Saturday, August 19, 2023

 திருவாண்ணாமலையில்  எதிர்காலத்தில் ஏற்படப் போகும்  மாற்றங்கள்
  

avargal unmaigal


திருவாண்ணாமலை கிரிவலப்பாதை அசைவ உணவுகளுக்காகன  இடம் இல்லை -2023 ----->>கவர்னர் ரவி

திருவாண்ணாமலையில்  கிரிவலம் சமயத்தில் எங்கும்  அசைவ உணவுகளுக்காகன  இடம் இல்லை -2024.
திருவாண்ணாமலையில்  கிரிவலம் சமயத்தில் மாற்று மதத்தினர் வீட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை 2025
திருவாண்ணாமலையில்  கிரிவலம் சமயத்தில் மாற்று மதத்தினர் ஊருக்குள் இருக்க அனுமதி இல்லை 2026
திருவாண்ணாமலையில்  கிரிவலம் சமயத்தில்  தாழ்த்தப்பட்ட சாதியினர் பங்கேற்க அனுமதியில்லை 2027
திருவாண்ணாமலையில்  கிரிவலம் சமயத்தில் மாற்று மதத்தினர்  பிற்படுத்தப்பட்ட சமயத்தினரும் பங்கேற்க அனுமதியில்லை 2028
திருவாண்ணாமலையில்  கிரிவலம் சமயத்தில் மாற்று மதத்தினர்  மேல் சாதியினர் மட்டுமே அனுமதி மற்றவர்கள் ஊரின் எல்லையில் இருந்துதான் வழிபடலாம் 2028
திருவாண்ணாமலை புனித பூமி என்பது வேதத்தில் சொல்லப்பட்டு இருப்பதால்   அங்கு மேல் சாதியினர் மட்டும்  வாழலாம்.. மற்றவர்கள் அங்கு வந்தால் மஹாபாவம். பூமியின் புனிதம் கெட்டுவிடும் 2029


நான் நையாண்டியாக இந்த பதிவை எழுதி பேஸ்புக்கில் பதிந்த பின் மார்க் எனக்கு காட்டிய செய்திதான் பின் வரும் தகவல்



திருவண்ணாமலையில் எல்லோரும் ஏறலாமா?


திருவண்ணாமலை என்பது சிவனின் அம்சம் என்பதால் சிவனே திருவண்ணாமலை ஆக உருவெடுத்து இருக்கிறார் என்பதால் அதில் எல்லோரும் ஏறக் கூடாது என்றும் ஒரு சிலர் மட்டுமே ஏற வேண்டும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
பர்வத குலத்தினர் மட்டுமே திருவண்ணாமலை மலை மீது ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதனை அடுத்து தீபமேற்ற செல்வோர் உரிய விரதத்தை அனுஷ்டித்து மலை ஏறலாம் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
 
திருவண்ணாமலை சிவனின் அம்சமாக இருப்பதால் எல்லோரும் அதில் ஏறக் கூடாது என்றும் மீறினால் சிவனை அவமதிப்பது ஆகும் என்றும் அது மிகப் பெரிய பாவம் ஆகும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்


இப்படித்தான் ஆரம்பிப்பார்கள் கடைசியில் நான் மேலே சொன்னதுபடி செய்வார்கள்


மேலும்  மார்க் "Suggested for you"  என்று காண்பித்த இன்னொரு போஸ்ட் இது

திருவண்ணாமலை தீபம் உண்மை என்ன தெரியுமா?

- மஞ்சை வசந்தன்

திருவண்ணாமலை இமயமலையைவிட பழைமையான மலை. அது ஓர் எரிமலை. அந்த எரிமலை வெடித்து விண்முட்ட நெருப்பைக் கக்கியது. எரிமலை என்ற விவரம் அறியாத அக்கால மக்கள், கடவுள் (சிவன்) ஜோதியாக வெளிப்பட்டுவிட்டார் என்று வணங்கினர்.

மலையின் உச்சியில் எரிமலை நெருப்பு வெடித்து வெளிப்பட்டதால் அதன் நினைவாக மலை உச்சியில் பெரிய தீபம் ஆண்டுதோறும் ஏற்றுகிறார்கள். இதில் கடவுள் தன்மை ஏதும் இல்லை. இது ஓர் இயற்கை நிகழ்வு. காரணம் புரியாமையே கடவுள் நம்பிக்கைக்கும், பக்திக்கும் காரணம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இந்த உண்மையை விளக்கி 20 ஆண்டுகளுக்கு முன் ‘விடுதலை’ நாளேட்டில் கட்டுரை எழுதினேன். அக்கட்டுரையில் திருவண்ணாமலையை ஆய்வு செய்தால் அது ஓர் எரிமலை என்பது விளங்கும். எரிமலை கக்கிய மண் மலைமீது இருக்கிறது என்பதும் தெரியும் என்றேன். நிலவியல் ஆய்வாளர் ஆய்வு செய்து அது எரிமலை என்பதை அறிவியல்பூர்வமாக உறுதி செய்ததை ‘தினமணி’ நாளேடு செய்தியாக வெளியிட்டது.

பகுத்தறிவாளர்களின் ஆய்வுகள் பொய்ப்பதில்லை என்பதை இது உறுதி செய்தது. இதுசார்ந்த எனது முழு கட்டுரை விரைவில் முகநூல் மற்றும் பிளாக்ஸ்பாட்டில் வெளிவரும்!

அண்மையில் இந்தோனேசியாவில், பாலித் தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை வெடித்து 2300 அடி உயரத்திற்கு நெருப்பும் புகையும் வெளிப்பட்டதை இங்கு ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மையை அறியலாம். இந்தியாவில் எரிமலை மிக அரிது. அதனால் இந்த உண்மை புரியாத மக்கள், அக்காலத்தில் அதை கடவுள் வெளிப்பாடு என்று கருதினர்.

எனவே, திருவண்ணாமலை ஓர் எரிமலை. அதில் சிவன் வெளிப்பாடு என்பது கற்பனை. எனவே, மூடநம்பிக்கையில் முட்டி மோதி அங்கு சென்று அலையாது, பகுத்தறிவோடு வாழுங்கள்.


"Suggested for you" is a Facebook feature that suggests relevant content based on the user's activity. Users may see videos similar to one they have commented on, a photo they have just downloaded, or an article they have spent several minutes reading.

அன்புடன்
மதுரைத்தமிழன்

Published on
8/17/23 11:17 PM



 

 


2 comments:

  1. பலரும்(நான் உட்பட) அறியாத தகவல்கள்.
    நன்றி தமிழன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.