ஞானியின் பாதங்களை இவர்கள் ஏன் விழுந்து வணங்குவது இல்லை?
யோகி ஆதித்யநாத் ஒரு ஞானி என்று பக்தர்கள் நியாயப்படுத்தி வயதான ரஜினிகாந்த், தன்னைவிட வயதில் குறைந்த யோகி ஆதித்யநாத்தின் பாதங்களைத் தொட்டு வணங்கியதில் என்ன தப்பு என்று வக்காலத்து வாங்கும் சங்கிககள். அவர்கள் சொல்வது நியாயம் என்றால் யோகி ஆதித்யநாத் பாதங்களைப் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடியும், திரு. அமித்ஷாவும் யோகி ஆதித்யநாத்தை அடுத்து முறை சந்திக்கும் போது அவரது பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டு கோள் விடுவிப்பார்களா அல்லது அப்போது அந்த ஞானியை விட மோடிஜிதான் பெரிய ஞானி என்று வக்காலத்து வாங்குவார்களா?
Why do they not bow down at the feet of the sage?
உங்களுக்குச் சிறிதளவாவது மூளை இருந்தால் அல்லது நீங்கள் படித்த படிப்பு உங்களை அறிவை செழுமைப்படுத்தி இருந்தால் கொஞ்சம் யோசிக்கச் செய்யுங்களேன்
யோகி சாமியாராக மட்டும் இருந்திருந்தால் அவர் காலில் விழுவது ஒன்றும் தவறில்லை. ஆனால் அவர் அயோக்கிய அரசியல்வாதி என்பதால் அவர் காலில் விழுவது இங்குப் பேசும் பொருளாக இருக்கிறது என்பதுதான் என் கருத்து இதே ரஜினி காஞ்சி மட சாமியார் பாதங்களில் விழுந்து இருந்தாலோ அல்லது சைவ சாமியார்கள் பாதங்களில் விழுந்து இருந்தாலோ யாரும் இதனைப் பெரிதுபடுத்திப் பேசும் பொருளாக்கி இருக்கமாட்டார்கள். கரணம் அவர் மதத் தலைவர்களை வணங்குவதில் தப்பு இருக்காது .இந்த அர்ச்சனைகள் அவருக்குக் கிடைத்து இருக்காது. ஆனால் அவர் விழுந்து வணங்கியது என்னவோ புல்டோஷர் பாபாவிடத்தில் தானே
நமக்கு அடுத்த பிரதமர் யார் என்பதில் சந்தேகம் இருக்கலாம் .ஆனால் சந்தர்ப்பவாதி ரஜினிக்கு அப்படில்லை .அவருக்கு அதில் எல்லாம் மிகத் தெளிவு. பிழைக்கத் தெரிந்த நடிகன் அவரது ரசிகர்களோ பிழைக்கத் தெரியாதவர்கள்
அரசியலில் மதம் என்பது குடித்துவிட்டு ஓட்டுவது போன்றது ; இரண்டும் விபத்துக்களுக்கு வழிவகுக்கும், அவை காயமடையவோ அல்லது உயிரை இழக்கவோ கூடும். இங்குக் காயம் என்பது மனக்காயம் என்றும் உயிர் இழப்பு என்பது பொது வெளியில் செல்வாக்கை இழக்கச் செய்வது என்பதற்கு ஒப்பாகும். இதைக் குடிகாரர்களுக்கு அறிவுரை சொன்ன ரஜினிக்குப் புரிய வேண்டும். குடிகார ரஜினிக்கு வயதான காலத்தில் ஞானம் வந்தது போலச் சாகப் போகும் சமயத்தில் அரசியல் மதம் பற்றி அவருக்குத் தெளிவு கிடைக்கும் என நம்புவோம்
எனக்கென்னவோ அண்ணாமலை கஷ்டப்பட்டு களத்தில் இறங்கி வேலை செய்தாலும் கடைசியில் அப்படியே அசால்டாக சிக்ஸர் அடிப்பது போல ரஜினி வந்து பதவியில் வந்து அமர்ந்துவிடுவார் என நினைக்கின்றேன். கடினமாக உழைத்தவருக்கு பாஜக மத்திய அரசில் ஆட்சி புரிந்தால் ஆளுநர் பதவி கிடைக்கும். இல்லையென்றால் அகிலா புருஷனாக அடக்க ஒடுக்கமாக அடங்கி விடுவார்
கண்ணில் கோளாறு காரணமாக மருந்து போட்டிருந்தேன். அப்போது கடவுள் என்று நினைத்து யோகியின் காலில் விழுந்து வணங்கி விட்டேன் - ரஜினிகாந்த
ரஜினி காந்த் சங்கியா இல்லையா என்று விவாதம் நடத்துவதற்குப் பதில் சந்தர்ப்ப வாதியா இல்லையா என்று விவாதம் நடத்தலாம்
யோகியின் காலில் விழுந்து வணங்கினார் ரஜனிகாந்த் :செய்தி
இந்த வயதிலும் நம் தலைவனுக்குக் குனிந்து நிமிர முடிகிறது... ஆஹா என்னவொரு அற்புதம் : ரஜினி ரசிகர்கள்
யோகியின் காலில் விழுந்து வணங்கினார் ரஜினிகாந்த் :செய்தி
அடே என் வழி தனி வழின்னு சொன்ன ரஜினி இப்ப இவன் நம்ம வழியைப் பின்பற்றி நமக்கு வேட்டு வைத்துவிடுவானோ
வடிவேலுவின் இடத்தை பிடித்துவிட்டார் ரஜினி .எதில் என்று கேட்பவர்களுக்குப் பதில் அரசியலில் என்பதுதான்
நிறத்தில் என்ன இருக்கிறது என்று கேள்வி கேட்பவர்களுக்காக
ஸ்டாலின் மட்டும் வெள்ளை வேஷ்டி சர்ட் போடாமல் காவிக்கலரில் ஆடை அணிந்து இருந்தால் ரஜினி இந்நேரம் அவர் காலிலும் விழுந்திருப்பாரல்ல... ஹும்ம்ம் அப்புறம் இந்த சங்கிகளும் ஸ்டாலினைத் தத்தி என்று அழைக்காமல் மிகப் பெரிய அறிவாளி என்று சொல்லி இருப்பாங்க...
ஜெர்மனியின் நாசிசத்தின் எழுச்சியைப் படித்த பிறகு, இந்தியாவில் நிலைமை இனப்படுகொலையை நெருங்குகிறது என்பதை எவரும் கூற முடியும்.
அன்பின் அடிப்படையில் ஒரு சமுதாயத்தையும் நாட்டையும் உருவாக்க நாம் இப்போது முடிவு செய்ய வேண்டும் இல்லையென்றால் இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
எல்லாம் பணம்...
ReplyDeleteஆனா ஒண்ணு தல, ரஜினியும் சரி நீங்களும் சரி அப்படியேதான் இருக்கீங்க. எந்த மாற்றமும் இல்லை. நம்ம ஜோதி கணேசன் தான் ரொம்ப மாறிப் போயிட்டாரு. "சங்கிகள்" அது இதுனு சொன்னீங்கனா காவிச்சுக்குவாரு. எனக்கு என்ன புரியலைனா, அவருக்கு திடீர்னு ஞானோதயம் வந்து இப்படி மோடி பக்தரானாரா? இல்லை அவரைப்பத்தி நாந்தான் சரியா புரிஞ்சுக்கலையா?னு விளங்கவில்லை.
ReplyDeleteகாலா படம் வந்தப்போ எல்லாரும் ரஜினிய புறக்கணிச்சுட்டாங்க. இனிமே தன்மானத்தமிழன் யாரும் இவரு படத்தைப் பார்க்க மாட்டான்னு சொன்னாங்க.இப்போ என்னடானா ஜெயிலர் னு ஒரு படம் வந்தாலும் வந்ததும் ஆளாளுக்குப் போயி அதே சங்கி, தமிழின துரோகியைப் பார்த்து ரசிக்கிறானுக.
நீங்க என்ன சொல்ல வர்ரீங்க, அந்தாளு காலில் விழுந்தது எதுக்காகனு சொல்றீங்க? வணங்கப்பட்டவர் எதிர்காலத்தில் பெரிய ஆளாயிடுவார்னு இப்போவே ஐஸ் வைக்கிறார்னா? காவி அணிந்தால் ரஜினி உங்க காலில் கூட விழுவாரு. அதையும் சந்தர்ப்பவாதம்னுதான் சொல்லுவீங்களா? :)
"காவிச்சுக்குவாரை" கோபித்துக் கொள்வார்னு வாசிங்க! :)
ReplyDelete