Saturday, April 1, 2023

 நாம் எப்பொழுதும் இப்படித்தான்!  

  



அவசர அவசரமாக அடுத்தவரைத் தவறாக எடை போட்டுவிட வேண்டாம். பல சமயங்களில் நாம் அடுத்தவரின்  சூழ்நிலைகள் தெரியாது   ஒரு தவறான முடிவிற்கு  வந்து விடுவோம். நம்மை விட நமக்கு உதவுபவர்கள்  மோசமான சூழ்நிலை இருக்கலாம் என்று உங்களுக்குத் தெரியாது



இந்த  பெண்ணிற்கு உதவும் ஆணிற்கு  ‍கீழே  பாம்பு இருப்பது தெரியாது. அது போல தனக்கு உதவும் ஆணை கல் நசுக்கிக் கொண்டிருப்பது இந்த பெண்ணிற்குத் தெரியாது.

ஆனால் அந்த பெண் நினைப்பதோ பாம்பு  என்னைக் கடிக்கலாம் அதனால் என்னால் மேலே ஏற முடியாமல் கீழே விழப் போகிறேன். ஆனால் அவனுக்கு என்ன வந்தது பாதுகாப்பாக மேலே படுத்துக் கொண்டுதானே இருக்கின்றான் இன்னும் அவன் கொஞ்சம் வலிமையைப் பயன்படுத்தினால்தான் என்ன?  அப்படிச் செய்தால் அவன் என்னை காப்பாற்றி விடலாம்தானே

ஆனால் அந்த ஆணோ நான் மிகவும் வலியில் துடித்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாலும் இன்னும் என்னால் முடிந்தவரை இந்த பெண்ணை  இழுத்து வருகிறேன்! ஆனால் அவளோ இன்னும்  சற்று  முயற்சி செய்து கொஞ்சம் கடினமாக  ஏன் மேலே வர் முயலக் கூடாது என்று நினைக்கிறான் ?


தார்மீகம் என்னவென்றால் - மற்றவருக்கு  இருக்கும் அழுத்தத்தை உங்களால் பார்க்க முடியாது, நீங்கள் படும் வலியை மற்றவர்களால் பார்க்க முடியாது. இதுதான் வாழ்க்கை, அது வேலை, குடும்பம், உணர்வுகள் அல்லது நண்பர்களுடன் இருந்தாலும், நாம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயல வேண்டும்.

நிஜ வாழ்க்கையில் நாம் கஷ்டப்படும் போது நமக்கு உதவுபவர்கள் இன்னும் சற்று அதிகமாக உதவி செய்தால் அந்த கஷ்டத்திலிருந்து முழுமையாக வெளிவந்து இருக்கலாம் ஆனால் அப்படிச் செய்ய முடியாதவர்களை அவர்கள் நமக்கு உதவிகள் செய்பவராக இருந்தாலும் சபித்துக் கொண்டோ அல்லது மற்றவர்களிடம் குறைகளாகச் சொல்லிக் கொண்டிருப்போம்.. இப்போது யோசித்துப் பாருங்கள் நமக்கு உதவி செய்பவர்களால் ஏன் இன்னும் அதிகமாக உதவி செய்ய முடியாமல் இருந்திருக்கும் என்று?

துரதிர்ஷ்டவசமாக, மற்றவர்கள்  கஷ்டப்பட்டுக் கடந்து செல்லும் வாழ்வைவிட விட நாம் கடந்து செல்வதுதான் கடினமானது என்று நாம் எப்போதும் நினைக்கிறோம்.


நாம் எப்பொழுதும் இப்படித்தான்! நமது பிரச்சனைகள்தான் நமக்குப் பிரமாண்டமாகத் தோன்றும் சமயத்தில் மற்றவர்களின் பிரச்சனைகளைச் சரிவரப் புரிந்து கொள்ள முயலாமல் அவர்களைப் பற்றி ஒரு தவறான முடிவிற்கு வந்து விடுகிறோம்.

இதைத் தவிர்க்க  நாம் வித்தியாசமாகச் சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் ,அது நம்மை  இன்னும் தெளிவாகவும், சிறப்பாகவும் கொண்டு சொல்லும் . ஒரு சிறிய சிந்தனை மற்றும் பொறுமைதான் நம்மை  நீண்ட  தெளிவான  பாதைக்கு இட்டுச்  செல்லும்


அன்புடன்
ம்துரைத்தமிழன்


01 Apr 2023

2 comments:

  1. செம பதிவு, மதுரை. அருமையான கருத்து. முழுவதையும் டிட்டோ செய்கிறேன். சிவப்பில் இருப்பது - பாடல் நினைவுக்கு வந்துவிடும் உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.

    எதிர்பார்ப்புகள் இல்லாமல், மற்றவர்களைக் குறை சொல்லாமல் நன்றியுடன் வாழ்தல் நிம்மதி தரும்.

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.