Saturday, July 29, 2023

 நாட்டை கெடுக்கும் குள்ளநரிகளில் ஒன்று  தமிழ் நாட்டை கெடுக்க வந்துள்ளது.

avargal unmaigal



புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் மற்றும் புரட்சித்தலைவி  செல்வி ஜெயலலிதாவின் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து வீடு வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்திட அண்ணாமலை இந்த யாத்திரையை முன்னெடுத்துள்ளார்

- அமித் ஷா


மோடி அரசின் ஒன்பது ஆண்டுக்கால திட்டங்கள் தமிழகத்தில் விலை போகாததால் எம்ஜியார் ஜெயலலிதாவின் திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்தப் போவதாக குள்ள நரிகள்  நீலச்சாயம் அணிந்து வலம் வரத் தொடங்கி இருக்கின்றன அவைகள் வெளுக்க நாட்கள் அதிகமில்லை


மோ(ச)டி திட்டங்கள் கேடி திட்டங்கள் என்பதால் இந்த மாற்று ஏற்பாடு அவ்வளவுதாங்க


நரிகளால் யாருக்கும் நன்மை இருக்காது அவைகள் சுயநலமிக்கவைகள் அவைகள் தந்திரத்தால் மற்றவர்களின் கழுத்தை அறுத்து ரத்தத்தை உறிஞ்சு குடித்துவிடும் அது போலத்தான்  பாஜக தலைமையும்... அவர்கள் ஆட்சியில் அமர நினைத்ததைச் சாதிக்க எந்த உயரத்திற்குச் செல்வார்கள்  ரத்தக் கறை படிந்த கைகளுக்கு சொந்தக்காரர்கள் அவர்கள் ,  வட மாநிலங்களில் பல    நாச காரியங்களை பண்ணி ஆட்சி பொறுப்பில் உட்கார்ந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் என்ன காரியம் செய்தாலும்   தமிழகத்தில் அவர்களின் தந்திரங்கள் இது வரை பலிக்கவில்லை.


அதற்காக அவர்கள் அதை சும்மா விட்டுவிடுவதில்லை .தொடர்ந்து முயற்சித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரையில் எந்த பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு கிடைத்துவிடும் என்று நம்புவதில்லை. அவர்களின் திட்டங்கள் எல்லாம் நீண்ட கால திட்டங்களாகவே இருக்கும் கரையான் வீட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக அரிப்பது போலத்தான் ,அவர்கள் இந்த நாட்டையும் அரித்துக்  கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தங்களது நாசகர செயல்களால் பல மாநிலங்களில்  பிளவை ஏற்படுத்தி , அதன் மூலம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார்கள் .அவர்களின் சதித் திட்டங்களின் மூலம் "மோடி அலை என்ற ஒரு செயற்கை அலை "ஒன்று உருவாக்கப்பட்டது ஆனால் அந்த அலை தமிழகத்தில் உள்ளே நுழையாமல் லேடி ஜெயலலிதா தனக்கிருந்த "செல்வாக்கு அலையால்" அதைத் தடுத்துவிட்டார்.

அதனால் நாடெங்கிலும் பல இடங்களில் வெற்றி பெற்ற  பாஜகவால் தமிழகத்தில் ஒரு இடத்தை கூட பிடிக்கவில்லை. லேடியா மோடியா என்ற போட்டியில் லேடி வென்றது அவர்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை .லேடி தமிழகத்தில் இருக்கும் வறை தங்கள் கட்சி தமிழகத்தில் கொஞ்சம் கூட வளர வாய்ப்பு இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்ட அந்த நயவஞ்சக கூட்டம் . சதித் திட்டம் தீட்டி ஜெயலலிதாவை இந்த உலகத்தில் இல்லாதபடி செய்துவிட்டனர். (ஜெயலலிதாவின் சாவு மர்மச் சாவாக இருப்பதற்கு இவர்கள் தீட்டிய சதித்திட்டம்தான் காரணம்)


லேடிக்கு அப்புறம் அதிமுக கட்சி ஆதரவால் ஏதோ நாலு சீட்டு கிடைத்தது. அதற்கு நன்றிக் கடனாக அதையும் சில்லறை கட்சியாக்கியனார்கள் . தமிழகத்தில் அவர்கள் நினைத்த எண்ணமும் நிறைவேறவில்லை. இப்போது அந்த லேடியின் திட்டங்களைச் செயல்படுத்துவதாகச் சொன்னால் வரும் தேர்தலில் நாலு சிட்டாவது கிடைக்கும் என்ற நப்பாசையில் இந்த குள்ள நரிகள் பாதயாத்திரை தொடங்கி இருக்கிறது. மோடி ஒன்பது கால் ஆட்சியில் நல்ல திட்டங்கள் நிறைவேற்றி இருந்தால் அந்த திட்டங்களை மட்டும் பொது மக்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைத்து இருக்கலாமே

கடந்த தேர்தலில் மோடியின் முகத்தை போஸ்டரில் காண்பித்தால் வோட்டு இங்கு கிடைக்காது என்று மறைத்த போது வாய் மூடி கிடந்ததுதானே இந்தக் கூட்டம்.

இந்தக் கூட்டத்தை வெற்றி பெற செய்வது என்பது தமிழகத்தை அழிக்க துணை போவது போலத்தான்... வருங்காலத்தில் உங்கள் வாரிசுகள் அடிமைகள் போல   வாழமால் இருக்க வேண்டுமானால் நீங்கள் இந்த கூட்டத்தை எதிர்த்து அழித்துதுதான் ஆகவேண்டும்


குள்ள நரிகள் வெற்றி பெறப் போகிறதா அல்லது தமிழ் நாட்டு மக்கள் வெற்றி பெற்ப போகிறார்களா என்பது அடுத்தாண்டில் தெரிந்துவிடும்

அன்புடன்
மதுரைத்தமிழன்

29 Jul 2023

2 comments:

  1. இந்த கும்பல் வந்தால், நாடு நாசமா போவது உறுதி...

    ReplyDelete
  2. இந்த பேடிப் பயலை தொடரும் பேடிகள் இருப்பதும் நாட்டிற்கு கேடு...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.