அரசியல் அட்டகாசங்கள் மீம்ஸ் 2
அன்றைய செய்திகளின் அடிப்படையில் எனது நையாண்டி கருத்துக்கள் மற்றும் மீம்ஸ்கள் சமுக வலைத்தளங்களில் வெளியிடப்படுகின்றன. அந்த நையாண்டி மீம்ஸ்களின் ஒரு சிறு தொகுப்பே அரசியல் அட்டகாசங்கள் என்ற இந்த பதிவு.. இவைகள் எனது டிவிட்டர் பக்கத்திலும் பேஸ்புக் பக்கத்திலும் வெளிவந்தவைகள் அந்தப் பக்கம் வராதவர்களுக்காக இந்த பதிவு சில கருத்துக்கள் அரசியல் சாராத நையாண்டி கருத்துகளும் இங்குண்டு
அம்ப்புட்ட்டுதாங்க
12 மணி நேர வேலைத் திட்டத்திற்கு ஆதரவு தரவங்க யாருன்னு பார்த்தால் பொண்டாட்டி முகத்தை அதிகம் நேரம் பார்க்க வேண்டாம் என்பவர்களாகத்தான் இருக்கும்
வாரத்திற்கு நான்கு நாள் வேலைத்திட்டத்தில் தொழிலாளிகள் வேலை செய்யும் நான்கு நாட்களும் அரசு விடுமுறையாக இருந்தால் அப்ப அந்த வாரம் முழுவதும் அவர்களுக்கு விடுமுறைதானோ?
சமுக இணையத்தளங்களில் தங்களை அறிவுஜீவிகளாகப் பிம்பம் அமைத்துக் கொண்டுள்ள பிரபலங்கள் பலரின் 12 மணி நேர வேலைத் திட்டப் பதிவுகளைப் பார்க்கும் போது அதில் அவர்கள் அந்த திட்டத்தின் சாதகங்கள் அல்லது பாதகங்களைப் பற்றியோ அதை ஆதரிக்கிறார்களா இல்லையா என்பது பற்றி ஏதும் எழுதாமல் அந்த திட்டத்தைக் கொண்டு வந்த திமுக கட்சியின் ஆதரவாளர்களின் முட்டுக்களை மட்டும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு வேளை பிரபலங்கள் என்றால் அப்படித்தான் செயல்படனுமோ என்னவோ.. இது தெரியாமல் இத்தனை இருந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
முதலமைச்சரின்(கலைஞர்) மகன்கள் பேரன்களிடம் அதிக சொத்து இருந்தால் அது ஊழலில் சம்பாதித்தது.. ஆனால் அது போல உள்துறை அமைச்சரின்(அமித்ஷா) மகன் அதிக சொத்து வைத்து இருந்தால் அது மட்டும் உழைத்துச் சம்பாதித்தது. அட அண்ணாமலை அமித்ஷாவின் மகனின் சொத்து விபரக் கணக்கை வெளியிடேன் உனக்கு ஆண்மை இருந்தால்.....
பாஜக திமுக கூட்டணி உறுதி
அது எப்படிங்க முடியும் அண்ணாமலைதான் திமுகவினர் ஊழல் மூலம் சேர்த்த சொத்து விபர பட்டியலை வெளியிட்டு இருக்கிறாரே?
பாஜக எப்போதும் திருட்டு பசங்களைத்தானே தனது கூட்டணியில் சேர்த்துக்கும் அதனால்தான் சொல்லுகிறேன்
பாஜக திமுக கூட்டணி உறுதி என்று
#நண்பர்கள் கொடுக்கும் பணத்தில் வாழ்ந்தால் அது #அண்ணாமலை
#வாசகர்கள் கொடுக்கும் பணத்தில் வாழ்ந்தால் அது #சாருநிவேதிதா
கல்யாணம் பண்ணினேன் ஆனால் தேனிலவிற்கு மனைவியை கூட்டிட்டு போக என்னிடம் பணம் இல்லாததால் என் நண்பன்தான் செலவு செய்து என் மனைவியைத் தேனிலவிற்கு அழைத்துச் சென்றான்.. இப்படி மட்டும்தான் #அண்ணாமலை இன்னும் சொல்லலை
உபி :அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் முற்றிலும் தவ்றனாது?அது எங்களைக் காயப்படுத்துகிறது
மக்கள் :அதுல என்ன தவறு?
உபி அவர் வெளியிட்டதற்கும் அதிகமாக நாங்கள் சொத்து வைத்திருக்கிறோம்.. எங்களை இன்சல்ட் பண்ணுவதற்காக அவர் குறைத்து வெளியிட்டு இருக்கிறார்.
இந்தியச் சட்டங்களைக் கொஞ்சம் கூட மதிக்காமல் ,சட்டங்களைத் தூக்கி காலி போட்டு மிதித்துக் கொண்டு இருக்கும் மாநில முதலமைச்சர்களிலிருந்து பாரதப் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் எல்லாம் அம்பேத்கருக்கு மாலை போட்டு மரியாதை செய்வதெல்லாம் அந்த அம்பேத்காரை அசிங்கப்படுத்துவது மாதிரிதானே
தமிழக இஸ்லாமியர்கள் ரமலான் அன்று பிரியாணி அவர்களுக்காகச் செய்கிறார்களோ இல்லையோ ஆனால் அவர்களின் மாற்று மத நண்பர்களுக்காகச் செய்யத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை
பட்டுப்புடவையைக் கட்டும் பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குத் தோன்றுவது இதுதான்.. பெண்கள் தங்கள் அழகைக் காட்டுவதற்குப் பதிலாக தாங்கள் கட்டிய புடவையின் மதிப்பைக் காட்டுவதற்காகவே கட்டுகிறார்கள் என்ற எண்ணம்தான் வருகிறது.. உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை இந்த பதிவு உங்கள் கண்களில் பட்டால் சொல்லிச் செல்லுங்கள்
எந்த #மதமும் சரி #சாதியும் சரி இவைகள் #பெண்களுக்கு ஆதரவாக இருந்தது இல்லை ஆனால் இந்த இரண்டையும் அடுத்த தலைமுறைகளுக்குத் தொடரச் செய்வது பெண்களாகவே இருக்கிறார்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
முடிவில் சொன்னது 100% உண்மை...
ReplyDelete