Sunday, August 13, 2023

 

avargal unmaigal


****மாணவர்களிடையே சாதி, இன உணர்வால் ஏற்படும் வன்முறைகளைத் தடுக்க ஒருநபர் குழு அமைப்பு
ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒருநபர் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு******


எங்கள் தலைவரை பார்த்தியா பிரச்சனையை இவ்வளவு சீக்கிரமாக எவ்வளவு சாமார்த்தியமாக சாமளிச்சாரு தலைவண்டா



ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒருநபர் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
நிறையப் பேரை நியமித்தால்  அவர்களுக்குள் சாதியப் பிரச்சனைகள் வரலாம்  என்பதால் தலைவரு இப்படிச் செய்து இருக்கிறாரு

நான் தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் சாதிகள் இருந்தன. மதங்கள் இருந்தன. ஆனால் அப்போது அங்குச்  சாதிய வெறிகளோ மத வெறிகளோ இல்லை. எல்லோரிடத்திலும் அன்பு இருந்தது . மனிதநேயம் இருந்தது. அது எல்லாம் இப்போது எங்கே சென்றன...யாரால் அழிந்தன?????ஏன் இந்த வன்மம்



மணிப்பூருக்குப் பிரதமர் போகவில்லையா என்று கேட்கும் சமுகம்   நாங்குநேரிக்கு முதல்வர் சென்றாரா? செல்வாரா? என்று கேள்வி கேட்காமல் மெளனம் காப்பது ஏன்?

 

avargal unmaigal


ஜெயிலர்  படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநரை நேரில் பார்த்துப் பாராட்டச் செய்த முதல்வருக்கு நாங்குனேர்யில் பாதிக்கப்பட்ட சிறுவனை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல நேரமில்லையாம்....

 

avargal unmaigal


பாதிக்கப்பட்டது மாணவன் மட்டுமல்ல அந்த சமுகமும்தான் அமைச்சரே


பாதிக்கப்பட்ட மாணவனைச் சந்தித்து ஆறுதல் சொல்ல முதல்வரோ அமைச்சர்களோ  நாங்குநேரிக்கு செல்லமா வேண்டாமா என்று யோசிப்பதற்குள் வருங்கால முதல்வர் அண்ணாமலை பாதயாத்திரையைப் பாதியில் நிறுத்திவிட்டு  நாங்குநேரிக்கு  சென்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை

தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சார்ந்த மாணவர்களே வெட்டுப்பட்டு வாருங்கள் அதன் பின் உங்கள் கல்விக்கான செலவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் :திமுக
பிற்படுத்தப்படச் சமுகத்தைச் சார்ந்த மாணவர்களே வெட்டிவிட்டு வாருங்கள் உங்கள் குடும்பங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் சாதியக் கட்சிகள்


நாங்குநேரி சாதியப் பிரச்சனையை உடனடியாக தீர்க்க இமயமலை சென்ற ரஜினி திரும்பி வந்து ஜெயிலர் பட வெற்றிக்கு ரசிகர்களுக்கு இலவச பிரியாணி தருவதாகச் சொன்னாலே போதும்


 
avargal unmaigal


மதத்திற்கு எதிராகத் தீட்டப்படும் இந்த கத்திகள் இறுதியில் பதம் பார்ப்பது என்னவோ  தாழ்த்தப்பட்ட சாதிகளைத்தான்


நாங்குநேரியில் ஏற்பட்ட சாதியப் பிரச்சனைகளால் ஏற்பட்ட துயரச் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு எந்த தமிழக அமைச்சர்களும் செல்லவில்லை. காரணம் தெரியுமா? அவர்கள் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள் என்பதால்தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டது .அவர்களும் குறிப்பிட்ட சாதிய வோட்டுகளால் மட்டுமே வெற்றி பெற்று இருக்கின்றனர். நிலை இப்படி இருக்க இதைக் கெடுத்துக் கொள்ள அவர்களுக்குப் புத்தி என்ன கெட்டா போய் இருக்கிறது நாங்குநேரிக்கு சென்று பிரச்சனைகளைத் தீர்க்க...


ரஜினி பதைபதைப்பு ஜெயிலர் படத்திற்கு விமர்சனம் எழுதி போஸ்ட் போட்டுக்கு கொண்டு இருக்கும் போது அதை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு நாங்குநேரி  நிகழ்வைப் பற்றி எழுதி போஸ்ட் போட ஆரம்பித்து தன்  படத்தை பின்னுக்கு தள்ளவிட்டார்களே என்று

நாங்குநேரியில் தவறு செய்தவர் பிராமணர்களாக இருந்தால் இந்நேரம் பொங்கல் வைத்திருக்கும் முற்போக்குவாதிகள் ,பெரியாரிஸ்டுகள்  தவறு செய்தவர் பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பொத்திக்கொண்டு இருப்பது மாதிரி  தோன்றுவது எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா அல்லது உங்களுக்குமா மக்களே


கொசுறு  கலவரத்தால் மணிப்பூர் பற்றி எரியும்போது, பார்லிமென்டில் பிரதமர் சிரிப்பதும், நகைச்சுவையாகப் பேசுவதும் சரியான செயல் அல்ல :ராகுல்காந்தி

ராகுல்ஜி எங்க பிரதமர் திருக்குறளை அதிகம் படிப்பதால் அதைப் பின்பற்றுகிறார் அதனால்தான்  வள்ளுவர்  துன்பம் வரும் போது சிரியுங்க என்று சொல்லியதை நமது ஜீ கடைப்பிடிக்கிறாரோ என்னவோ

 
 
அன்புடன்
மதுரைத்தமிழன்
 
Published on
8/13/23 11:48 PM

3 comments:

  1. "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்ற பாரதி பாடலை குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் எடுத்து சொல்லவேண்டும். அக்கம் பக்கத்தில் அனைத்து மதம் சார்ந்தவர்களு, எல்லா ஜாதியினரும் அக்கா, மாமா, அத்தை, பெரியப்பா, பெரியம்மா, என்று அழைத்து பண்டிகை என்றால் பண்டங்களை பகிர்ந்து மகிழ்ந்து இருந்தோம். இப்போது அதுவும் பள்ளி மாண்வர்கள் இப்படி இருப்பது கேட்பது மனதை கனக்க வைக்கிறது.

    ReplyDelete
  2. தமிழகத்தில் சாதிய வெறிகள்/சண்டைகள் எப்பவும் உள்ளன . அரசியல் வியாதிகள் வேண்டும்போது கிளறி விடுவார்கள் .
    பியூன் வேலைக்கு கூட லாயக்கில்லாத மனநிலம் குன்றிய டோபா தலையன் ஸ்டாலினால் எப்படி இம்மாதிரி பிரச்சினைகளை சமாளிக்க முடியும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.