Monday, July 10, 2023

 அரைவேக்காட்டு மாவட்ட ஆட்சியரும் அரைவேக்காட்டு சமுக இணையதள பிரபல அறிவுஜிவிகளும்

 

avargal unmaigal



ஒழுங்கா ரோடு போடாத ,ஒழுங்கா கற்றுக் கொடுக்காத,  இப்படி பலதுறைகளில்  ஒழுங்காக இல்லாதவர்கள்  மீது நடவடிக்கையை எடுக்காத இந்த ஆட்சியாளர் வாடிக்கையாளர்களின் விருப்பப்படி  முடி வெட்டுபவ்ரள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அறிவித்திருக்கிறார் இந்த அறிவு ஜீவி .

இவர் ஒரு சிறந்த ஆட்சியாளராக இருந்தா
ல் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள்  இப்படித்தான் முடி வைத்திருக்கவேண்டும் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி என்று ஒரு சட்டம் போட்டு இருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு விட்டு இப்படி நடவடிக்கை எடுப்பேன் என்பது அரைவேக்காட்டு தனம்தான்

மாணவர்கள் படிக்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டுமே தவிர அவர்கள் மயிரை எப்படி வைத்திருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, மாணவர்கள் அவர்கள் விருப்பப்படி முடியை வெட்டிக் கொள்வதால் மட்டுமா இந்த சமுதாய ஒழுக்கம் கெட்டுவிடுமா என்ன?

இந்த மாணவர்களின் முடியை வெட்டும் சலூனகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்ன ஆட்சியாளர் இப்படிப்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகளின் கையில் டாஸ்மாக் சரக்கு வைத்திருக்கிறார்களே அதனால் ஒழுக்கம் கெட்டுவிடாதா என்ன? மாணவர்களின் கையில் சரக்குக்குக் காரணமான டாஸ்மாக் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதற்கு முன் ஏதாவது அறிக்கை விடுவித்து இருக்கிறாரா என்ன?


எத்தனை பள்ளி மாணவர்கள் லைன்சஸ் எடுக்கும் தகுதியில்லாமல் இருந்து பைக் கார் போன்ற வாகனங்களை ஒட்டி செல்லுகிறார்களே அப்படிப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மீது இது வரை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஏதாவது அறிக்கை விட்டு இருக்கிறாரா?

இதை எல்லாம் செய்யாத மாவட்ட ஆட்சியாளர் என்னைப் பொருத்தவரை அரைவேக்காட்டு ஆசாமிதான்


"சிறந்த மனைவியாக இருக்கத் தகுதியற்ற பெண் யார் ?"
என்று எவனோ ஒரு முட்டாப்பய ஒரு பதிவு போட அதை ஒரு பெரிய விஷயமாகக் கருதிப் பல பிரபலங்கள் அதை வெளியிட்டு அதை விமர்சனங்கள் பண்ணிக் கொண்டி இருக்கிறார்கள் இப்ப எனக்கு  என்ன தோன்றுகிறது என்றால் இதில் யார் பெரிய முட்டாள்கள் என்றுதான் எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது .ஆனால் பாருங்கள் இந்த பிரபலங்களில் யாரும் மணிப்பூர்  இவ்வளவு நாள் பற்றி எரிகிறது அது பற்றி இதுவரை ஒரு பதிவுகளும் போடவில்லை விமர்சிக்கவில்லை இதெல்லாம் இந்த அறிவுஜீவி பிரபலங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்ல ஆனால் ஒரு முட்டாப்பய்  எழுதி வெளியிட்டதுதான்  ரொம்பப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் பெரியவிஷய்ம் போல  குமறிக் கொண்டு இருக்கிறார்கள்


அடேய் உங்களுக்கெல்லாம் காலம் காலமாக  இப்போதைய பிரதமர்தான் நாட்டை தொடர்ந்து ஆளனும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

10 Jul 2023

1 comments:

  1. ஆனாலும் முடிவில் இந்த கொடூர சாபம் வேண்டாம்....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.