Sunday, August 6, 2023

 சுரணையற்ற  மக்களுக்கு இந்த  விஷயங்கள் எல்லாம் புரியாது
  

avargal unmaigal



எந்தெந்த மாநிலங்களிலெல்லாம் வன்முறைகள் தலைவிரித்து ஆடுகிறது என்பதைக் கவனித்துப் பார்த்தால் அந்த மாநிலங்களை எல்லாம் ஆளுவது பாஜகவினர் என்பது நன்றாகவே தெரியும் .ஆளும் மாநிலங்களை எல்லாம் பாதுகாக்கத் தெரியாதவர்கள்தான் இந்தியாவைக் காப்பாற்றப் போகிறார்களாம் இந்துக்களைக் காப்பாற்றப் போகிறார்களாம் அடேய்ங்கப்பா...

நோயில் துன்புறுபவர்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டிய மருத்துவர் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்காமல் , நல்லாயிருக்கும் ஆட்களுக்கு நோயை உண்டு பண்ணப் பல இடங்களுக்குச் செல்வது போலத்தான் பிரதமரின் செயல்கள் இருக்கின்றன. பிரச்சனை கொழுந்துவிட்டு எரியும் மாநிலங்களின் பிரச்சனைகளைத் தீர்க்கச் செல்லாமல் , பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களுக்குப் பயணம் செய்து பிரச்சனைகளை உருவாக்கச் செயல்படுகின்றார் அந்த ஜீ


*ம*ணி*ப்*பூ*ரில், ஹரியானாவில் கலவரம். குருகிராமில் மசூதி எரிப்பு. ரயிலில் படுகொலை  பாஜக 2024காக்கத் தேர்தல் பிரச்சாரத்தை  ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் இன்னும் கூட்டணி பற்றி ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்கள்


மணிப்பூர் வன்முறையில் வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் வேலை இருக்கலாம் என ராணுவ முன்னாள் தலைமை தளபதி கருத்து

நேருவை எவ்வளவு நாள் குறை சொல்லிக் கொண்டிருப்பது அதனால் ஒரு மாறுதலுக்காக


ஜனாதிபதி என்பவர் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல

பிரதமர் என்பவர் காணொலி பேச்சாளர் அல்ல  என்பதை இந்த இருவருக்கும் எடுத்து சொல்லுங்கப்பா

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வரிசையில் இந்துஸ்தானும்  வந்துவிட்டது.. இதற்காக கடினமாக  உழைக்கும் பிரதமருக்கு வாழ்த்துக்கள் சொல்லுவோ

அண்ணாமலை நடைப் பயணம் செல்லும் இடம் எல்லாம் கூட்டம் அதிகமாக வருகிறது அவரை மக்கள் நேசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் : சங்கிகள்

அடேய் அண்ணாமலைக்கும் மூதிஜிக்கும் கர்நாடகாவில் வராத கூட்டமா ?அங்கு அவர்களுக்குப் பூமழைகள்தானே பொழிந்தன. ஆனால் கடைசியில் என்ன ஆச்சு?

பணம் கொடுத்துக் கூட்டினால் கூட்டம் வரும் ,பூ மாலைகளும் விழும் .ஆனால் கடைசியில் என்னவோ பொதுமக்கள் சாணியைக் கரைத்து ஊற்றுவது போல  வைச்சு செஞ்சு அனுப்பிவிடுவார்கள்டா


ஸ்டாலினுக்கு இங்கிலீஷும் தெரியாது.. இந்தியும் தெரியாது - அமித்ஷா சொன்னதும் புரியாது? அண்ணாமலை ஆவேசம்

ஆனால் அவருக்குத் தமிழகத்தை ஆளத் தெரிந்து இருக்கிறதே  ஆட்சியில் அவர்தானே இருக்கிறார் கூமுட்டை அண்ணாமலை


தி.மு.க. அமைச்சர்களின் சொத்துகளை வைத்து நாட்டின் கடனையே அடைக்கலாம் - அண்ணாமலை #செய்தி

பாஜகவின் கட்சி சொத்துகளை வைத்து உலக மக்களின் ஏழ்மையை போக்கலாம்


எய்ம்ஸ் மருத்துவமனையால் 22 ஆயிரம் பேருக்கு வேலை: அண்ணாமலை

ஒரு செங்கல் வைத்து இத்தனாயிரம் பேருக்கு வேலை கிடைக்குமென்றால் மூதிஜி தமிழகத்திற்கு எவ்வளவு நல்லது செஞ்சு இருக்கிறார்..  இப்படி ஒரு செங்கல்லை ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒன்றாக வைத்தால் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டமே இருக்காது என்ன நான் சொல்லுறது


 புனேவில் பிரதமர் மோடிக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்கும் தனியார் நிறுவனம்!

உயிரோட இருப்பவர்களுக்குச் சிலை வைத்தால் ஆகாது என்பதைப் புரிந்து கொண்ட அதை அகற்றிய பகுத்தறிவாளர் கலைஞர் .பாவம் கலைஞருக்குத் தெரிந்து கூட பிரதமருக்குத் தெரியவில்லை போல... சிலை திறந்ததும் டண்டணக்கா ஆட்டம் ஆட மக்களுக்கு சான்ஸ் வரப் போவது நிச்சயம்



சிறையிலிருந்து விடுதலையான பத்ரிக்கு மாலை போட்டு வரவேற்காத இந்த சமுகம் நல்லா இருந்தால் என்ன நாசமாப் போனால்தான் என்ன?


உங்களுக்குத் தேவையான தேசிய  கொடிகள் பாஜக அலுவலகத்தில் மொத்த விலைக்கோ சில்லறை விலைக்கோ கிடைக்கும்


இந்து மதப் பெயரைப் பயன்படுத்தி இந்துத்துவா பயங்கரவாதிகள் செய்யும்  வன்முறைகளைத் தடுத்து நிறுத்துவதற்குப் பெரும்பான்மையான இந்துக்கள்   தீவிரமாகச் செயல்படவில்லை என்றால் இந்தியாவின் அழிவிற்குமட்டுமல்ல உங்கள் குடும்பத்தின் வருங்கால சந்ததிகளின் துன்பங்களுக்கும்  நீங்கள்தான் மிகப் பெரிய பொறுப்பாளிகளாக இருப்பீர்கள்



அன்புடன்
மதுரைத்தமிழன்

All these things are not understood by ignorant people

Published on
8/6/23 9:12 AM


06 Aug 2023

1 comments:

  1. இதற்கு மேலும் வெங்கோலனை தொடர்பவர்கள் மனித இனமே அல்ல...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.