Friday, April 28, 2023

 யூதர்களிடமிருந்து இந்திய இஸ்லாமியர்கள்   என்னக் கற்றுக் கொள்ள  வேண்டும்?
 

 
@avargal unmaigal



உலகமெங்கும் இருக்கும் இஸ்லாமியர்கள் மதத்தால் ஒன்றுபட்டு இருந்தாலும் இனத்தால்  தனித்துத்தான் நிற்கிறார்கள். இதனால்தான் தாங்கள் சார்ந்த மதத்திற்கு ஒரு இழிவு என்றால் உலக முஸ்லீம்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இழிவிற்குக் காரணமானவர்களை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவார்கள் .ஆனால் அதே நேரத்தில் வேறு நாடுகளில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சனையென்றால் அதைக் கண்டு கொள்ளமாட்டார்கள். உதாரணத்திற்கு இந்திய இஸ்லாமியர்களுக்குப் பல அச்சுறுத்தல்கள் கொடூரங்கள் நடந்த போதிலும் மற்ற நாட்டு இஸ்லாமியர்கள் அதைக் காணாதது மாதிரிதான் இருக்கிறார்கள். முக்கியமாகச் சவுதி மற்றும் அரபுநாடுகளைச் சார்ந்த  இஸ்லாமியர்கள், இந்தியா மற்றும் பல நாடுகளைச் சார்ந்த இஸ்லாமியர்களை ஒரு இரண்டாம் கட்ட இஸ்லாமியர்களாகவே பார்க்கின்றனர் அதன் காரணமாகவே  இவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதற்காகக் குரல்கூட கொடுப்பதில்ல என்பதைத்தான் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்

அதனால் இனிமேல், இந்திய இஸ்லாமியர்கள் அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்க்காமல் தங்களை முன்னிறுத்திக் கொள்ள முயல வேண்டும். இனிமேல்,  இந்திய ஆளும் அரசைக் குறை கூறிக் கொண்டு மட்டும் இருக்காமல் அடுத்து என்ன செய்யலாம் என்பதை நன்கு யோசித்து தங்களை முன்னிறுத்திக் கொள்ள முயல வேண்டும். இந்திய அரசு சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள், அப்படிச் சொல்லுவதால், உங்களுக்கு யாரும் வந்து உதவப் போவதில்லை என்ற உண்மையை உணருங்கள்.. மோடியே இஸ்லாமியர்களுக்கு நல்லது செய்யலாம் என்று நினைத்தாலும் கூட அவரை சுற்றி உள்ள 'அதிகார சக்திகள்' அதைச் செய்யவிடாமல் தடுக்கும் அதைத் தாண்டி உதவ மோடியால் கூட முடியாது என்பது மற்றொரு உண்மை .இந்திய இஸ்லாமியர்கள் ஏன் பின் தங்கியுள்ளனர்? அதற்கு அலட்சியமான அரசாங்கக் கொள்கைகள்தான் காரணம் என்று அடிக்கடி குற்றம் சாட்டப்படுகின்றன, அப்படிச் சொல்வதால்  அவை உண்மையில் ஒரு சமூகம் முன்னேற உதவுகின்றனவா?


ஒரு மத, அல்லது இன, சிறுபான்மையினர்களாக இருப்பதுதான் இஸ்லாமியர்களின்  பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது என்பது பொதுவான புரிதலே மேலும் முஸ்லிம்களின் பின்தங்கிய நிலைக்கு மக்கள்தொகை விகிதாச்சாரத்தால் காரணம் என்று  அரசியல்வாதிகளும் சிந்தனையாளர்களும்  வாதிடுகின்றனர் ஆனால்   சீக்கியர்கள் மற்றும் பார்சிகள் போன்ற சிறிய மக்கள்தொகை கொண்ட மதக் குழுக்கள் ஒவ்வொரு சமூக மற்றும் பொருளாதார மட்டத்திலும் சிறப்பாகச் செயல்படுவது பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.


அப்படியானால் என்ன செய்யலாம்??? சற்று அமைதியாக உட்கார்ந்து உலகை உற்று நோக்கிப் பாருங்கள்

வரலாற்று ரீதியாக, யூதர்கள் மனித வரலாற்றில் மிகவும் துன்புறுத்தப்பட்ட மதக் குழுக்களில் ஒன்றாகும். யூதர்கள், ஒரு சமூகமாக, வர்த்தகம், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் புதுமை உலகில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது பொது அறிவு.

.யூதர்கள் பற்றிய சில வரலாற்று ஆய்வுகளைப் பார்த்தால் இவர்கள்  கிறிஸ்தவ ஐரோப்பா மற்றும் இஸ்லாமிய மத்திய கிழக்குப் பேரரசுகளில் மத சிறுபான்மையினராக வாழ்ந்தனர், ஆனால் அங்கு ஒருபோதும் ஒரு சக்தியாக மாறவில்லை. இவர்களின் ஆதிக்கத்தின் ரகசியம் கல்வியே தவிர வேறொன்றுமில்லை.

 



 இதைத்தான் யூதர்களிடம் இருந்து இந்திய முஸ்லிம்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அது ஏன் என்பதை வரலாற்று ஆய்வில் வெளிவந்த பின் வரும் தகவலைப் படியுங்கள் .அதன் பின் ஏன் அவர்களிடமிருந்து இஸ்லாமியர்கள்    மட்டுமல்ல  வேறு ஒரு எந்த சமுகமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தெளிவாகும்.

இந்திய முஸ்லீம் அல்லது வேறு எந்த சமூகமும் யூத அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளக்கூடியது என்னவென்றால், பள்ளிக் கல்வியை ஒரு மதக் கடமையாக அறிமுகப்படுத்தியதன் மூலம், மில்லியன் கணக்கானவர்கள் நம்பிக்கையை விட்டு வெளியேறினாலும், யூத தலைவர்கள் பொருளாதார வெற்றியின் நெம்புகோல்களை வழங்கினர். மற்றும் அறிவுசார் முக்கியத்துவத்தை அடுத்தடுத்த நூற்றாண்டுகளிலிருந்து இன்று வரை  உணர்ந்து செயலாற்றுகின்றனர் என்பதை கற்றுக் கொள்ள முன் வர  வேண்டும்

கிபி 70 இல், யூதர்கள் பெரும்பாலும் இஸ்ரேல் மற்றும் மெசபடோமியா தேசத்தில் வாழ்ந்த விவசாய மற்றும் கல்வியறிவற்ற மக்களாக இருந்தனர். 1492 வாக்கில், யூத மக்கள் செவில்லே முதல் மங்களூர் வரை பழைய உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் கைவினைப்பொருட்கள், வணிகம், பணம் கொடுத்தல் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற நகரவாசிகளின் ஒரு சிறிய குழுவாக மாறினர். இந்த தீவிர மாற்றத்திற்கு என்ன காரணம்?


ஏ.யு. 70 க்குப் பிறகு, யூத மதம் கோவில் சேவை மற்றும் மத பலிகளில் கவனம் செலுத்தவில்லை. மாறாக, அதன் உறுப்பினர்கள் அனைவரும் தோராவைப் (Torah     (in Judaism) the law of God as revealed to Moses and recorded in the first five books of the Hebrew scriptures ) ப படிக்கவும், தங்கள் ஆண் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கவும், கல்வியறிவு மற்றும் கல்வியில் முதலீடு செய்யவும் கோரியது.
 
வேறு எந்த மதத்திலும் தகப்பன் தன் மகன்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இது யூதர்களை ஒரு எழுத்தறிவு பெற்ற சமூகமாக மாற்றியது, சட்டங்கள் மிகவும் கடுமையாக இருந்ததால், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாதவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டனர். இது முதல் மில்லினியத்தின் முதல் பாதியில் யூதர்களின் எண்ணிக்கையில் சரிவுக்கு வழிவகுத்தது, ஆனால் படித்தவர்கள் மட்டுமே தப்பிப்பிழைத்தனர்

7 ஆம் நூற்றாண்டின் இஸ்லாமியப் புரட்சியின் வருகையுடன் நகர்ப்புற மையங்கள் உருவாகத் தொடங்கின, மேலும் உலகில் யூதர்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்கள். எந்தெந்த இடங்களில் கல்வியில் எந்த நன்மைகள் இருக்கிறதோ அந்த இடங்களை அவர்கள் நிரப்ப ஆரம்பித்ததில் ஆச்சரியமில்லை.
 
13 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், இங்கிலாந்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு சமூகம் வர்த்தக நடவடிக்கைகளில் வளருவதை நிறுத்தவில்லை, ஏனெனில் அது மற்ற அனைவரையும் விடக் கல்வியறிவு பெற்றிருந்தது.


 இங்கிலாந்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிறுபான்மையினர் 1656 இல் முழுமையான மத மற்றும் பொருளாதார சுதந்திரத்தின் வாக்குறுதியுடன் மீண்டும் வரவேற்கப்பட்டனர்.
 
யூதர்கள் தங்கள் வணிக வலைப்பின்னல் மூலம் லண்டனின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ முடியும் என்று அரசாங்கம் நம்பியது. தற்போது, ​​அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் அமைந்துள்ள யூத சமூகத்தை எந்த சமூகமும் புறக்கணிக்க முடியாது.


அப்படிப்பட்ட  மிகச் சிறுபான்மையான யூத மதத்தைச் சார்ந்தவர்கள்தான் இன்று உலகையே ஆட்டுவிக்கிறார்கள். இவர்களைப் பின்பற்றிய பிராமண சமுகம்தான்  இந்தியாவை ஆட்டுவிக்கிறது என்றால் மறுப்பவர்கள் யாரும் உண்டா?


 இஸ்ஸாமிய சமுதாயம் மதப்பற்றை போதிக்கும் அதே சமயத்தில் கட்டாய கல்வியறிவையும் போதிக்க வேண்டும். அதன் பின் இந்தியாவிலும் சரி அல்லது உலகத்தின் எந்த நாடுகளிலும் சரி தாங்கள் படித்த அறிவைக் கொண்டு உயர்ந்த பதவிகளில் அமர்ந்து இந்திய இஸ்லாமிர்கள் என்ற பெருமையை உலகம் உற்று நோக்கச் செய்ய வேண்டும்.


இப்படி ஒரு முடிவை எடுக்க உங்களால் முடியவில்லை என்றால் இந்தியாவில் இரண்டாம் தர குடிமக்களாக வாழ்ந்து அவமானப்படத்தான் வேண்டும் கொடுமைகளை அனுபவிக்கத்தான் வேண்டும்

எது வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்

அல்லாஹூ அக்பர்


அடுத்த பிரதமர் மட்டுமல்ல இந்தியாவின் ஒரே ஒரு  அதிபதியாக ஆகப் போவது நரேந்திர மோடிதான் அதில் எந்த வித மாற்றமும் இல்லை என்பதை அடித்துச் சொல்லுகின்றேன்.. அப்படி அவர் அடுத்த தடவை அதிபராக வந்தால் இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை என்னவாகும் என்பதை  புரிந்து கொள்ளுங்கள் அதற்கேற்று செயல்படுங்கள்,


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : இதை  இஸ்லாமியர்கள் மட்டுமல்ல  நம் தமிழ் சமுதாயமும் பின் பற்றி உலகின் உயர்ந்த சமுகமாக மாறலாம் அதன் பின் நாம் பழம் பெருமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை


2 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.