Thursday, August 10, 2023

 யோசித்துப் பாருங்கள்!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது.


இந்திய நாட்டில் உள்ள குடிமக்களை விட அரசியல்வாதிகளுக்குத்தான் ஜனநாயகம் அதிக பலன் அளித்துள்ளது.

நீங்கள் கடைசியாக வாக்களித்ததிலிருந்து உங்களின் வருமானமும் சேமிப்பும் எவ்வளவு என்று பாருங்கள் அதே நேரத்தில்  நீங்கள் வாக்களித்து வெற்றி பெற்ற  வேட்பாளர்களின் வருமானமும் அவர்களின் சொத்து வளர்ச்சியையும் கணக்கிட்டுப் பாருங்கள்..

அதன் பின் தெரியும் இந்திய ஜனநாயகத்தால் யாருக்குப் பலன் அதிகம் என்று



யோசித்துப் பாருங்கள்!

நீங்கள் இல்லாதது ஒருவரைப் பாதிக்கவில்லை என்றால், உங்கள் இருப்பு அவர்களுக்கு ஒருபோதும் முக்கியமில்லை

நமக்கு ஒரு கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் அதை விரும்பாமல் இருக்கலாம்.. ஆனால் நாம் விரும்பாத ஒருவர் ஒரு கருத்தைச் சொல்லும் போது கருத்து சரியா இல்லையா என்பதை மட்டும் பார்க்க வேண்டுமே தவிரச் சொல்பவர்  நாம் விரும்புபவரா விரும்பாதவரா என்று பார்த்து முடிவு செய்யக் கூடாது


 எப்போதும் சரி என்று நினைப்பவரிடத்தில் ஒரு போதும் விவாதத்தில்  ஈடுபடாதீர்கள்


பெண்களை நிர்வாணப்படுத்தி தெருவில் அழைத்து வந்ததைப் பார்த்த போது எழாத கோபம்  ஒரு தலைவர் ஃப்ளையிங்க் கிஸ் கொடுக்கும் போது வருகிறது என்றால் இது ஒரு ஈனப் பிறவியாகத்தான் இருக்கும்

அன்புக்கும் காமத்திற்கும் வேறுபாடு தெரியாத ஜென்மங்கள் எல்லாம் பதவியில் இருக்கிறது


ஒருவரை  முழுமையாக நம்புங்கள், உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்குத் துணையையோ அல்லது நண்பரையோ பெறுவீர்கள் அல்லது அவர்களை மீண்டும் ஒருபோதும் நம்பக்கூடாது என்பதைக் கற்றுக்கொள்வீர்கள்.

உங்களது சாதனைகளைச்  சந்தோஷ செய்திகளைப் பதிவிடுவதற்குப் பதிலாக முட்டாள்தனமான விஷயங்களையும் நகைச்சுவைகளையும் சமுக இணையதளங்களில் பதிவிடுங்கள்  அதனைப் பார்ப்பவர்களுக்கு  உங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று நினைப்பார்கள். காரணம் தனக்கு  நெருக்கமானவர்களின்  முன்னேற்றத்தை  வளர்ச்சியை வெறுக்கிறார்கள்


இந்தியாவில் தெருவில் தெருநாய்கள் சுற்றுவது போலச் சமுக இணையதளங்களிலும் நாய்கள் சுற்றிக் கொண்டு இருக்கின்றன அவைகளுக்குப் பெயர் 'சங்கிகள்'

காங்கிரஸ், திமுக. கச்சத்தீவு, பாரதமாதா சிலை போன்ற எல்லாவற்றையும் பேசும் பிரதமர்  பெல்பூர் பெண்களைப் பற்றி மட்டும் பேசவே இல்லை காரணம்  அவருக்குப் பெண்களைக் கண்டாலே பிடிக்காது. அப்ப எப்படி நிர்மலா, ஸ்மிர்த்திராணி போன்றவர்களைக் கட்சிகளில் சேர்த்து வைத்து இருக்கிறார் என்று  உங்களுக்குக் கேள்விகள் கேட்கத் தோன்றும் அதற்கான பதில்  அவர்கள் இரண்டு பேரும் பெண்களே இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்



அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. மக்கள் உணருவதற்கு இன்னும் பட்டு அழுந்த வேண்டியது இருக்கிறது தமிழரே...

    ReplyDelete
  2. அருமையாகவும் முடித்தீர்கள்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.