Sunday, July 16, 2023

 மதுரைக்கு அடையாளம் கலைஞர் நூற்றாண்டு நூலகமா? அதிமேதாவிகளின் உளறல்கள்

  

avargal unmaigal




மதுரையில் தன் ஆட்சிக்காலத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஸ்டாலின் அவர்கள் ஒரு நூலகத்தைக் கட்டி திறந்து வைத்துள்ளார். நூலகம் மிகவும் பயனுள்ளதுதான்.  அது மக்களின் அறிவுப் பசிக்குத் தீனி போட்டு அறிவை வளர்க்க உதவும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை .ஸ்டாலின் அவர்களின் இரண்டாண்டு ஆட்சியில் அவர் செய்த ஒரு நல்ல காரியம் இதுதான் அதற்காக அவருக்கு என் பாராட்டுக்கள்.

இது முதல்வராக மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகளில் ஒன்றுதான் .அதைத் தவிர்த்து இதைப் பார்க்கையில் இது ஒன்றும் பெரிய சாதனை அல்ல . காரணம் இது உலகத்தில் உள்ள நூலங்ககளை விட மிகப் பெரியதுமில்லை அல்லது இதில் எந்த நூலகங்களிலும் கிடைக்காத அறிய நூல்கள் இங்குச் சேகரிக்கப்பட்டு வைக்கப்படவும் இல்லை .அதனால் இந்த நூலகம் ஒன்றும் அரிதானதொன்றுமில்லை.

விஷயம் இவ்வளவு  மிக  சாதாரண விஷயம்தானே ஒழிய ஆகா ஓகோ என்று பாரட்டபடும் அளவிற்குப் பெரிதாக இங்கு ஒன்றுமில்லை..


ஆனால் இந்த நூலகத்திற்குக் "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" என்று பெயர்  வைத்ததினால் இது மதுரைக்கே அடையாளம் என்பது போலப் பெரிய பில்டப் ஒன்று உடன்பிறப்புகளால் கொடுக்கப்படுகிறது.. அப்படி செய்வதால் விமர்சனத்திற்கு  இந்த நிகழ்வு உட்படுத்தப்படுகிறது

 
avargal unamiagal


உடன் பிறப்புக்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது மதுரை ஒன்றும் அடையாளம் இல்லாத ஊர் ஒன்றுமில்லை அது பண்டையக்  காலங்களிலிருந்து சரித்திரத்தில் இடம் பெற்ற ஒரு அடையாளம் கொண்ட ஊர் மதுரை, 2000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஒரு பழங்கால நகரம் ஆகும். . இது சங்க காலத்தில் பாண்டியர்களின் தலைநகராக இருந்தது. மதுரை, தமிழ்க் கலாச்சாரத்தின் தலைநகராகவும் அழைக்கப்படுகிறது. மதுரையில் பல வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளங்கள் நிறைய உள்ளன.

அதில் மிகச் சிறந்த ஒன்று மீனாட்சி அம்மன் கோவில் , அதுமட்டுமல்லாமல்  கண்ணகி கால் சிலம்பை உடைத்து நீதி கேட்டது மதுரையில்தான் மேலும் உலக தமிழ்ச் சங்கம் அமைந்துள்ளது . மதுரை திருவிழா நகரம் ,தூங்கா நகரம் , கோயில்களின் நகரம் இப்படி ஒன்ரு அல்ல இரண்டு அல்ல பல அடையாளங்கை கொண்டு சிறப்பாக பேசப்படும் ஒரு நகரம்..


அப்படிப் பல பெருமைகளைக் கொண்ட நகரத்திற்குக் கலைஞர் நூற்றாண்டு நூலகம்தான் ஒரு அடையாளம் என்று பெருமை பேசுவது உங்களின் அறிவற்ற நிலையைத்தான் வெளிப்படுத்துகிறது அல்லது அதிமேதாவிகளின் உளறல்கள் போலத்தான் தோன்றுகிறது

திமுக ஆட்சிக்காலங்களில்தான் மக்களுக்குப் பயன்படும் பெரிய நூலகங்கள் திறக்கப்படுகின்றன என்று பெருமை பேசுங்கள் அதில் தப்பே இல்லை ஏனென்றால் அதுதான் உண்மையும் கூட ஆனால் அதைவிட்டுவிட்டு இப்படி அடையாளம் அது  இது என்று அளந்துவிடாதீர்கள் உளறச்  செய்யாதீர்கள்


 இறுதியாக சொல்ல விரும்புவது  ஸ்டாலின் நூலகம் அமைத்தது மிக நல்லச் செயல்... ஆனால் அதற்கு உடன் பிறப்புக்கள் பில்டப் செய்வது தேவையில்லாத விஷயம்.
டாட்...

கொசுறு :

1. நூலகத்திற்குத் திருவள்ளுவர் பெயர் வைத்திருக்கலாம்  என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி இருக்கிறார்  அது எனக்கென்னவோ இது மிக சரியான கருத்தாகத்தான் தோன்றுகிறது

பேஸ்புக்கில் இந்த கருத்தை  பதிந்த போது  நண்பர் Sundaram Chinnusamy எதனால் சரியான கருத்தாக தோன்றுகிறது என்று கேட்டார்.

அதற்கு நான் சொன்ன பதில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளால் ஞானம் அடையலாம் அது போல நூலகத்தாலும் ஞானம் அடையாலாம் என்பதால் எனக்கு அது சரியாகப்படுகிறது என்று சொன்னேன்.


இன்னொருவர் Manoharan Sambandam  பு. த.எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு திருவள்ளுவர் பெயரை வைக்காதவர்கள்
அம்மா உணவகத்துக்கு மணிமேகலை என்ற பெயரை வைக்காதவர்கள்
இதனைக் கூறுகின்றனர். என்ற கருத்தை பதிந்தார்

அதற்கு நான் சொன்ன பதில் ரயில்வே நிலையத்திற்கும் திருவள்ளுவருக்கும் சம்பந்தமில்லை.. மணிமேகலை குட் பாயிண்ட். அவர்கள் செய்யவில்லை சரி அதனால் அவர்களை போல நாம் இருப்பதும் சரிதானா?

மற்றொருவர் இலட்சுமணன் திருமூர்த்தி என்பவர்  அகத்தியர் தொல்காப்பியர் ... யாதும் ஊரே கணியன் ... இவர்கள் பெயரெல்லாம் என்ன தக்காளித்தொக்கா!!!

ஆமாம் இவர்கள் பெயரை வைத்து நூலகத்திற்கு சிறப்பு செய்து இருக்கலாம் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது


Rafeeq K Sulaiman என்பவர் கோயம்பேடு பேருந்து திலையத்திற்கோ அல்லது சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கோ பெயர் வைக்கும்போது இந்த ஐடியாவை ஏன் ஜெயக்குமார் சொல்ல மறந்துபோனார். என்று கேள்வி எழுப்பியதற்கு

 என் பதில் பேருந்து நிலையமும் ரயில் நிலையமும் நூலகத்திற்கு ஒப்பீடா???


2. பொது நூலகத்திற்கு மறைந்த தலைவர்கள் பெயர்களை வைப்பது தவறில்லை அப்படித்தான் பல இடங்களில் வைத்து இருக்கிறார்கள் ஆனால்  ஸ்டாலின் அவர்கள் கலைஞர் பெயரை வைக்கும் போது ஏன் மற்றவர்களின் புருவம் உயர்ந்து கேள்விக்குறியாகிறது என்றால் ஸ்டாலின் கட்சி  சார்ந்த முன்னாள் முதல்வர் தலைவர் என்று பார்க்காமல் அவரது தந்தையாகப் பலரும் பார்ப்பதால்தான்.

திமுக குடும்ப கட்சியாக இல்லாமல் இருந்து ,இப்படி முன்னாள் தலைவரின் பெயரை வைத்திருந்தால் மற்றவர்களின் புருவம் கேள்விக்குறியாகக் காட்சி அளித்திருக்காது.


3. சங்கிகளுக்கு இணையாகத்தான் உடன்பிறப்புகளும் இருக்கிறார்கள் ஆனால் என்ன ஒன்று பகுத்தறிவு வேஷமும் மற்றொன்று பக்திமார்க்க வேஷமும் போட்டுக் கொண்டு அலைகிறது இதைத் தவிர வேற வித்தியாசம் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.