்கள்.. அவர்கள் தேசிய கட்சிகள் செய்பவற்றை விட மிகச் சிறந்த பல விஷயங்களைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன..


குழந்தைகளுக்கு மதிய சத்துணவுத் திட்டம் அதைக் காமராஜர் கொண்டு வந்தாலும் அது மிகவும் நல்ல திட்டம் பயனளிக்கும் திட்டம் என்பதால் அதைக் கைவிட்டு விடாமல் பலவேறு பெயர்களில் அழைத்தாலும் அதைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் வருகின்றனர்.. அந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி காலையிலும் கொண்டு வந்து இருக்கிறது திராவிட அரசு அதை நிச்சயம் நாம் பாராட்டத்தான் செய்ய வேண்டும்.  அங்குக் கொடுக்கப்படும் உணவைப் பற்றி என்ன அங்கேயும் உப்புமாவா என்று கேலி சத்தம் எழுகின்றது.. வசதியானார்களுக்கு வேண்டுமானால் அது கேலிக்குரிய உணவாக இருக்கலாம் ஆனால் பசித்து பட்டினி கிடப்பவர்களுக்கு அதுவும் குழந்தைகளுக்கு அது தேவாமிர்தம்தான்


இங்கே பட்டினியில் இருப்பவர்களுக்கு உணவு அளித்து கல்வியளிக்கப்படுகிறது.. அதே நேரத்தில் வட மாநிலங்களில் கல்விக் கூடங்களில் குழந்தைகளின் மனதில்  துவேஷத்தை கற்றுத் தருகிறார்கள்  உணவை அளிப்பதற்குப் பதிலாக விஷ விதைகளை மனதில் விதைக்கிறார்கள் அதற்கு ஒரு சான்றுதான்  உபியில் இஸ்லாமிய மாணவரை(குழந்தையை)  மற்ற குழந்தைகளைக் கொண்டு ஆசிரியர் அடிக்கச் சொல்லுவது..

இதற்கு அந்த  ஆசிரியரைக் குறை சொன்னாலும் அந்த ஆசிரியரை அந்த நிலைக்குக் கொண்டு வந்து பாராளுமன்றத்திலே பயங்கரவாதம் குற்றசாட்டபவர்கள் இந்த நாட்டை ஆளுகிறவர்கள் என்பதுதான்  இங்கு கேள்விக்குரிய விஷயம்


கள்ளம் கபடம் அற்றவர்கள் குழந்தைகள் அவர்களிடம் சாதி மத பேதம் எப்போதும் இருந்ததில்லை... ஆனால் அவர்களின் மனதிலும் விஷ விதைகள் விதைக்கப்படுகின்றன  என்றால் நாடு எதை நோக்கிப் பயணப்படுகிறது என்பதை மக்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டிய தருணம் இது


பிரகாசமான காலை பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். இலவச காலை உணவுத் திட்டம் மூலம் தமிழக மாணவர்களின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டுக்கள்.



Bright mornings lead to brighter futures. congratulations to MK Stalin for his commitment to TN students' growth through the Free Breakfast Scheme.

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. நல்லதை பாராட்ட வேண்டும், பாராட்டுவோம். காலை உணவு இல்லாமல் பள்ளிக்கு வந்த குழந்தைகள் காலை கடவுள் வணக்கம் சொல்லும் போது மயங்கிய குழந்தைகள் உண்டு. காலை உணவு தவிர்க்க கூடாது என்கிறார்கள். அது இளமையில் குழந்தைகளுக்கு கிடைப்பது மகிழ்ச்சி.

    சாதி, மதம், பேதம் பார்க்காத குழந்தைகளை இப்படி பார்க்க வைப்பது நல்லது அல்ல.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.